ரூ. 7,999 முதல் புதிய டிவி வாங்கலாம்..டிவி டேஸ் சேல்ஸ் விற்பனையில் கிடைக்கும் கோடக் ஸ்மார்ட் டிவிகள்..
கோடக் எச்டி எல்இடி டிவிகள் டிவி டேஸ் சேல்ஸ் விற்பனைக்கு வருகிறது. இதற்காக கோடக் நிறுவனம் பிளிப்கார்ட்டுடன் கூட்டு சேர்ந்துள்ளன, மேலும் கோடக் CA மற்றும் 7XPRO சீரிஸ் டிவிகளை சிறந்த சலுகையின் கீழ் நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த விற்பனையின் போது நீங்கள் ரூ. 7,999 முதல் புதிய டிவி வாங்கலாம். இந்த விற்பனை பிப்ரவரி 6 முதல் தொடங்கி பிப்ரவரி 9 வரை நடைபெறுகிறது.

கோடக் சிஏ தொடர்கள் பேசல் லெஸ் டிஸைனுடன், 4 கே எச்டிஆர் 10 டிஸ்ப்ளே, டால்பி விஷன், டால்பி டிஜிட்டல் பிளஸ் மற்றும் டிடிஎஸ் ட்ரூசரவுண்ட் போன்ற அற்புதமான அம்சங்களைக் கொண்டுள்ளது. இது யூ.எஸ்.பி 2.0, எச்.டி.எம்.ஐ ஏ.ஆர்.சி / சி.இ.சி மற்றும் புளூடூத் 5.0 உடன் பல இணைப்பு விருப்பங்களைக் கொண்டுள்ளது. இது Android 10 உடன் கூகிள் அசிஸ்டன்ட் அணுகலையும் வழங்குகிறது.
கோடக் 24HDX100S டிவி மாடல் ரூ .7,999 க்கும், 32HDX900s டிவி ரூ .11,399 க்கும், 32HDX7XPRO டிவி ரூ .13,499 க்கும், 40FHDX7XPRO டிவி ரூ .18,499 க்கும், 42FHDX7XPRO டிவி ரூ .19,999 க்கு , ரூ .28,499 க்கு 43CA2022 டிவி, ரூ .29,499 க்கு 50UHDX7XPRO டிவி, ரூ .33,499 க்கு 50CA7077 டிவி, 55UHDX7XPRO டிவி ரூ .35,499 மற்றும் 55CA0909 டிவி ரூ .37,499 க்கு இந்த விற்பனையின் மூலம் கிடைக்கிறது.
கோடக் 7 எக்ஸ்ப்ரோ தொடர் 1 ஜிபி ரேம் மற்றும் 8 ஜிபி ஸ்டோரேஜ் போன்ற அம்சங்களைக் கொண்ட அதிகாரப்பூர்வ ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் டிவிகள் ஆகும். அண்ட்ராய்டு 9 பை இயங்குதளத்துடன் குவாட் கோர் ARM கார்டெக்ஸ்- A53 CPU கள் மற்றும் மாலி-450MP3 GPU-களால் இயக்கப்படுகின்றது. புது ஸ்மார்ட் டிவியை குறைந்த விலையில் வாங்க இதான் நல்ல சான்ஸ்.


Click it and Unblock the Notifications