Home
News

ரூ.10,000 விலையில் முதல் Smart TV! 75' இன்ச் மாடல் விலையே இவ்வளவு கம்மி-ஆ! என்னப்பா சொல்றீங்க?

கோடாக் நிறுவனம் புதிதாக 3 ஸ்மார்ட் டிவி மாடல்களை அறிமுகம் செய்துள்ளது. மலிவு விலை முதல் பிரீமியம் செக்மென்ட் வரையில் பல ஸ்மார்ட் டிவி மாடல்களை நிறுவனம் அறிமுகம் செய்து, இந்திய மக்களின் கவனத்தை கவர்ந்துள்ளது. இந்த டிவிகளின் விலையை பார்க்கலாம்.

கோடாக் (KODAK) நிறுவனம், Kodak 9XPRO TV சீரிஸ், Kodak CA PRO சீரிஸ், Kodak 75-inch 4K QLED TV ஆகிய மாடல்களை அறிமுகம் செய்துள்ளது. இதில் Kodak 9XPRO TV சீரிஸ் இன் கீழ், 32' இன்ச், 40' இன்ச், 42' இன்ச் மற்றும் 43' இன்ச் ஆகிய மாடல்களுடன் வருகிறது. அதேபோல், Kodak CA PRO சீரிஸ் வரிசையில், 50' இன்ச், 55' இன்ச் மற்றும் 65' இன்ச் மாடல்களை அறிமுகம் செய்துள்ளது.

ரூ.10,000 விலையில் முதல் Smart TV! 75' இன்ச் மாடல் விலையே கம்மி-ஆ!

இறுதியாக, நிறுவனம் மிக பெரிய டிஸ்பிளே கொண்ட மாடலாக Kodak 75-inch 4K QLED TV மாடலை 75' இன்ச் மாடலாக அறிமுகம் செய்துள்ளது. Kodak 9XPRO TV சீரிஸ் சாதனம் ARM Cortex A55x4 Realtek சிப்செட் உடன், டால்பி டிஜிட்டல் சவுண்ட், 30W ஸ்பீக்கர், இன்பில்ட் Netflix, கூகுள் அசிஸ்டன்ட் (Google Assistant), குரோம்கேஸ்ட் (Chromecast), ப்ளூடூத் 5.0 (Bluetooth 5.0) போன்ற அம்சங்களுடன் வருகிறது.

இது 1GB RAM மற்றும் 8GB RAM கொண்டு ஆண்ட்ராய்டு 11 இல் இயங்குகிறது. மறுபுறம், Kodak CA PRO சீரிஸ் Smart tv-கள் 50, 55 மற்றும் 65 இன்ச் கூகுள் டிவி மாடல்களாக 4K UHD டிஸ்ப்ளேவுடன் வருகின்றன. இத்துடன் கூகுள் அசிஸ்டண்ட், குரோம்கேஸ்ட் மற்றும் YouTube போன்ற அம்சங்களை ஆதரிக்கிறது. GOOGLE கிளாஸ்ரூம் போன்ற ஆப்ஸ்களையும் இது கொண்டுள்ளது. முன்பு கூறப்பட்ட மாடல்களில் உள்ள அணைத்து அம்சங்களும் இதிலும் உள்ளது.

இறுதியாக, KODAK 75' இன்ச் 4K QLED TV (75MT5044) மாடல் 1.1 பில்லியன் வண்ணங்கள், டிடிஎஸ் ட்ரூசரவுண்ட், (DTS TruSurround), டால்பி (Dolby MS12), HDR10+ அம்சத்துடன் வருகிறது. இது 2GB ரேம் மற்றும் 16GB இன்டெர்னல் ஸ்டோரேஜ் ஆகியவற்றைக் கொண்ட QLED 4K டிஸ்ப்ளேவுடன் வருகிறது. இது 1000+ ஆப்ஸ்களை ஆதரிக்கிறது. டால்பி அட்மாஸ், டால்பி டிஜிட்டல் பிளஸ் மற்றும் டால்பி விஷன் அம்சத்தையும் ஆதரிக்கிறது.

இந்த 3 மாடல்களின் விலை பற்றி பார்க்கையில், Kodak 9XPRO டிவி தொடரில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள 32' இன்ச் ஸ்மார்ட் டிவி மாடலின் விலை ரூ.10,499 ஆக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதேபோல், இதன் 40″ இன்ச் ஸ்மார்ட் டிவி மாடல் ரூ.16,499 விலையிலும், 42″ இன்ச் மாடல் ரூ.16,999 விலையிலும் விற்பனைக்கு வந்துள்ளது. இதன் ஹை-வேரியண்ட் மாடலான 43″ இன்ச் ஸ்மார்ட் டிவியின் விலை ரூ.17,999 மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது.

Kodak CAPRO Google TV மாடலின் கீழ் 50″ இன்ச் மாடலின் விலை ரூ.27,999 என்றும், இதன் 55″ இன்ச் ரூ.29,999 என்ற விலையிலும், இதன் 65″ இன்ச் மாடலின் விலை ரூ. 43,999 என்ற விலையிலும், கிடைக்குமென்று நிறுவனம் அறிவித்துள்ளது. இறுதியாக, Kodak 4K QLED Matrix சீரிஸ் சாதனத்தின் விலை பற்றி பேசுகையில், இது 75″ இன்ச் அளவு கொண்ட ஸ்மார்ட் டிவி ரூ.98,888 என்ற விலையில் அறிமுகமாகிறது.

Best Mobiles in India

English summary
Kodak 9XPRO TV and Kodak CA PRO series Google Tv Price and Specification Details
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X