Home
News

கூகுள் பே, போன்பே யூஸ் பண்றீங்களா? இந்த 5 விஷயத்தை கட்டாயம் தெரிஞ்சிக்கோங்க.!

போன்பே, கூகுள் பே உள்ளிட்ட செயலிகளை மக்கள் அதிக பயன்படுத்தி வருகின்றனர். குறிப்பாக நகரங்கள் துவங்கி உள்ளூர் சந்தைகள் வரை அனைத்து இடங்களிலும் டிஜிட்டல் பரிவர்த்தனையை மக்கள் ஆதரிக்கத் துவங்கியுள்ளனர். மேலும் இந்த செயலிகள் புதிய புதிய அம்சங்களையும் வழங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

அதேபோல் UPI ID, மொபைல் எண் அல்லது QR கோட் மூலமாக சுலபமான முறையில் ரோட்டுக்கடை, பெட்டிக்கடை முதல் பெரிய பெரிய வர்த்தக வளாகங்கள் வரை அனைத்திலும் பணம் செலுத்த முடிகிறது. குறிப்பாக அதிகமாகப் பணம் புழங்கும் இடமாக மாறிவிட்ட இந்த யூபிஐ பரிவர்த்தனைகளில் சில சமயம் மோசடி நடக்கவும் அதிக வாய்ப்பு உள்ளது.

கூகுள் பே, போன்பே யூஸ் பண்றீங்களா? 5 விஷயத்தை கட்டாயம் தெரிஞ்சிக்கோங்க

எனவே இந்த செயலிகளை நாம் எப்போது கவனமாகக் கையாள வேண்டும். குறிப்பாக சில நேரங்களில் மோசடி நடக்கிறது என்பதற்காக நாம் அதனை முழுமையாக ஒதுக்கி வைக்க முடியாது. அனைத்து நேரங்களிலும் இந்த செயலிகளைப் பாதுகாப்பாகவும் உஷாராகவும் பயன்படுத்தினாலே போதும். இப்போது இந்த செயலிகளைப் பாதுகாப்பாகப் பயன்படுத்துவது எப்படி என்று பார்ப்போம்.

வங்கி கணக்கு: முதலில் உங்களது கூகுள் பே, போன்பே கணக்குகள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்றால், உங்களது வங்கிக் கணக்கை சரியான பாதுகாப்பான முறையில் பயன்படுத்த வேண்டும். அதாவது உங்களது சேமிப்புக்கு என தனி வங்கிக்கணக்கை வைத்துக்கொள்ளுங்கள். குறிப்பாக சேமிப்புக்கு பயன்படுத்தும் வங்கி கணக்குக்கு போன்பே, கூகுள்பே போன்ற யூபிஐகளுடன் இணைக்கப்படாமல் இருப்பது நல்லது. மேலும் ஏடிஎம் கார்டு இருந்தாலே போதும். பணம் தேவை என்றால் ஏடிஎம் பயன்படுத்துவது நல்லது.

பெரிய தொகை: அதேபோல் யூபிஐ பரிவர்த்தனைக்கு என்று தனி வங்கிகணக்கை வைத்துக்கொள்ளுங்கள். குறிப்பாக உங்களது சேமிப்பு என்ற பணம் தனியாக இருக்கும் பெட்டிக்குள் இருப்பதுபோல தனி அக்கவுண்டில் இருக்க வேண்டும். பின்பு உங்களது மாத செலவு எவ்வளவு இருக்கும் என்பது சரியாக உங்களுக்குத் தெரியும். அதற்கு தகுந்தபடி யூபிஐக்கு தனி அக்கவுண்டில் பணத்தை போட்டுக்கொண்டு பயன்படுத்துவது நல்லது. தினசரி பரிமாற்றத்துக்கு இப்படித் தனி கணக்கு இருந்தால் ஏதேனும் மோசடி சிக்கல் என்றால் கூட பெரிய தொகைக்குச் சிக்கல் வராது என்பது குறிப்பிடத்தக்கது.

கூகுள் பே, போன்பே யூஸ் பண்றீங்களா? 5 விஷயத்தை கட்டாயம் தெரிஞ்சிக்கோங்க

QR ஸ்கேனர்: மேலும் கூகுள் பே, போன்பே பயன்படுத்தும் மக்கள் UPI பின்னை எப்போதுமே ரகசியமாக வைத்துக்கொள்ள வேண்டும். குறிப்பாக இதை வேறு யாருடனும் பகிர கூடாது. அதேபோல் யூபிஐ முக்கிய ஆப்ஷனாக இருக்கும் QR ஸ்கேனை பணத்தை செலுத்த மட்டுமே பயன்படுத்த வேண்டும். பணத்தைப் பெற QR ஸ்கேன் செய்ய தேவையில்லை என்பது மிக முக்கியம்.

பெயர் முக்கியம்: குறிப்பாக நீங்கள் யாருக்காவது பணத்தை செலுத்துகிறீர்கள் என்றால் அவரின் பெயரை சரிபார்த்து அதன்பின்னர் அனுப்பவும். குறிப்பாக பெயரை உறுதி செய்யாமல் மற்றவருக்குப் பணம் அனுப்புவது கண்டிப்பாக ஆபத்தானது. மேலும் உங்களது கணக்கில் இருந்து பணத்தை மற்றொருவருக்கு அனுப்ப மட்டும் UPI பின்னை பதிவிட வேண்டும். மற்றொருவரிடம் இருந்து பணத்தைப் பெற UPI பின்னை பதிவிட வேண்டியதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

கூகுள் பே, போன்பே யூஸ் பண்றீங்களா? 5 விஷயத்தை கட்டாயம் தெரிஞ்சிக்கோங்க

தேவையற்ற ஆப்ஸ்கள்: அதேபோல் உங்களது போன்களில் தேவையற்ற ஆப்ஸ்களை இன்ஸ்டால் செய்வதை தவிர்க்க வேண்டும். பின்பு ஏதேனும் ஆப்ஸ்களை இன்ஸ்டால் செய்யுமாறு உங்களது போனுக்கு எதாவது எஸ்எம்எஸ் வந்தால் அதனைக் கண்டிப்பாகத் தவிர்க்க வேண்டும். குறிப்பாக இந்த யூபிஐ பரிவர்த்தனையில் எப்போதுமே கவனமாக இருக்க வேண்டும்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Know these 5 security tips before making payments online : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X