Home
News

இனி Mobile மூலம் உதட்டு முத்தத்தை பரிமாறலாமா? கடுப்பில் சிங்கிள்ஸ்..குஷியில் காதலர்கள்!

காதலுக்கு கண் இல்லை என்பார்கள்.. மெரினாவில், சுட்டெரிக்கும் சூரியனுக்கு கீழ் அமர்ந்திருக்கும் காதலர்களை பார்த்து, காதலுக்கு சுரணை இல்லை என்றார்கள்.. ஆனால், காதலர்களுக்கு வேறொரு கவலை மட்டுமே இருந்துவந்தது. எல்லா நேரங்களிலும் அவர்களை அன்னியோன்னியமாக இணைக்க உதவும் ஒரு பொருளை தேடி ஏங்கி வந்தனர்.

இந்த ஏக்கத்திற்கான விடை இப்போது கிடைத்துவிட்டது. அருகில் சந்தித்து காதல் செய்ய முடியாமல் தவிக்கும் காதல் ஜோடிகளுக்கான ஒரு பிரத்தியேக கிஸ்ஸிங் கேட்ஜெட் சாதனம் தற்பொழுது அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. கிஸ்ஸிங் கேட்ஜெட்டா? அப்படினா என்ன? இது என்ன செய்யும்? உண்மையாகவே, உங்கள் காதலர்/காதலி முத்தமிடுவது போலவே இந்த கேட்ஜெட் உங்களை உணர செய்யுமா? உதடுகள் விரியும் உண்மையைப் பார்க்கலாம் வாங்க.

இனி Mobile மூலம் உதட்டு முத்தத்தை பரிமாறலாமா? கடுப்பில் சிங்கிள்ஸ்!

நீண்ட தூர உறவில் இருக்கும் காதலர்களுக்கான கிஸ்ஸிங் டிவைஸ்.!

நீண்ட தூர உறவில் இருக்கும் ஜியாங் சோங்லி (Jiang Zhongli) என்பவர், தனது காதலியுடன் நெருக்கமாக இருக்க முடியவில்லை என்ற ஏக்கத்தில், என்ன செய்வதென்று புரியாமல் தவித்து வந்திருக்கிறார். ஒருவரையொருவர் பிரிந்து இருக்கும் போது நெருக்கத்தை பேணுவது கடினமாக இருந்ததாக அவர் கூறியுள்ளார். நீண்ட தூரம் காரணமாக, அவர்களின் தொடர்பு மொபைல் அழைப்புகள் வழியாக மட்டுமே இருந்ததாக வருத்தமாகத் தெரிவித்தார்.

இந்த நேரத்தில் தான் நீண்ட தூர தம்பதிகள் எதிர்கொள்ளும் சவால்களை சமாளிக்க Zhongli ஒரு புதுமையான தீர்வைக் கண்டுபிடித்திருக்கிறார். நீண்ட தூர உறவில் இருக்கும் தம்பதிகள் மற்றும் காதல் ஜோடிகளின் தேவையை பூர்த்தி செய்யும் விதமாக, மெய்நிகர் நெருக்கத்தை அதிகரிக்கும் மற்றும் உணரச் செய்யும் ஒரு புதுமையான சாதனத்தைக் கண்டுபிடிக்க வேண்டும் என்று அவர் முடிவு செய்ததாகக் கூறப்படுகிறது.

கிஸ்ஸிங் டிவைஸ்-ஆ! அப்படியென்றால் என்ன?

இந்த உந்துதலின் அடிப்படையில் தான், அவர் ஒரு கிஸ்ஸிங் கேட்ஜெட்டை உருவாக்கியுள்ளார். Zhongli இன் இந்த புதிய கண்டுபிடிப்பு இப்போது, சீன சமூக ஊடக வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த முத்தமிடும் சாதனம் கிஸ்ஸிங் டிவைஸ் (kissing device) என அழைக்கப்படுகிறது. சீனாவின் சாங்சோவில் உள்ள ஒரு பல்கலைக்கழகத்தின் கண்டுபிடிப்பு இதுவாகும். இது உங்கள் துணையின் நிஜ முத்தத்தை அப்படியே பிரதிபலிக்கிறது.

மொபைல் மூலம் நிஜ உதட்டு முத்தங்களை பரிமாறலாமா?

இது ஒரு மொபைல் கேட்ஜெட் ஆகும். இதை காதலர்கள் அவர்களின் மொபைல் போனில் இணைத்து முத்தமிட துவங்கலாம். இதில் கான்ட்ராப்ஷன் 'சிலிகான் லிப்ஸ்', பிரஷர் சென்சார்கள் மற்றும் ஆக்சுவேட்டர்கள் போன்றவை உள்ளது. இது பயனரின் உதடுகளின் அழுத்தம், இயக்கம் மற்றும் வெப்பநிலை ஆகியவற்றை அப்படியே மறுமுறையில் பிரதிபலிக்கும் திறன் கொண்டதாம். இந்த சாதனம் உங்கள் துணையின் உண்மையான முத்தத்தை அப்படியே பிரதிபலிக்கும் திறன் கொண்டது.

நீண்ட தூரக் காதல் ஜோடிகள் மற்றும் தம்பதிகள் "உண்மையான" உடல் நெருக்கத்தைப் பகிர்ந்து கொள்வதற்கான வழியாக இந்த முத்தமிடும் சாதனம் விளம்பரப்படுத்தப்படுகிறது. இந்தச் சாதனம் சீன சமூக ஊடகப் பயனர்களிடையே சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. முத்த இயக்கத்தைப் பிரதிபலிக்கும் இந்த சாதனத்தின் திறன் நீண்ட தூர உறவுகளில் உள்ள பலரின் ஆர்வத்தைத் தூண்டியுள்ளது. இப்போதே இதற்கு மவுசு அதிகரித்துவிட்டது.

இந்த கிஸ்ஸிங் டிவைஸ் கேட்ஜெட் எப்படி வேலை செய்கிறது?

ஒரு முத்தத்தை தங்கள் துணையுடன் பகிர்ந்துகொள்ள, பயனர்கள் அவர்களின் மொபைலில் ஒரு ஆப்ஸை பதிவிறக்கம் செய்து, கிஸ்ஸிங் டிவைஸை மொபைலின் சார்ஜிங் போர்ட்டில் செருக வேண்டும். தம்பதிகள் வீடியோ காலிங் அம்சத்தைத் துவங்கிய பின்னர், கிஸ்ஸிங் டிவைஸ் ஆப்ஸ் வழியாக முத்தங்களைப் பரிமாறலாம் என்று கூறப்படுகிறது. சிலிகான் உதடுகளை முத்தமிட துவங்கினால், மறுமுனையில் இருப்பவருக்கு முத்தம் பரிமாறப்படும்.

பல சமூக ஊடக பயனர்கள் இந்த சாதனத்தை வேடிக்கையான கண்டுபிடிப்பு என்று கூறினாலும், மற்றவர்கள் இதை ஒரு "கொச்சையான" கண்டுபிடிப்பு என்று கருத்துக்களைப் பதிவு செய்து வருகின்றனர். இன்னும் சிலர், இது குழந்தைகள் மற்றும் இளைஞர்களை சீரழிக்கும் என்றும் கவலை தெரிவித்துள்ளனர். சரி, இப்போது இந்த கிஸ்ஸிங் டிவைஸ் பற்றி உங்களுடைய கருத்து என்ன என்பதை எங்களுடன் கீழே கமெண்டில் பகிர்ந்துகொள்ளுங்கள்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Kissing Device Allows Remote Couples To Kiss Lips Through Mobile Phone
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X