அவசரப்பட்டியே குமாரு: Jio 5G ரீசார்ஜ் விலை மற்றும் வேகம் இதுதான்.. செக் பண்ணிட்டு 5ஜி போன் வாங்குங்க!

|

தேர்ந்தெடுக்கப்பட்ட போஸ்ட்பெய்ட் திட்டங்களில் Jio 5G welcome சலுகை வழங்கப்படுகிறது. இந்த திட்டங்களில் வரம்பற்ற அழைப்பு, OTT நன்மைகள் உள்ளிட்டவைகள் உடன் 5ஜி டேட்டா வழங்கப்படுகிறது. தேர்ந்தெடுக்கப்பட்ட போஸ்ட்பெய்ட் திட்டங்களில் மட்டும் வரம்பற்ற 5ஜி டேட்டாவை வழங்க Jio 5G welcome ஆஃபரை அறிவித்துள்ளது என்பது கவனிக்கத்தக்க ஒன்று.

ரிலையன்ஸ் ஜியோ 5ஜி சேவை

ரிலையன்ஸ் ஜியோ 5ஜி சேவை

ரிலையன்ஸ் ஜியோ இந்தியாவில் 5ஜி சேவையை வழங்கத் தொடங்கி இருக்கிறது. ஆரம்பக் கட்டமாக டெலிகாம் நிறுவனம் 4 இந்திய நகரங்களில் 5ஜி இணைப்பை வழங்குகிறது. அது டெல்லி, மும்பை, கொல்கத்தா மற்றும் வாரணாசி ஆகும்.

4 நகரங்களில் தானே நமக்கெல்லாம் கிடைக்க தாமதம் ஆகும் என்று எண்ணிவிட வேண்டாம். ஜியோவை நம்ப முடியாது, திடீரென அதிரடி நடவடிக்கையில் இறங்கி பெரும்பாலான பகுதிகளில் 5ஜி சேவையை அறிமுகம் செய்துவிடும். அதேபோல் 2023க்குள் இந்தியா முழுவதும் 5ஜி சேவை கிடைக்கும் என ஜியோ அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறது.

5ஜி போன் என்பது மிக கட்டாயம்

5ஜி போன் என்பது மிக கட்டாயம்

ஜியோ 5ஜி சேவை பெறுவதற்கு புது சிம்கார்ட் எல்லாம் தேவையில்லை. தற்போது பயன்படுத்தும் 4ஜி சிம்கார்ட்டின் மூலமாகவே 5ஜி சேவையை பெறலாம். ஆனால் 5ஜி போன் என்பது மிக கட்டாயம் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். அனைத்து 5ஜி போனிலும் ஜியோ 5ஜி சேவைக் கிடைக்காது என்பதை நினைவில் கொள்ள வேண்டும். இந்த விவரத்தை பின் பார்க்கலாம். முதலில் ரீசார்ஜ் திட்ட விலைகள் குறித்த விவரங்களை பார்க்கலாம்.

ஜியோ அதிகாரப்பூர்வ அறிவிப்பு

ஜியோ அதிகாரப்பூர்வ அறிவிப்பு

உங்கள் போனில் ஜியோ 5ஜி இணைப்பு கிடைக்கும் என்று உறுதி செய்யப்பட்டிருந்தால், ஜியோ 5ஜி வெல்கம் ஆஃபருடனான ரீசார்ஜ் திட்டத்துக்கு நீங்கள் மேம்பட வேண்டும். ஜியோ பயனர்கள் ரீசாரஜ் திட்டத்தை மேம்படுத்தும் போது 1 ஜிபிபிஎஸ் வரையிலான வேகத்தில் 5ஜி டேட்டாவை அனுபவிக்க முடியும். போஸ்ட்பெய்ட் பயனர்கள் ரூ.239 அல்லது அதற்கு அதிகமான விலையுள்ள திட்டத்தை 5ஜி வெல்கம் ஆஃபரை பெற தேர்ந்தெடுக்க வேண்டும் என ஜியோ அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

1ஜிபிபிஎஸ் வேகத்தில் இணையம்

1ஜிபிபிஎஸ் வேகத்தில் இணையம்

ஜியோ போஸ்ட்பெய்ட் திட்டங்களில் 1ஜிபிபிஎஸ் வேகத்தில் இலவச 5ஜி டேட்டா வழங்கப்படுகிறது. அதனுடன் நீங்கள் இலவச OTT நன்மைகளையும் அனுபவிக்கலாம் அதை 5G வேகத்தில் ஸ்ட்ரீம் செய்யலாம். 5ஜி இணைய வேகம் கிடைக்கும் சில போஸ்ட்பெய்ட் திட்டங்கள் இங்கே தொகுத்து வழங்கப்பட்டுள்ளன.

ஜியோ ரூ.399 திட்டம்

ஜியோ ரூ.399 திட்டம்

5ஜி நெட்வொர்க் இணையானது 1 Gbpsக்கு அதிகமான வேகத்தில் டேட்டா வழங்கப்படுகிறது. இதில் தினசரி 100 எஸ்எம்எஸ், வரம்பற்ற குரல் அழைப்புகள் உள்ளிட்ட நன்மைகளும் கிடைக்கிறது. Netflix, Amazon Prime மற்றும் Disney+ Hotstar உள்ளிட்ட ஓடிடி சந்தா அணுகலும் இலவசமாக கிடைக்கிறது. 5ஜி வேகத்தில் ஸ்ட்ரீம் செய்யலாம்.

ஜியோ ரூ.599 திட்டம்

ஜியோ ரூ.599 திட்டம்

இந்த போஸ்ட்பெய்ட் திட்டமானது நெட்ஃபிளிக்ஸ், அமேசான் பிரைம் மற்றும் டிஸ்னி+ ஹாட்ஸ்டார் ஆகிய ஓடிடி சந்தா அணுகலை வழங்குகிறது. கூடுதலாக வரம்பற்ற குரல் அழைப்பு, தினசரி 100 எஸ்எம்எஸ் மற்றும் கூடுதல் ஜியோ சிம் ஆகிய நன்மைகளை வழங்குகிறது.

ஜியோ ரூ.799 திட்டம்

ஜியோ ரூ.799 திட்டம்

ஜியோ போஸ்ட்பெய்ட் திட்டத்தின் கீழ் ஜியோ வரம்பற்ற குரல் அழைப்புகள், தினசரி 100 எஸ்எம்எஸ் உள்ளிட்ட நன்மைகள் வழங்கப்படுகிறது. அதேபோல் இந்த திட்டத்தில் அமேசான் பிரைம், டிஸ்னி+ ஹாட்ஸ்டார் மற்றும் நெட்பிளிக்ஸ் ஆகிய ஓடிடி அணுகல்கள் இலவசமாக கிடைக்கிறது.

ஜியோ ரூ.999 திட்டம்

ஜியோ ரூ.999 திட்டம்

போஸ்ட்பெய்ட் திட்டமானது குடும்ப ரீசார்ஜ் திட்டமாகும். இதன் கீழ் 3 ஜியோ சிம்கள், வரம்பற்ற குரல் அழைப்புகள் மற்றும் தினசரி 100 எஸ்எம்எஸ் என பல நன்மைகள் வழங்கப்படுகிறது. அதேபோல் நெட்ஃபிளிக்ஸ், அமேசான் பிரைம் மற்றும் டிஸ்னி+ ஹாட்ஸ்டார் உள்ளிட்ட பல நன்மைகளை வழங்குகிறது.

இங்கே கிளிக் செய்யவும்இங்கே கிளிக் செய்யவும்

Best Mobiles in India

English summary
Kindly Check these Jio 5G Recharge Plan Price Before Buying 5G Smartphone

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X