ஆளும் அரசில் இருந்து வெளியேற்றப்பட்ட வட கொரிய தலைவர் கிம் ஜோங் யுன்-ன் சகோதரி.!

மேலும் கடந்த வாரம் நடைபெற்ற கட்சியின் முக்கிய கூட்டம் உள்பட வேறு எந்த உயர்மட்ட நிகழ்வுகளும் அவர் பங்கேற்கவில்லை.

|

வட கொரிய தலைவர் கிம் ஜோங் யுன்-ன் சகோதரியும்,அந்நாட்டின் மிகுந்த சக்திவாய்ந்த பெண்ணாக கருதப்படுபவருமான கிம் யோ ஜங், அவருக்கான ஆதரவு குறைந்துள்ளதால் வடகொரியாவின் ஆளுங்கட்சியின் உயர்மட்ட பொலிட்பீரோவில் இருந்து வெளியேற்றப்பட்டிருக்கலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஆளும் அரசில் இருந்து வெளியேற்றப்பட்ட  கிம் ஜோங் யுன்-ன் சகோதரி.!

வட கொரியாவின் ஆளும் தொழிலாளர்கள் கட்சியின் (WPK) உயர்மட்ட முடிவெடுக்கும் அமைப்பான பொலிட்பீரோவின் மாற்று உறுப்பினராக கிம் யோ ஜாங் பட்டியலிடப்படவில்லை. மேலும் கடந்த வாரம் நடைபெற்ற கட்சியின் முக்கிய கூட்டம் உள்பட வேறு எந்த உயர்மட்ட நிகழ்வுகளும் அவர் பங்கேற்கவில்லை.

உயர்மட்ட சட்டசபை அமர்வு

உயர்மட்ட சட்டசபை அமர்வு

பொலிட்பீரோவில் இருந்து அவர் வெளியேற்றப்பட்டதற்கான வெளிப்படையான சூழ்நிலைகள் யாவும் தெளிவாக இல்லை.

இருப்பினும் கிம் சில கட்சி கூட்டங்கள், உயர்மட்ட சட்டசபை அமர்வு, மற்றும் "புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட கட்சி மற்றும் மாநில முன்னணி உறுப்பினர்கள்" புகைப்படம் ஆகியவற்றில் காணப்படுவதால், அவர் கட்சியில் இருந்து முற்றிலும் வெளியேறிவிட்டதாக கூறமுடியாது என அந்நாட்டின் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

பொலிட்பீரோ

பொலிட்பீரோ

2017ஆம் ஆண்டு கொரிய தொழிலாளர்க கட்சியின் கொள்கைபரப்பு பிரிவின் தலைவராகவும், அக்கட்சியின் பொலிட்பீரோ மாற்று உறுப்பினராகவும் கிம் நியமிக்கப்பட்ட பின்னரே பிரபலமடைந்தார்.

"இளவரசி"

வடகொரியாவின் "இளவரசி" என கிம் பரவலாக குறிப்பிடப்படுகிறார். இப்பெயர் அவரின் தந்தையும் மற்றும் முன்னாள் தலைவருமான கிம் ஜோங் II ஆல் இவருக்கு இளம் வயதில் வழங்கப்பட்ட புனைப்பெயர் ஆகும்.

மெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப்

மெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப்

2018 ஆம் ஆண்டில் பியாங்சாங் குளிர்கால ஒலிம்பிக் உட்பட பல சர்வதேச நிகழ்வுகளுக்கு அவர் தனது சகோதரருடன் கலந்துகொண்டுள்ளார். மேலும் அங்கு அவர் அமெரிக்க துணை ஜனாதிபதி மைக் பென்ஸ்க்கு அடுத்ததாக அமர்ந்தார் மற்றும் கிம் ஜோங் யுன் இரண்டாவது முறையாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப்-ஐ இந்த பிப்ரவரி மாதம் சந்தித்தபோதும் அவர் உடனிருந்தார்.

 கிம் யோ ஜாங்

கிம் யோ ஜாங்

தென் கொரியாவின் யோனாப் செய்தி நிறுவனத்தின்படி, அடுத்த வாரம் நடைபெறவுள்ள ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் உடனான கிம் ஜோங் யுன்-ன் முதலாவது சந்திப்பில் இளவரசி கிம் யோ ஜாங் உடனிருப்பதாக என்பது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

Best Mobiles in India

English summary
Kim Jong Uns 30-ish sister who may have just been demoted : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X