துணிகளை விட தொழில் நுட்ப சாதனங்களை அதிகம் நேசிக்கும் குழந்தைகள்: ஆய்வு

By Super
|
துணிகளை விட தொழில் நுட்ப சாதனங்களை அதிகம் நேசிக்கும் குழந்தைகள்: ஆய்வு

40 சதவிகிதம் குழந்தைகள் துணிகளைவிட தொழில் நுட்பம் சார்ந்த எலக்ட்ரானிக் சாதனங்களுக்கு, அதிக முக்கியத்துவம் கொடுப்பதாக இபேட்ஸ் என்ற ஆன்லைன் ஷாப்பிங் வலைத்தளம் செய்த ஆய்வில் தெரிய வந்துள்ளது.

ஆன்லைன் ஷாப்பிங் வலைத்தளமான இபேட்ஸ் சமீபத்தில் நடத்திய ஆய்வொன்றில் 8ல் இருந்து 18 வயதுக்குட்பட்டவர்கள் துணிகளை விட தொழில் நுட்ப சாதனங்களுக்கு அதிக முக்கியத்தும் கொடுப்பதாக தெரிய வந்துள்ளது.

15 வயதிற்கு மேல் உள்ளவர்கள் கம்ப்யூட்டர், டேப்லட் மற்றும் ஸ்மார்ட்போன் போன்ற எலக்ட்ரானிக் சாதனங்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பது பெரிய விஷயமாக தெரியவில்லை. ஆனால் 8 வயதிலிருந்தே குழந்தைகள் எலக்ட்ரானிக் சாதனங்களை விரும்புவதாக தெரிகிறது.

இன்னும் தெளிவாக சொன்னால் குழந்தைகள் புது துணிகள், சாக்லேட், பொம்மை என்று கேட்டு அடம் பிடிப்பது இயல்பு தான். ஆனால் குழந்தை பருவத்திலேயே எலக்ட்ரானிக் சாதனம் வேண்டும் என்று அடம் பிடிக்கின்றனர் என்கிறது இபேட்ஸ் ஆன்லைன் ஷாப்பிங் வலைத்தளத்தின் ஆய்வு முடிவுகள்.

இது போல் ஒன்று, இரண்டு குழந்தைகள் அல்ல, கிட்டத்தட்ட 40 சதவிகதம் குழந்தைகள் தொழில் நுட்பம் சம்மந்தமான எலக்ட்ரானிக் சாதனங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து வருகின்றனர் என்ற இந்த தகவல் கொஞ்டம் பல்ஸ் ரேட்டை எகிற வைக்கிறது.

தொழில் நுட்ப சாதனங்களை பயன்படுத்துவதனால் நிறைய விஷயங்களை தெரிந்து கொள்ள முடியும் என்பது உண்மை தான். ஆனால் இந்த எலக்ட்ரானிக் சாதனத்தின் முன்பு எந்த நேரமும் இருப்பதனால், அனைவரும் எந்திரம் போலவே

நடந்து கொள்கின்றனர் என்பது போன்ற தகவல்களும் வெளியாகி வருகின்றன. இதனால் இனி வரும் தலைமுறை குழந்தைகள் மனிதர்களை விட, அதிகம் எலக்ட்ரானிக் சாதனங்களுக்கு

முக்கியத்துவம் கொடுக்கின்றனர் என்பது சற்று கசப்பான விஷயமாக தெரிகிறது. தொழில் நுட்பத்தில் எந்த நேரமும் இருந்தாலும், இதனால் குழந்தைகளின் மனோநிலை எந்திரம் மாறிவிடமால் பார்த்து கொள்வதில் பெற்றோர்கள் அதிக பொறுப்பில் இருக்கின்றனர் என்பதையும் நினைவுபடுத்த வேண்டி உள்ளது.

Best Mobiles in India

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X