Home
News

சிக்கனை சூடாக வைத்திருக்கும் அம்சத்தோடு KFC கேமிங் கன்சோல்!

கென்டக்கியை தளமாகக் கொண்ட பிரபல நிறுவனம் கேஎஃப்சி. கேஎஃப்சி உணவு உலகின் பல்வேறு நாடுகளில் பிரபலமடைந்தவை. பிரபல உணவு நிறுவனமான கேஎஃப்சி பிராண்ட் விளையாட்டாளர்களுக்கு புதிய கேம் கன்சோலை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த கேமிங் கன்சோல் ஆனது கேஎஃப்சி-ன் வறுத்த கோழியை சூடாக வைத்திருக்கக்கூடிய அம்சத்தோடு அறிமுகப்படுத்துகிறது.

வெப்பத்தை உருவாக்கும் கன்சோல்

வெப்பத்தை உருவாக்கும் கன்சோல்

கேமிங் கன்சோல்கள் வெப்பத்தை உருவாகுகிறது. கன்சோலின் கூறுகள் மூலம் உருவாக்கப்படும் வெப்பம் கோழி வைக்கும் இடத்தை சூடாக்க பயன்படுகிறது. அதேபோல் வெப்பத்தை கட்டுப்படுத்த பொதுவாக பயன்படுத்தப்படும் குளிரூட்டும் அம்சங்கள் உள்ளன.

தனிப்பயனாக்கப்பட்ட குளிரூட்டும் முறை

தனிப்பயனாக்கப்பட்ட குளிரூட்டும் முறை

கேமிங் கன்சோலானது ஒரு கோழி வைக்கும் அறையை உருவாக்கி அதை சூடாக்கும் முறையில் தயாரிக்கப்படுகிறது. மேலும் இதன் தனிப்பயனாக்கப்பட்ட குளிரூட்டும் முறை பிற சாதனங்களோடு ஒப்பிடமுடியாத வகையில் உள்ளது. கேஎஃப்சியின் புதிய சாதனம் விளையாட்டை விளையாடும்போது கேமிங் கன்சோலை வெப்பமயமாக்கும் தன்மையை கொண்டுள்ளது.

கூலர் மாஸ்டர் வடிவமைப்பு

கூலர் மாஸ்டர் வடிவமைப்பு

கேஎஃப்சியின் இந்த கன்சோல் தைவானிய கணினி வன்பொருள் உற்பத்தியாளரான கூலர் மாஸ்டரால் வடிவமைக்கப்பட்டுள்ளது. அதேபோல் இந்த புதிய கேமிங் கன்சோல் சிறந்த கேமிங் அனுபவத்தை வழங்கும். இது உணவை சூடாக வைத்திருக்கவும் உதவும் என கேஎஃப்சி செய்தி தொடர்பாளர் பிபிசியிடம் தெரிவித்தார்.

பல கேமிங் கன்சோல்கள் அறிமுகம்

கேஎஃப்சி இன் கேமிங் கன்சோலின் விலை குறித்த எந்த விவரமும் இதுவரை வெளியாகவில்லை. ஏணைய பிராண்டுகள் பல கேமிங் கன்சோல்களை அறிமுகம் செய்துவரும் நிலையில் கேஎஃப்சியின் கேமிங் கன்சோல் மாறுபட்ட சாதனமாக சந்தைக்கு வருகிறது.

கேஎஃப்சி கன்சோல் குறித்த தகவல்

கேஎஃப்சி கன்சோல் குறித்த தகவல்

கேஎஃப்சி கன்சோல் குறித்த தகவல் போலியானதாக இருக்கும் என்று கூறப்பட்டு வந்த நிலையில் இதுகுறித்த வீடியோவை டுவிட்டர் பக்கத்தில் நிறுவனம் பகிர்ந்துள்ளது. இதை 11 மில்லியனுக்கும் அதிகமானோர் பார்த்துள்ளனர்.

Best Mobiles in India

English summary
KFC Going to Launch a New Gaming Console With Chicken Warmer
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X