இந்தியாவில் சுந்தர் பிச்சை இதை தான் சொன்னார்!!

Written By:

சென்னையில் பிறந்த கூகுள் தலைமை நிர்வாக அதிகாரியான சுந்தர் பிச்சை புது தில்லியில் நடைபெற்ற கூகுள் இந்தியா விழாவில் சிறப்புரையாற்றினார். தனது உரையில் டிஜிட்டல் இந்தியா மற்றும் இந்திய வளக்ச்சி குறித்து பல அறிவிப்புகள் குறித்து பேசினார்.

பலூன் மூலம் இண்டர்நெட் வழங்கும் கூகுளின் ப்ராஜக்ட் லூன் குறித்து விரிவாக பேசியதோடு பல்வேறு திட்டங்கள் குறித்தும் தெரிவித்தார். அவ்வாறு சுந்தர் பிச்சை சிறப்புரையில் இடம்பெற்ற முக்கிய அறிவிப்புகளை இங்கு பார்ப்போம்.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
இலவச வை-பை

இலவச வை-பை

இரயில் வயர் எனும் திட்டத்தின் மூலம் இந்திய ரயில்வேயுடன் இணைந்து கூகுள் நிறுவனம் இலவச வை-பை வழங்க திட்டமிட்டுள்ளது.

ஆஃப்லைன் மேப்ஸ்

ஆஃப்லைன் மேப்ஸ்

கூகுள் மேப்ஸ் செயலியை இண்டர்நெட் இல்லாமல் பயன்படுத்த வழி செய்யும் ஆஃப்லைன் மோடு இந்தியர்கள் அதிகம் பயன்படுத்தி வருகின்றனர்.

யூட்யூப்

யூட்யூப்

ஆஃப்லைன் மேப்ஸ் சேவையை தொடர்ந்து யூட்யூப் ஆஃப்லைன் மோடு அறிவிக்கப்பட்டதோடு இதில் பல புதிய அப்டேட்கள் வழங்கப்பட இருக்கின்றது.

கூகுள் டிரான்ஸ்லேட்டர்

கூகுள் டிரான்ஸ்லேட்டர்

ஆண்ட்ராய்டு கருவிகளில் டேப் செய்தால் மொழி மாற்றம் செய்யும் டேப் டூ டிரான்ஸ்லேட் எனும் அம்சம் அடுத்த ஆண்டு வாக்கில் அறிமுகம் செய்யப்பட இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பயிற்சி

பயிற்சி

ஆண்ட்ராய்டு இயங்குதளத்தில் வளர்ச்சிக்காக சுமார் 20 லட்சம் ஆண்ட்ராய்டு டெவலப்பர்களுக்கு பயிற்சி அளிக்க இருப்பதாகவும் இதற்கென சுமார் 30 பல்கலைக்கழக்கங்களில் ஒப்பந்தம் மேற்கொள்ள இருப்பதாகவும் தெரிவித்தார்.

மொழி

மொழி

11 இந்திய மொழிகளில் இயங்கும் விர்ச்சுவல் ஆண்ட்ராய்டு கீபோர்டு ஒன்றை கூகுள் உருவாக்கியுள்ளதோடு இந்தியாவில் இணைய பக்கங்கள் எளிமையாகவும், வேகமாகவும் லோடு ஆகும் படி வடிவமைக்கப்பட்டுள்ளது.

கூகுள் கலாச்சார மையம்

கூகுள் கலாச்சார மையம்

கூகுள் கலாச்சார மையம் மற்றும் மேப்ஸ்களில் 250 இந்திய நினைவுச்சின்னங்களின் பானாரோமிக் புகைப்படங்கள் சேர்க்கப்பட இருப்பதோடு இதற்கென இந்திய கலாச்சாரம் மற்றும் இந்தியத் தொல்லியல் ஆய்வக அமைச்சகத்துடன் ஒப்பந்தம் மேற்கொள்ள இருக்கின்றது.

க்ரோம்பிட்

க்ரோம்பிட்

தொலைகாட்சியை கணினியாக மாற்றும் க்ரோம்பிட் கருவியை அறிமுகம் செய்ததோடு இந்த கருவி ஜனவரி 2016 முதல் இந்தியாவில் கிடைக்கும் என்றும் சுந்தர் பிச்சை தெரிவித்தார்.

முகநூல்

முகநூல்

மேலும் இது போன்ற தொழில்நுட்ப செய்திகளை முகநூலில் படிக்க தமிழ் கிஸ்பாட் முகநூல் பக்கம்.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
English summary
Read here in Tamil Some key points to note in Google CEO Sundar Pichai's Speech in India.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot