வச்ச கண்ண எடுக்கமாட்டிங்க- வகுப்பறையில் பிளறும் யானை, உறுமும் புலி: அசத்தும் கேரள பள்ளி!

|

கேரள பள்ளி ஒன்றில் மெய்நிகர் தொழில்நுட்பம் மூலம் பாடம் எடுக்கப்பட்டு வருவது சமூகவலைதளங்களில் பெரும் வைரலாகி வருகிறது.

மெய்நிகர் தொழில்நுட்பங்கள் மூலம் தத்ரூப உருவங்கள்

மெய்நிகர் தொழில்நுட்பங்கள் மூலம் தத்ரூப உருவங்கள்

கேரள மாநிலம் வலஞ்சேரி அருகே மூர்க்க நாட்டில் உள்ள AEM AUP பள்ளியில் புதிய தொழில்நுட்பத்தின் மூலம் ஆன்லைன் பாடம் எடுப்பது வரவேற்பை பெற்று வருகிறது. குழந்தைகள் எளிதில் வகுப்பை புரிந்துக் கொள்ள வேண்டும் என்ற நோக்கில் தத்ரூப உருவங்களை மெய்நிகர் தொழில்நுட்பங்கள் மூலம் காட்டப்படுகிறது.

ஆர்வத்தை தூண்டம் குழந்தைகள்

ஆர்வத்தை தூண்டம் குழந்தைகள்

ஆன்லைன் வகுப்பின் மூலம் மாணவர்கள் மன அழுத்தத்தை பெருகிறார்கள் போன்ற பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்தது. இதை போக்கி மாணாக்களை கவரும் வகையில் AEM AUP பள்ளியில் பணியாற்றும் சமூக அறிவியல் ஆசிரியர் ஷியாம் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி மெய்நிகர் தோற்றங்களை ஏற்படுத்தி குழந்தைகளுக்கு ஆச்சரியத்தையும் ஆர்வத்தையும் தோன்ற வைத்துள்ளார்.

ஆன்லைன் கற்றலில் புதிய சாத்தியங்கள்

ஆன்லைன் கற்றலில் புதிய சாத்தியங்கள்

ஆன்லைன் கற்றலில் புதிய சாத்தியங்களை பகிர்ந்து கொள்ளும் இந்த வகுப்புகள் சமூகவலைதளங்களில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. இந்த ஆன்லைன் வகுப்பில் சூரியன், பூமி, புலிகள், யானைகள் உள்ளிட்டவை தோன்றுகின்றன. மரங்கள் முளைக்கத் தொடங்குகின்றன. இதை பார்க்கும் மாணாக்களை வியப்படைய செய்கிறது.

யூடியூப் சேனல் மற்றும் வாட்ஸ்ஆப் குழுக்கள் மூலம் வகுப்புகள்

யூடியூப் சேனல் மற்றும் வாட்ஸ்ஆப் குழுக்கள் மூலம் வகுப்புகள்

பள்ளியின் யூடியூப் சேனல் மற்றும் வாட்ஸ்ஆப் குழுக்கள் மூலம் வகுப்புகள் குழந்தைகளுக்கு எடுக்கப்படுகின்றன. மாநிலத்தில் முதல் முறையாக, பொதுப் பள்ளி ஆக்மென்ட் ரியாலிட்டி குறித்த ஆன்லைன் வகுப்பு வீடியோவை அமைத்து வருகிறது. பள்ளியின் சமூக அறிவியல் ஆசிரியரான ஷியாம் ஆக்மென்ட் ரியாலிட்டி (ஏஆர்) அறிமுகப்படுத்தியதன் மூலம் புகழ் பெற்றுள்ளார்.

பூமி, சூரிய மண்டலம், விண்வெளி வீரர்கள் மற்றும் விண்கலங்கள்

பூமி, சூரிய மண்டலம், விண்வெளி வீரர்கள் மற்றும் விண்கலங்கள்

இதையடுத்து கேரளாவின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த பல பள்ளிகளும் ஆசிரியர்களும் இவரது உதவியை நாடத் தொடங்கினர். இதையடுத்து, சமூகஅறிவியல் ஆசிரியரான ஜெயஸ்ரீ பூமி, சூரிய மண்டலம், விண்வெளி வீரர்கள் மற்றும் விண்கலங்களை வகுப்பில் மெய்நிகர் காட்சிகளாக காண்பித்து கற்பிக்கத் தொடங்கினார்.

சமூகவலைதளங்களில் வைரலாகி வருவதோடு பாராட்டுகள்

சமூகவலைதளங்களில் வைரலாகி வருவதோடு பாராட்டுகள்

இந்தி ஆசிரியரான ப்ரீதா புலி, மாடு, பாம்பு போன்றவைகளை மெய்நிகர் ரியாலிட்டி மூலம் காட்டி கற்பித்துக் கொடுத்தார். இந்த வகுப்புகள் சமூகவலைதளங்களில் வைரலாகி வருவதோடு பாராட்டுகளையும் பெற்று வருகிறது.

Best Mobiles in India

English summary
Kerala uses Augmented reality for online classes

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X