Home
News

வாட்ஸ்ஆப்பில் பிழை : கண்டறிந்த கேரள சிறுவனை கவுரவித்த பேஸ்புக்!

கேரளாவைச் சேர்ந்த 19 வயது மாணவர் ஒருவர் உடனடி செய்தி பரிமாற்ற தளமான வாட்ஸ்ஆப்பில் உள்ள பிழையை கண்டறிந்து கூறியதற்காக பேஸ்புக் பேஸ்புக் நிறுவனத்தால் கவுரவிக்கப்பட்டுள்ளார். . பந்தனம்திட்டா மவுண்ட் சீயோன் பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரியில் இரண்டாம் ஆண்டு மாணவரான கே.எஸ். அனந்த்கிருஷ்ணன் இப்போது 94 பேர் இடம்பெற்றுள்ள பேஸ்புக் ஹால் ஆஃப் ஃபேம் பட்டியலில் இணைக்கப்பட்டுள்ளார். அத்துடன் $ 500 டாலர் பரிசுத்தொகையையும் வென்றுள்ளார்.

பிழையை கண்டறிந்ததற்காக விருது

பிழையை கண்டறிந்ததற்காக விருது

அனந்த்கிருஷ்ணன் வாட்ஸ்ஆப் செயலியில் நினைவக(மெமரி) பிரச்சனையை ஏற்படுத்தும் பிழையைப் கண்டறிந்து தெரிவித்துள்ளார். "இந்த பிழையின் மூலம், டிராக்கர்கள் பாதிக்கப்பட்டவர்களின் முழுத் தரவையும் நீக்கவோ அல்லது அழிக்கவோ முடியும். மார்ச் மாதம் இந்த பிழையை பற்றி நான் பேஸ்புக் நிறுவனத்திடம் தெரிவித்த நிலையில், மே மாதத்தில் இதற்காக விருது வழங்கப்பட்டது" என்று அனந்த்கிருஷ்ணன் கூறுகிறார்.

இணையதளம் வாயிலாக

இணையதளம் வாயிலாக

பேஸ்புக் அல்லது அதன் தொடர்புடைய தளங்களில் உள்ள பிழையை கண்டுபிடிக்கக்கூடிய யாராக இருந்தாலும், facebook.com/whitehat இணையதளம் வாயிலாக 'Report Vulnerability Form' மூலம் அந்நிறுவனத்திற்கு தெரிவிக்க முடியும் என விளக்குகிறார் அனந்த். " பொதுவாக 2-3 நாட்களில் அந்நிறுவனத்தின் குழு நம்மை தொடர்புகொள்ளும். அதன் பிறகு உங்களை ஆதாரத்தை சமர்ப்பிக்கும்படி கேட்டுகொண்டு, பின்னர் அதை அவர்கள் சரிசெய்வர்" என்கிறார்.

சைபர்செக்யூரிட்டி ஆர்வலரான அனந்த்கிருஷ்ணனின் ஆற்றல்

சைபர்செக்யூரிட்டி ஆர்வலரான அனந்த்கிருஷ்ணனின் ஆற்றல்

இளம் சைபர்செக்யூரிட்டி ஆர்வலரான அனந்த்கிருஷ்ணனின் ஆற்றல் மற்றும் திறமை அங்கீகரிக்கப்படுவது இது முதல்முறை இல்லை. "ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்னர் நான் கூகுளின் கௌரவபடுத்தப்பட்டவர்கள் பட்டியலில் குறிப்பிடப்பட்டேன். கூகுள் தளத்தில் உள்ள ஒரு பிழையைப் பற்றி தெரிவித்திருந்தேன். ஆனால் அது வெகுமதிக்கான அளவீட்டை பூர்த்திசெய்யவில்லை எனினும், கௌரவமானவர்கள் பட்டியலில் நான் குறிப்பிடப்பட்டேன்" என்கிறார் அனந்த்.

 சைபர் மற்றும் தகவல் பாதுகாப்பு துறை

சைபர் மற்றும் தகவல் பாதுகாப்பு துறை

அனந்த்கிருஷ்ணன் 12 வது வகுப்பில் இருந்தபோது, சைபர் மற்றும் தகவல் பாதுகாப்பு துறையில் நுழைந்தார். இந்த துறையில் கிடைக்கக்கூடிய பரந்த வாய்ப்புகள் காரணமாக இதில் நுழைந்ததாக கூறுகிறார்.கேரள போலிஸ்-ன் தொழில்நுட்ப ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையமான கேரள போலீஸ் சைபர்டோம்-ல் தன்னார்வலராக பணியாற்றுகிறார். இது தவிர தனியார் நிறுவனங்களுக்கான தனிப்பட்ட ஆலோசகராகவும் பணியாற்றுகிறார்.

பாரம்பரிய நடனக் கலை ஆசிரியர்

பாரம்பரிய நடனக் கலை ஆசிரியர்

இவரது தாய் ஒரு பாரம்பரிய நடனக் கலை ஆசிரியர் மற்றும் தந்தை செய்தி ஏஜெண்ட் ஆவார். எப்போதும் தனது குடும்பத்தினர் தன்னை ஆதரிக்கினறனர் என்று கூறும் அனந்த், எதிர்காலத்தில் தகவல் பாதுகாப்பு பிரிவில் பணியாற்ற விரும்புகிறார்.

 தனியுரிமை மீறல்

தனியுரிமை மீறல்

பாதுகாப்பு மற்றும் தனியுரிமை மீறல் குறித்த ஏராளமான புகார்களை சமூக வலைதள நிறுவனமான பேஸ்புக் சந்தித்தபோது, அன்ந்தகிருஷ்ணன் இதை கண்டறிந்தார். அனந்த்கிருஷ்ணன் கேரளாவில் இருந்து இப்பட்டியலில் இடம்பெற்ற இரண்டு பேரில் ஒருவராவார். இந்த சாதனை சிறுவனுக்கு கிஸ்பாட் தமிழ் தனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறது.

Best Mobiles in India

English summary
Kerala Student Honoured By Facebook For Reporting Bug On WhatsApp : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X