Home
News

திடீரென முதியவரின் பாக்கெட்டில் இருந்த மொபைல்போன் வெடித்து சிதறியது.! நடந்தது இதுதான்.. முழு விவரம்.!

கடந்த மூன்று வாரங்களுக்கு முன்பு கேரளாவில் செல்போன் வெடித்து சிறுமி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். இந்நிலையில் முதியவர் ஒருவரின் பாக்கெட்டில் கிடந்த செல்போன் வெடித்து சிதறிய சம்பவம் மீண்டும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இதுசார்ந்த தகவலை இப்போது சற்று விரிவாகப் பார்ப்போம்.

கேரள மாநிலம் திருச்சூர் மரோட்டிச்சாலில் பகுதியை சேர்ந்தவர் எலியாஸ் (76). இவர் அந்த பகுதியில் இருக்கும் ஒரு டீ கடையில், டீ குடிப்பதற்காகச் சென்றிருந்தார். கடையில் டீ சொல்லிவிட்டு அங்கிருந்த இருக்கையில் காத்திருக்கிறார். அப்போது அவரின் சட்டை பாக்கெட்டில் இருந்த செல்போன் திடீரென வெடித்து தீ பற்றியது.

திடீரென முதியவரின் பாக்கெட்டில் இருந்த மொபைல்போன் வெடித்து சிதறியது.!

குறிப்பாக இதில் அவரின் சட்டை பாக்கெட்டில் தீ பிடித்தது. பின்பு அங்கிருந்தவர்கள் அதிர்ச்சியான நிலையில், எலியாஸ் உடனடியாக எழுந்து பாக்கெட்டில் இருந்த செல்போனை கைகளால் தட்டிவிட்டார். மேலும் தீ எரிந்தபடியே செல்போன் கீழே விழுந்து சிறிதுநேரம் எரிந்தது. அதன்பின்பு சட்டை பாக்கெட்டில் எரிந்த தீயை கைகளால் தட்டி அணைந்தார் அந்த முதியவர்.

குறிப்பாக அந்த முதியவர் உள் பணியன் போட்டிருந்ததால் உடலில் பெரிய அளவில் தீ காயம் ஏற்படவில்லை. மேலும் முதியவரின் பாக்கெட்டில் கிடந்த மொபைல் வெடித்து எரியும் காட்சி டீக்கடையில் இருந்த சிசிடிவி கேமராவில் பதிவானது. அந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியானது.

முதியவர் எலியாஸின் பாக்கெட்டில் இருந்து வெடித்தது ஒரு பீச்சர் போன் என்று கூறப்படுகிறது. இந்த போனை ஒரு வருடத்திற்கு முன்பு ஆயிரம் ரூபாய்க்கு வாங்கியதாக எலியாஸ் தெரிவித்தார். மேலும் அந்த செல்போனுக்கு வாரண்டி இல்லை எனவும், உயிர் தப்பியது கடவுள் செயல் எனவும் எலியாஸ் அதிர்ச்சியுடன் தெரிவித்தார் எலியாஸ்.

அதேபோல் கடந்த மூன்று வாரங்களுக்கு முன்பு கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டம் பட்டிப்பறம்பு என்ற இடத்தில் இடத்தில் முன்னாள் பஞ்சாயத்து உறுப்பினர் அசோக் குமார் என்பவரின் மகள் ஆதித்யா ஶ்ரீ (8 வயது சிறுமி) மொபைல் போனில் வீடியோ பார்த்துக் கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக திடீரென மொபைல் போன் வெடித்துச் சிதறியதில், சிறுமி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

அதேபோல் போன் வெடிப்பதற்கான காரணம் என்னவென்றால். செல்போனில் இருக்கும் பேட்டரி மட்டும்தான். பேட்டரி சூடாகி பருமனாகி வெடித்து சிதறுகிறது. அப்போது செல்போனும் தானாக வெடிக்கிறது. பேட்டரி வெடிப்பதற்குக் காரணம், சார்ஜர் மட்டும்தான். ஒரு மொபைல் போனில் பொருத்தப்பட்டுள்ள பேட்டரியை பொருத்தே அதற்கான சார்ஜர் வழங்கப்படும்.

ஆனால் வேறு ஒருவரின் சார்ஜரை மாற்றிப் போடும் போது வோல்ட் சப்ளையில் மாற்றம் அடைகிறது. எடுத்துக்காட்டாக, குறைந்த எம்ஏஹெச் பவர் கொண்ட பேட்டரியில் அதிக வோல்ட் சப்ளை உள்ள சார்ஜர் போடும் போது பேட்டரி பருமன் அடையத் தொடங்குகிறது. இதனால் சார்ஜ் சரியாக நிக்காமல் அடிக்கடி பேட்டரி லோ ஆகும்.

திடீரென முதியவரின் பாக்கெட்டில் இருந்த மொபைல்போன் வெடித்து சிதறியது.!

அதன் காரணமாக மொபைல் போன் நீண்ட நேரமோ அல்லது இரவு முழுவதுமோ சார்ஜ் போடும் நிலை ஏற்படுகிறது. அப்படி பேட்டரி பருமன் அடைந்துக் கொண்டே வருகையில் ஒருகட்டத்தில் வெடித்து சிதறுகிறது. எனவே மொபைலுக்கு என்று வழங்கப்பட்ட சார்ஜரில் மட்டும் சார்ஜ் போடுவது மிகவும் நல்லது.

அதேபோல் குறைந்த விலை போன்களை தேர்வுசெய்வதை விட, போன்களில் இருக்கும் பாதுகாப்பு அம்சம், சிப்செட், பேட்டரி உள்ளிட்ட அனைத்து விஷயங்களையும் தெரிந்துகொண்டு அதன்பின்பு போன்களை வாங்குவது மிகவும் நல்லது. விலை சற்று உயர்வாக இருந்தாலும் நிறைய பாதுகாப்பு அம்சங்களை கொண்ட போன்களை வாங்குவது நல்லது.

மேலும் சார்ஜ் போட்டுக்கொண்ட போன் பேசுவது, வீடியோ பார்ப்பது, கேம் விளையாடுவது போன்ற அனைத்தையும் தவிர்க்க வேண்டும். அதாவது போனை முழுவதும் சார்ஜ் போட்ட பின்பு அதை எடுத்துப் பயன்படுத்து நல்லது. குறிப்பாக பேட்டரி சூடாவது தெரிந்தால் சிறிது நேரம் போனை ஆஃப் செய்து விடுவது நல்லது. அதேபோல் தேவையில்லாத நேரத்தில் மொபைல் டேட்டா ஆஃப் செய்து விடுவதும் நல்லது.

photo courtesy: indiatoday.in

More from GizBot

Best Mobiles in India

English summary
Kerala old man's mobile phone explodes in his pocket: The old man survived the fire!
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X