ஆர்டர் செய்ததோ ஐபோன் 12: ஆனால் வந்ததோ அடித்து துவைக்க பயன்படும் சோப்பும், 5 ரூபாய் நாணயமும்.!

|

மக்கள் ஆன்லைன் தளங்களில் பொருட்களை வாங்க அதிக ஆர்வம் காட்டுகின்றனர். குறிப்பாக இதுபோன்ற ஆன்லைன் தளங்களில் சில பொருட்கள் சலுகையுடன் கிடைப்பதால் பல ஆன்லைன் தளங்களுக்கு நல்ல வரவேற்பு உள்ளது. அதேபோல்
பண்டிகை காலம் என்பதால் பல்வேறு ஆன்லைன் தளங்களில் சிறப்பு சலுகையும் வழங்கப்படுகிறது.

இந்நிலையில் ஆன்லைனில் ஒருவர் ஐபோனை ஆர்டர் செய்தார். ஆனால் அதற்கு பதிலாக 5 ரூபாய் நாணயமும்ää ஒரு சோப்பு கட்டியும் வைக்கப்பட்டிருப்பதை கண்டு ஆர்டர் செய்தவர் அதிர்சி அடைந்தார். மேலும் இது குறித்த தகவலை சற்று விரிவாகப் பார்ப்போம்.

இந்நிலையில் ஆன்லைனில் ஒருவர் ஐபோனை ஆர்டர் செய்தார். ஆனால் அதற்கு பதிலாக 5 ரூபாய் நாணயமும், ஒரு சோப்பு கட்டியும் வைக்கப்பட்டிருப்பதை கண்டு ஆர்டர் செய்தவர் அதிர்சி அடைந்தார். மேலும் இது குறித்த தகவலை சற்று விரிவாகப் பார்ப்போம்.

 எர்ணாகுளத்தை சேர்ந்தவர் நூருல் அமீன்.

கேரள மாநிலம் எர்ணாகுளத்தை சேர்ந்தவர் நூருல் அமீன். இவர் கடந்தசில தினங்களுக்கு முன்பு ஆன்லைன் மூலம்ஆப்பிள் ஐபோன் 12 மாடல் வாங்க ஆர்டர் செய்திருந்தார். பின்பு டெலிவரிக்கு வந்த அந்த ஐபோன் பார்சலை பிரித்துப் பார்த்தநூருல் அமீன் அதிர்ச்சியடைந்தார்.

பன்றியின் சிறுநீரகத்தை மனிதனுக்கு பொருத்தி மருத்துவர்கள் சாதனை.. இது எப்படிச் சாத்தியமானது தெரியுமா?பன்றியின் சிறுநீரகத்தை மனிதனுக்கு பொருத்தி மருத்துவர்கள் சாதனை.. இது எப்படிச் சாத்தியமானது தெரியுமா?

த பார்சலில் ஐபோனுக்கு பதிலாக 5

அதாவது இந்த பார்சலில் ஐபோனுக்கு பதிலாக 5 ரூபாய் நாணயமும், சோப்புக் கட்டியும் வைக்கப்பட்டிருந்தது. எனவேஇதைதொடர்ந்து அவர் எடுத்த வீடியோ மூலம் சைபர் போலீசாரிடம் ஆதாரத்துடன் புகார் அளித்தார். மேலும் அந்த
பாக்ஸின் மேல் இருந்த ஐஎம்இஐ எண்ணை வைத்து சம்பந்தப்பட்ட இ-காமர்ஸ் வலைதளநிறுவனத்திடம் விசாரித்துள்ளனர்.

நினைத்துக்கூட பார்க்க முடியல: விண்கல் பூமியை தாக்கினால் என்ன செய்வது?- நாசா நிபுணர்கள் பதில்!நினைத்துக்கூட பார்க்க முடியல: விண்கல் பூமியை தாக்கினால் என்ன செய்வது?- நாசா நிபுணர்கள் பதில்!

குறிப்பிட்ட ஐஎம்இஐ எண் உள்ள

பின்பு அந்த விசாரணையில் குறிப்பிட்ட ஐஎம்இஐ எண் உள்ள மொபைல் போன் ஏற்கனவே விற்றுவிட்டதாகவும், ஜார்க்கண்ட்மாநிலத்தில் செப்படம்பர் மாதம் முதல் பயன்பாட்டில் இருப்பதும் தெரியவந்தது. அதன்பின்பு ஒருவழியாக நூருல் அமீனுக்கு அந்த மொபைலுக்கான தொகை முழுவதுமாக திருப்பியளிக்கப்பட்டது. மேலும் மொபைல் போன் மாடலுக்கு பதிலாக சோப்பை வைத்து அனுப்பியவர்கள் யார் என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருவதாக சைபர் க்ரைம் போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர்.

அவ்வளவு பாசம் அது மேலே: தெரிந்தே மொபைல்போனை விழுங்கிய இளைஞர்: அப்புறம் என்ன ஆச்சு!அவ்வளவு பாசம் அது மேலே: தெரிந்தே மொபைல்போனை விழுங்கிய இளைஞர்: அப்புறம் என்ன ஆச்சு!

சில வாரங்களுக்கு முன்பு சிம்ரன்பால்

இதேபோல் சில வாரங்களுக்கு முன்பு சிம்ரன்பால் சிங் என்பவர் பிளிப்கார்ட் தளத்தில் அறிவிக்கப்பட்ட ஆஃபர் மூலம் ஐபோன் ஒன்றை ரூ.51,000-க்கு ஆர்டர் செய்துள்ளார். குறிப்பாக நீண்ட நாட்களாக ஐபோன் வாங்கவேண்டும் என்ற கனவை தான் கஷ்டப்பட்டு சேர்ந்த பணம் மூலம் வாங்க நினைத்துள்ளார் சிம்ரன்பால் சிங் . அவர் ஆர்டர் செய்த பார்சலை பிளிப்கார்ட் டெலிவரி பாய் கொண்டு வந்து கொடுத்துள்ளார். பின்பு தன்னுடைய கனவு நினைவானதை பார்க்கும் வகையில் சிம்ரன்பால் தான் பார்சலை பிரிப்பதை
வீடியோ எடுக்கவும் சொல்லியுள்ளார். அந்த டெலிவரி பாய் அவர் சொன்னது போல வீடியோ எடுக்கும் போது அந்த பார்சலில் ஐபோனுக்கு பதிலாக இரண்டு பெரிய நிர்மா சோப்பு இருந்துள்ளது. இதைப் பார்த்த சிம்ரன்பால் அதிர்ச்சி அடைந்தார்.

உடனே உஷாரான சிம்ரன்பால் இதுதொடர்பாக வாடிக்கையாளர் சேவை மையத்தில் புகார் அளித்துள்ளார். பின்பு சிம்ரன்பாலின் புகாரை ஏற்றுக் கொண்ட பிளிப்கார்ட் நிறுவனம் ஒரு சில மணி நேரங்களில் அவர் கொடுத்த பணத்தை திரும்ப அளிப்பதாக உறுதி அளித்தது.
அதேபோல் ஆன்லைன் தளங்களில் விலை உயர்ந்த பொருட்களை அர்டர் செய்துவிட்டு பின்பு இந்த பொருள் வரும் போது அதை வீடியோவாக எடுப்பது மிகவும் நல்லது. குறிப்பபாக ஆன்லைன் பொருட்களை வாங்கும்போது கவனமாக இருக்க வேண்டும்.

News Source: indiatoday.in

Best Mobiles in India

English summary
Kerala man orders iPhone 12 got soap bar and 5 rupee coin instead : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X