Home
News

ஆன்லைனில் பாஸ்போர்ட் கவர் ஆர்டர் செய்த நபர்: கூடவே 'இதுவும்" வந்திருக்கு.!

ஆன்லைன் தளங்களில் பொருட்களை வாங்க மக்கள் அதிக ஆர்வம் காட்டுகின்றனர் என்று தான் கூறவேண்டும். குறிப்பாக சலுகை விலையில் பல பொருட்கள் கிடைப்பதால் இந்த ஆன்லைன் தளங்களை மக்கள் அதிகம் பயன்படுத்துகின்றனர்.

கூறவேண்டும் என்றால் கடை

இன்னும் சுருக்கமாக கூறவேண்டும் என்றால் கடை கடையாக ஏறி , தேடி அலைந்து வாங்கிய காலமெல்லாம்மலையேறிப் போய்விட்டது. இப்போது மக்கள் தங்கள் ஸ்மார்ட்போன் மூலம் தேவையான பொருட்களை ஆர்டர் செய்தால் போதும்வீட்டிற்கே கொண்டுவந்து தருகிறார்கள்.

ஆன்லைன் தளங்களில்

ஆனாலும் பிரபலமான ஆன்லைன் தளங்களில் சிலர் விலை குறைவாக இருப்பதை நம்பி வாங்கும்போது பிரச்சனையில்
மாட்டிக் கொள்கின்றனர். அதாவது ஆர்டர் செய்த பொருளுக்கு பதில் வேறொரு பொருள் கிடைப்பதும், செங்கல், கண்ணாடி
பாட்டில் எனவும், ஐபோனுக்கு பதிலாக சோப்பு வந்தது என செய்திகளை அண்மையில் படித்திருப்போம்.

ஆன்லைன் தளத்தில் பாஸ்போர்ட் கவரை ஆர்டர்

அதேபோல் ஆன்லைனில் பாஸ்போர்ட் கவர் ஆர்டர் செய்த கேரள வாலிபருக்கு ஒரிஜினல் பாஸ்போர்ட்டே வந்துள்ளது.மேலும் இதைப் பற்றி சற்று விரிவாகப் பார்ப்போம். அதாவது கேரளமாநிலம் வயநாட்டு மாவட்டத்தில் இருக்கும்
கனியம்பேட்டா என்ற பகுதியை சேர்ந்த மிதுன் பாபு கடந்த 30-ம் தேதி ஒரு ஆன்லைன் தளத்தில் பாஸ்போர்ட் கவரை ஆர்டர் செய்துள்ளார்.

பாஸ்போர்ட்டே வைத்து கொள்ளுங்கள்

பின்பு அவர் ஆர்டர் செய்த இரண்டு நாட்களில் அந்த பார்சல் வீட்டுக்கு வரவே ஆவலுடன் அதனை பிரித்து பார்த்தபோது அதிர்ச்சியடைந்துள்ளார். அதாவது பாஸ்போர்ட் கவருடன் சேர்த்து நிஜ பாஸ்போர்ட் ஒன்றும் இருந்துள்ளதை பார்த்து பாபு அதிர்ச்சியடைந்தார். சுருக்கமாக கூறவேண்டும் என்றால் பாஸ்போர்ட் கவர் மட்டுமா வேண்டுமா இந்தாங்க பாஸ்போர்ட்டே வைத்து கொள்ளுங்கள் என்று அனுப்பியுள்ளனர்.

ன்லைன் தளத்தின்

உடனே அந்த ஆன்லைன் தளத்தின் வாடிக்கையாளர் சேவை பிரிவினரை தொடர்பு கொண்ட மிதுன் பாது பாஸ்ட்போர்ட் கவருடன் சேர்ந்து நிஜ பாஸ்போர்ட் பார்சலில் வந்துள்ளது என தெரியப்படுத்தினார். ஆனால் அந்த வாடிக்கையாளர் சேவை பிரிவினர் கூறியது என்னவென்றால், உங்களுக்கு நேர்ந்தது போல மீண்டும் ஒரு முறை நடக்காது. இது தொடர்பாக விற்பனையாளரிடம் தெரியப்படுத்தி கவனமாக இருக்குமாறு கூறிவிடுவதாக சொல்லி வைத்துள்ளனர். ஆனால் அந்த பாஸ்போர்ட் என்ன செய்வது என்பது பற்றி அவர்கள் பொறுப்பான பதிலை கூறவில்லை.

 பாஸ்போர்டில் இரு

குறிப்பாக மிதுன் பாபுவுக்கு வந்த அந்த நிஜ பாஸ்போர்டில் இருந்த தகவலின்படி,அது திருச்சூர் மாவட்டத்தைச் சேர்ந்த முகமது சாலிஹ்
என்பவருடையது என்று கூறப்படுகிறது. மிதுன் பாபு விரைவில் அந்த பாஸ்ட்போர்ட் முகமதுவிடம் அளிக்கவிருக்கிறார்.

மிதுன் பாபுவுக்கு வந்த பாஸ்போர்ட்

அதேபோல் மிதுன் பாபுவுக்கு வந்த பாஸ்போர்ட் கவரை முதலில் முகமது சாலேஹ் ஆர்டர் செய்து பெற்றிருக்க வேண்டும். பின்பு அந்த கவரை சரிபார்ப்பதற்காக சாலேஹ் அதில் பொருத்திப் பார்த்துவிட்டு, அது அவருக்கு பிடிக்காததால் பாஸ்போர்டை எடுக்க மறந்து
கவருடன் சேர்த்து அந்த ஆன்லைன் தளத்திற்கு ரிடர்ன் செய்திருக்கிறார். பின்பு இந்த கவரை பெற்றுக்கொண்ட ஆன்லைன் தளம் அதனை சரிபார்காமலே மற்றொரு கவர் ஆர்டர் செய்த மிதுன் பாபுவுக்கு அனுப்பி வைத்திருக்க வேண்டும். இப்படி தான் அந்த பாஸ்ட்போர்ட் மிதுன் பாவுக்கு கிடைத்திருக்க வேண்டும்.

News Source: indiatoday

Best Mobiles in India

English summary
person who ordered the passport cover online also got the original passport: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X