கத்தார் அரச குடும்பத்தினரை ஏமாற்றி ரூ.5.6 கோடி சுருட்டிய கேரள நபர் கைது.!

கத்தார் நாட்டில் உள்ள மியூசியம் ஒன்றின் நிர்வாகிகளுக்கு கத்தார் நாட்டின் அரச குடும்பத்தினரின் இமெயில் போல் போலி இமெயில் உருவாக்கி அதன் மூலம் சுனில்மேனன் ஒரு மெயிலை அனுப்பியுள்ளார்.

|

கத்தார் நாட்டின் மன்னர் குடும்பத்தினரின் இமெயிலை கண்டுபிடித்து அதன்மூலம் போலி இமெயில் உருவாக்கி ரூ.5.6 கோடி ஏமாற்றிய கேரள நபர் ஒருவரை போலீசார் மைது செய்துள்ளனர்.

கத்தார் அரச குடும்பத்தினரை ஏமாற்றி ரூ.5.6 கோடி சுருட்டிய கேரள நபர்கைது

கத்தார் அரச குடும்பம் மற்றும் கத்தார் நாட்டின் மியூசித்தின் நிர்வாகிகள் கடந்த 13ஆம் தேதி கொடுத்த புகாரின் அடிப்படையில் கேரள சைபர் கிரைம் போலீசார் களத்தில் இறங்கிய ஏமாற்றிய நபரை கைது செய்துள்ளனர். இரண்டே நாட்களில் கத்தார் நாட்டில் இருந்து ஏமாற்றிய நபரின் வங்கி கணக்கை கண்டுபிடித்து அந்த கணக்கை முடக்கி வைத்துள்ளதாக சீனியர் போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

கேரளா

கேரளா

அரபு நாட்டில் இருந்து திரும்பி கேரளாவில் உள்ள திருச்சூரை சேர்ந்த 47 வயது சுனில் மேனன் என்பவர் தான் இந்த குற்றத்தை செய்துள்ளார் என்பது ஆதாரத்துடன் தெரிய வந்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். புதன்கிழமை கைது செய்யப்பட்ட சுனில்மேனன் நேற்று நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டார்.

போலி இமெயில்

போலி இமெயில்

இதுகுறித்து கொடுங்கலூர் காவல்துறை ஆய்வாளர் பிஜுகுமார் அவர்கள் கூறியபோது, 'கத்தார் நாட்டில் உள்ள மியூசியம் ஒன்றின் நிர்வாகிகளுக்கு கத்தார் நாட்டின் அரச குடும்பத்தினரின் இமெயில் போல் போலி இமெயில் உருவாக்கி அதன் மூலம் சுனில்மேனன் ஒரு மெயிலை அனுப்பியுள்ளார். அந்த மெயிலில் தன்னிடம் கத்தார் அரசரின் புகைப்படம் ஒன்று தங்கத்தால் பிரேம் போடப்பட்டு அழகிய வேலைப்பாடுகளுடன் இருப்பதாகவும், தன்னுடைய வங்கி கணக்கில் ரூ.5.6 கோடி டெபாசிட் செய்தால் அந்த புகைப்படத்தை அனுப்புவதாகவும் கூறியுள்ளார். இதனை நம்பிய மியூசியம் நிர்வாகிகள் அவர் குறிப்பிட்ட அந்த வங்கிக்கணக்கிற்கு பணத்தை அனுப்பியுள்ளனர்.

விசாரணை

விசாரணை

ஆனால் பணம் அனுப்பியும் குறிப்பிட்ட காலத்தில் அவர்கள் கூறிய அந்த புகைப்படம் வராததால் சந்தேகம் அடைந்த மியூசியம் நிர்வாகிகள் போலீசில் புகார் அளித்தனர். கத்தார் நாட்டின் போலீசார் இதுகுறித்து விசாரணை செய்தபோது கேரளாவில் உள்ள வங்கி ஒன்றுக்கு தான் அந்த பணம் சென்றுள்ளது என்பதை கண்டுபிடித்தனர். பின்னர் கேரள போலீசுக்கு கத்தார் போலீசார் கொடுத்த தகவலின் அடிப்படையில் கேரள சைபர் கிரம் போலீசார் இதுகுறித்து விசாரணை செய்து சுனில் மேனனை கைது செய்தனர்.

பெயிண்டிங்

பெயிண்டிங்

அவரிடம் நடத்திய விசாரணையில் அரபு நாடுகளில் ஒருசில வருடங்கள் ஆடிட்டராக வேலை செய்த சுனில்மேனன், ஆன்லைனில் பெயிண்டிங் வியாபாரமும் செய்துள்ளார். பின்னர் இந்தியா திரும்பியவுடன் அதே தொழிலை தொடர்ந்தாலும் போதுமான வருமானம் கிடைக்கவில்லை. இதனையடுத்து கத்தார் நாட்டின் அரச குடும்பத்தின் இமெயிலை கண்டுபிடித்து அமெரிக்க நிறுவனம் ஒன்றின் மூலம் டீல் செய்வது போல் முறைகேடு செய்துள்ளார். இந்த குற்ற சம்பவத்தில் மேலும் ஒருசிலரின் தொடர்பு இருப்பதாகவும் அவர்களையும் கண்டுபிடிக்கும் முயற்சியில் இருப்பதாகவும் காவல்துறை ஆய்வாளர் கூறியுள்லார்.

சுனில்மேனன்

சுனில்மேனன்

முறைகேடாக பெற்ற பணத்தில் சுனில்மேனன் ஒரு ஆடம்பர காரை வாங்கியது மட்டுமின்றி ரூ20 லட்ச ரூபாயை வட்டிக்கு கொடுத்துள்ளார் என்பதையும் போலீசார் விசாரணையில் இருந்து தெரிய வந்துள்ளது.

Best Mobiles in India

English summary
Kerala man held for cheating Qatar royal family of Rs 5 6 crore : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X