மாநில அரசு முடிவு: விஞ்ஞானி நம்பி நாராயணனுக்கு ரூ.1 கோடி இழப்பீடு., எதற்கு தெரியுமா?

|

இஸ்ரோ மையத்தில் அப்துல் கலாம் உள்ளிட்ட விஞ்ஞானிகள் பலரும் திட எரிபொருளைப் பயன்படுத்தி ராக்கெட் அனுப்பும் தொழில்நுட்பத்தw ஆய்வுசெய்தபோது, திரவ எரிபொருள் பயன்படுத்தி ராக்கெட் அனுப்பும் திட்டத்தை வடிவமைத்த முக்கியமான விஞ்ஞானி நம்பி நாராயணன் ஆவார். இந்த தொழில்நுட்ப திறமையின் காரணமாகவே, தற்போது பி.எஸ்.எல்.வி ரக உள்நாட்டு தயாரிப்பு ராக்கெட்டுகள் விண்ணில் செலுத்தப்படுகின்றன.

ரகசியங்களை விற்பனை செய்ததாக புகார்

ரகசியங்களை விற்பனை செய்ததாக புகார்

விஞ்ஞானி நம்பி நாராயணன், அந்நிய நாட்டிடம் பணம் பெற்றுக்கொண்டு ராக்கெட் தொழில்நுட்பங்கள் தொடர்பான ரகசியங்களை விற்பனை செய்ததாக, கடந்த 1994-ல் வழக்குத் தொடரப்பட்டது. இதையடுத்து நம்பிநாராயணன் கேரளா போலீஸாரால் கைதுசெய்யப்பட்டார்.

50 நாட்கள் சிறையில் அடைக்கப்பட்ட நம்பி நாராயணன்

50 நாட்கள் சிறையில் அடைக்கப்பட்ட நம்பி நாராயணன்

அவருடன் சேர்த்து சந்திரசேகரன், எஸ்.கே.ஷர்மா ஆகிய கான்ட்ராக்டர்கள் உள்ளிட்ட 6 பேர் கைதுசெய்யப்பட்டனர். நம்பி நாராயணன் 50 நாட்கள் சிறையில் அடைக்கப்பட்டார். இந்த வழக்குக்கு எந்த அடிப்படை ஆதாரமும் இல்லை என்பது தெரியவந்ததால். வழக்கிலிருந்து நம்பி நாராயணன் விடுவிக்கப்பட்டார். சிறையில் இருந்து வெளிவந்த நம்பிநாராயணனுக்கு முக்கிய பொறுப்புகள் எதுவும் வழங்கவில்லை. இந்த நிலையில் 2001-ம் ஆண்டு நம்பி நாராயணன் பணியிலிருந்து ஓய்வு பெற்றார்.

 ரூ.50 லட்சம் வழங்கிய கேரள அரசு

ரூ.50 லட்சம் வழங்கிய கேரள அரசு

தவறாக கைது செய்யப்பட்டு துன்புறுத்தப்பட்டதற்காக, நஷ்ட ஈடு கோரி சுப்ரீம் கோர்ட்டில் நம்பி நாராயணன் வழக்கு தொடர்ந்தார். அவருக்கு ரூ.50 லட்சம் வழங்க கடந்த ஆண்டு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது. அதன்படி, அவருக்கு ரூ.50 லட்சத்தை கேரள மாநில அரசு வழங்கியது.

ரூ.1 கோடியே 30 லட்சம் இழப்பீடு வழங்க முடிவு

ரூ.1 கோடியே 30 லட்சம் இழப்பீடு வழங்க முடிவு

இந்த நிலையில் இழப்பீட்டு தொகையை உயர்த்தி வழங்க உத்தரவிடக்கோரி, திருவனந்தபுரம் சப்-கோர்ட்டில் நம்பி நாராயணன் மனு தாக்கல் செய்தார். இந்நிலையில், அவருக்கு கூடுதலாக ரூ.1 கோடியே 30 லட்சம் இழப்பீடு வழங்க கேரள அமைச்சரவைக் கூட்டத்தில் கொள்கை அளவில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இந்த முடிவை சப்-கோர்ட்டில் தாக்கல் செய்து, கோர்ட்டு உத்தரவுக்கு ஏற்ப அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

Pic courtesy: Social Media

Best Mobiles in India

English summary
Kerala Govt Rs 1 Crore Compensation to scientist nambi narayanan

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X