தமிழக மக்கள் "இதெல்லாம்" கனவில் கூட நினைக்க கூடாது; கடைசி வரைக்கும் ஜியோ தான்.!

கேரள மாநிலம் அதன் நாட்டில் சுமார் 1000 இடங்களில் இலவச பொது வைஃபை ஹாட்ஸ்பாட்டை நிறுவ உள்ளது.

|

தனது மக்களுக்கு இணைய இணைப்பை வழங்கும் முனைப்பின்கீழ் பணியாற்றி வரும் மாநில அரசாங்கங்களுக்கு முன்னோடியாய் திகழும் வண்ணம் கேரள மாநிலம் அதன் நாட்டில் சுமார் 1000 இடங்களில் இலவச பொது வைஃபை ஹாட்ஸ்பாட்டை நிறுவ உள்ளது.

தமிழக மக்கள் இதெல்லாம் கனவில் கூட நினைக்க கூடாது; கடைசி வரை ஜியோ தான்!

#பியூச்சர்2018 என்கிற நிகழ்வில் கலந்து கொண்ட கேரளா முதல் அமைச்சர் பினராயி விஜயன், கேரளா மாநிலம் முழுவதும் 1,000 இலவச பொது வைஃபை ஹாட்ஸ்பாட்டுகளை அரசாங்கம் நிறுவும் என்று அறிவித்தார். இந்த ஹாட்ஸ்பாட்டுகள் சிஸ்கோ டெக்னாலஜி மூலம் இயக்கப்படும் மற்றும் கேரளா மாநில அளவில் அணுகக்கூடிய மிகப்பெரிய பொது வைஃபை நெட்வொர்க் ஆக இருக்கும் என்பதால், இது இந்திய அளவில் ஒரு முன்னோடி திட்டமாக அமையும் என்பதில் சந்தேகமே வேண்டாம்.

நெருக்கமாக வேலை செய்து வருகிறது.!

நெருக்கமாக வேலை செய்து வருகிறது.!

இந்த திட்டத்தின் கீழ் அமைக்கப்படும் ஹாட்ஸ்பாட்களானது பூங்காக்கள், நூலகங்கள் மற்றும் பிற பொது இடங்களில் நிறுவப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. நாட்டின் டிஜிடைடேஷனை விரிவுபடுத்தும் திட்டத்தின் ஒரு பகுதியான இந்த இலவச வைஃபை ஹாட்ஸ்பாட்டுகளை அமைக்கும் திட்டத்தின் கீழ், வயர்லெஸ் அணுகல் புள்ளிகள் சார்ந்த வைஃபை வன்பொருள் உருவாக்கும் பணிகளில், மாநில அரசாங்கமும், சிஸ்கோ நிறுவனமும் நெருக்கமாக வேலை செய்து வருகிறது.

படிப்படியான முறையின்கீழ் கட்டமைக்க உள்ளது.!

படிப்படியான முறையின்கீழ் கட்டமைக்க உள்ளது.!

இந்த திட்டத்தின் ஒரு பகுதியாகவும் மற்றும் கேரளாவின் டிஜிட்டல் உருமாற்றத்தை துரிதப்படுத்தும் நோக்கத்தின் கீழும், சிஸ்கோ நிறுவனம் இந்த வைஃபை நெட்வொர்க் ஹாட்ஸ்பாட்டுகளை படிப்படியான முறையின்கீழ் கட்டமைக்க உள்ளது. "கேரளாவின் டிஜிட்டல் உருமாற்றத்தை விரைவுபடுத்தும் ஒரு பகுதியாக சிஸ்கோ, வைஃபை வலையமைப்பை நிறுவுகிறது," என்று ஒரு ஊடக வெளியீடு தெரிவிக்கிறது.

இலவசப் பிராட்பேண்ட் அனுபவத்தைப் பெற முடியும்.!

இலவசப் பிராட்பேண்ட் அனுபவத்தைப் பெற முடியும்.!

பாரத்நெட் திட்டத்தின் கீழ், நாடெங்கிலும் பல இடங்களில் பொது வைஃபை ஹாட்ஸ்பாட்டுகளை இந்திய அரசாங்கம் அமைத்துள்ளதும் இங்கு குறிப்பிடத்தக்கது. இந்த ஹாட்ஸ்பாட்டுகளின் வழியாக பொதுமக்கள் இலவசப் பிராட்பேண்ட் அனுபவத்தைப் பெற முடியும்.

தெலுங்கானா அரசாங்கமும்.!

தெலுங்கானா அரசாங்கமும்.!

கேரளா மட்டுமின்றி தெலுங்கானா அரசாங்கமும் இதேபோன்றதொரு பொது பிராண்ட்பேண்ட் திட்டத்தில் வேலை செய்து வருவதும், விரைவில் அம்மாநிலம் பல்வேறு இடங்களில் வைஃபை ஹாட்ஸ்பாட்டுகளை அமைக்குமென்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
கடைசி வரைக்கும் ஜியோ தான்.!

Translate English to Tamil In your Mobile Easily (GIZBOT TAMIL)
கடைசி வரைக்கும் ஜியோ தான்.!

கடைசி வரைக்கும் ஜியோ தான்.!

இதெல்லாம் அறிந்த பின்னர், தமிழ்நாட்டு மக்களின் மனதில் "இதெல்லாம் கனவில் கூட நினைத்து பார்க்க கூடாது" என்கிற பிரபல நகைச்சுவை வசனம் தான் எழும்பும் என்பதை உணர முடிகிறது. கவலையை விடுங்க, இருக்கவே இருக்கு முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் ஜியோ, அப்படி சொல்லி மனதை தேற்றிக்கொள்ள வேண்டியது தான்.

Best Mobiles in India

English summary
Kerala Government to Set Up 1000 Free Public Wi-Fi Hotspots Across the State. Read more about this in Tamil GizBot.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X