மாநிலம் முழுவதும் இலவச அதிவேக இன்டெர்நெட்: அரசு அதிரடி அறிவிப்பு- பொதுமக்கள் உற்சாகம்!

|

மாநிலம் முழுவதும் இலவச அதிவேக இணைய சேவை ஏழை மக்கள் பயன்பெறும் வகையில் அறிமுகப்படுத்த இருப்பதாக கேரள அரசு அறிவித்துள்ளது.

விரைவில் இலவசமாக அதிவேக இணைய சேவை

விரைவில் இலவசமாக அதிவேக இணைய சேவை

கேரள மாநிலத்தில் உள்ள ஏழை மக்களுக்கு விரைவில் இலவசமாக அதிவேக இணைய சேவையை வழங்கப்போவதாக கேரள அரசு அறிவித்துள்ளது. கேரள ஆப்டிக் நெட்வொர்க் எனப்படும் திட்டத்தை அரசாங்கம் அறிமுகப்படுத்தி இருக்கிகறது. இந்த திட்டத்தின் மூலம் கேரளா ஏழை மக்களுக்கு இலவச இணைய சேவை வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.

கேரள ஆப்டிக் நெட்வொர்க்

கேரள ஆப்டிக் நெட்வொர்க்

K-FON எனப்படும் கேரள ஆப்டிக் நெட்வொர்க் திட்டமானது கேரள ஏழை மக்களுக்கு இலவச இணைய சேவை வழங்கும். கேரளாவை உலகின் முன்னணி தொழில்துறை, கல்வி மற்றும் சுற்றுலா தலமாக அபிவிருத்தி செய்வதற்கான அரசாங்கத்தின் முயற்சிகளுக்கு K-FON ஒரு பெரிய ஆதரவாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கேரளா முதலமைச்சர் பினராயி விஜயன்

கேரளா முதலமைச்சர் பினராயி விஜயன்

இந்த திட்டம் குறித்து கேரளா முதலமைச்சர் பினராயி விஜயன் கூறுகையில், இணைய சேவை குடிமகனின் அடிப்படை உரிமையாக அறிவித்த முதல் மாநிலம் கேரளா என தெரிவித்தார்.

மார்க் செயல் சுத்தப்படாது: கோபமடைந்த பேஸ்புக் ஊழியர்கள் வெளிநடப்பு- என்ன நடக்கிறது?மார்க் செயல் சுத்தப்படாது: கோபமடைந்த பேஸ்புக் ஊழியர்கள் வெளிநடப்பு- என்ன நடக்கிறது?

ஆப்டிகல் ஃபைபர் கேபிள்கள்

ஆப்டிகல் ஃபைபர் கேபிள்கள்

ஆப்டிகல் ஃபைபர் கேபிள்களானது கேஎஸ்இடி பதவிகளைப் பயன்படுத்தி மாநிலம் முழுவதும் பொருத்தும் பணி நடைபெற்று வருவதாகவும் அதேபோல் மருத்துவமனை, பள்ளி, அரசு அலுவலகம் உள்ளிட்ட பிற நிறுவனங்களும் இந்த சேவை வழங்கப்படும் எனவும் முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்தார்.

ஏழை மக்களுக்கு இலவச இணைய சேவை

ஏழை மக்களுக்கு இலவச இணைய சேவை

K-FON திட்டத்தின் மூலம் ஏழை மக்களுக்கு இலவச இணைய சேவையும் மற்றவர்களுக்கு மலிவு விலையை அதிவேக இணைய சேவையும் வழங்க முதற்கட்டமாக திட்டமிட்டுள்ளது.

டிசம்பர் 2020-க்குள் அறிமுகம்

டிசம்பர் 2020-க்குள் அறிமுகம்

ஊரடங்கின் காரணமாக இந்த திட்டத்தில் தாமதம் ஏற்பட்டு வருகிறது. இருப்பினும் BEL கூட்டமைப்பின் தலைவர், இந்த ஆண்டு டிசம்பருக்குள் இந்த திட்டம் முடிக்கப்பட்டு சேவைகள் வழங்கப்படும் என தெரிவித்துள்ளார் என பிடிஐ தெரிவித்துள்ளது. இதில் இந்த திட்டம் கேரளாவை தவிற இந்தியாவில் எந்த மாநிலத்திலும் செயல்படுத்தப்பட வில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

source: manoramaonline.com

Best Mobiles in India

English summary
kerala goverment going to introduced the free internet services for poor

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X