கேரள வெள்ள பாதிப்புக்கு அமேசான், பேடிஎம் மூலம் உதவலாம்.!
வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்களை கண்டறியவும், காணமல் பேனவர்கள் பற்றியும் அறிந்து கொள்ளவும், கூகுள் சார்பில் பெர்சன் பைன்டர் டூல் ஆக்டிவேட் செய்யப்பட்ட நிலையில், பேஸ்புக் தரப்பில் சேப்டி செக் எனேபிள் செ
கேரளாவில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக வெள்ளம் மற்றும் நிலச்சரிவு பாதிப்புகளில் சிக்கி இதுவரை 325 பேர் இறந்துள்ளனர். மேலும் ஏராளமானோர் வெள்ளத்தில் சிக்கியுள்ளதால், அவர்களை மீட்கும் பணிகள் நடந்து வருகிறது.

இந்நிலையில், வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள கேரள மக்களுக்கு அமேசான் ஆப் நிவாரணப் பொருட்களை வழங்கும் வகையில் தற்போது அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மேலும் பேடிஎம் ஏப்பிலும் பணம் செலுத்தலாம்.

தொழில் நுட்ப உதவி:
வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்களை கண்டறியவும், காணமல் பேனவர்கள் பற்றியும் அறிந்து கொள்ளவும், கூகுள் சார்பில் பெர்சன் பைன்டர் டூல் ஆக்டிவேட் செய்யப்பட்ட நிலையில், பேஸ்புக் தரப்பில் சேப்டி செக் எனேபிள் செய்யப்பட்டுள்ளது. இதுதவிர டெலிகாம் நிறுவனங்கள் சார்பில் இலவச சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

அசோன் உதவி:
அமேசான் இந்தியா சார்பில் வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ பிரத்யேக வலைப்பக்கத்தை துவங்கியுள்ளது. அசோன் இந்திய சார்பில் மாநில மற்றும் தேசியபேரிடர் மீட்பு குழுவினருடன் இணைந்து பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுகிறது. அமேசான் இந்தியா முகப்பு பக்கத்தில் கேரள வெள்ள பாதிப்புக்கு உதவக்கோரும் பேனரும் இடம் பெற்றுள்ளது.

தொண்டு நிறுவனங்கள்:
இதனை கிளிக் செய்தும், மூன்று தொண்டு நிறுவனங்களின் பட்டியில்கள் இடம் பெற்றுள்ளன. இதை தொடர்ந்து அதிக முக்கியத்துவம் வாய்ந்த பொருட்களும் பட்டியிடப்பட்டுள்ளன. இவற்றில் உணவு, பொருட்கள், அத்தியாவசிய பொருட்கள் உள்ளிட்டவை இடம் பெற்றிக்கின்றது. பொருட்களை கார்டில் சேர்த்து முகவரி பகுதியில் தொண்டு நிறுவன முகவரியை பதிவிட்டு பணம் செலுத்த வேண்டும்.

தொண்டு நிறுவனத்திடம் ஒப்படைக்கும் அமேசான்:
பணம் செலுத்தியதும் அமேசான் சார்பில் பொருட்கள் கேரளாவில் விநியோகம் செய்யப்படும். அங்கிருந்து தொண்டு நிறுவனங்களின் சார்பில் பாதிக்கப்பட்டவர்களுக்கு அவை ஒப்படைக்கப்படும்.

பேடிஎம் ஆப்:
பேடிஎம் ஆப் மூலம் கேரள வெள்ள நிவாரண நிதி செலுத்தும் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. பேடிஎம் ஆப்பை ஓப்பன் செய்தவுடன் அதில் வெள்ள நிவாரண நிதியை ஒதுக்க முடியும். மேலும், அது நேரடியாக கேரள முதல்வர் வெள்ள நிவாரண நிதி கணக்கில் போய் சேர்ந்து விடும்.


Click it and Unblock the Notifications