கேரள கல்லறைகளில் இடம்பெறும் QR கோடு.. இதில் மறைந்திருக்கும் ரகசியம் என்ன?
இப்போது உள்ள புதிய தொழில்நுட்பங்கள் மிகவும் பயனுள்ள வகையில் இருக்கிறது. அதுவும் மனிதர்களின் முக்கிய வேலைகளை எளிமையாகச் செய்து முடித்திட இந்த புதிய தொழில்நுட்பங்கள் மிகவும் உதவியாக இருக்கிறது. இந்நிலையில் கேரள கல்லறைகளில் க்யூஆர் கோடு நிறுவப்பட்டுள்ளது. தற்போது இதற்கான காரணத்தை இந்த பதிவில் சற்று விரிவாகப் பார்க்கலாம்.
கல்லறைகளில் க்யூஆர் கோடு
அதாவது மனிதர்கள், தாங்கள் மிகவும் விரும்பியவர்களின் நினைவுகளைப் பெட்டகத்தில் வைத்துப் பார்க்கவே விரும்புகிறார்கள். அப்படி ஒரு புதிய முயற்சியாகவே கேரள கல்லறைகளில் க்யூஆர் கோடு நிறுவப்பட்டுள்ளது. அதுவும் கேரளத்தில் உள்ள கல்லறைகளில் உலோகத்தில் ஆன க்யூஆர் கோடுகள் உருவாக்கப்பட்டு, பதிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக அந்த க்யூஆர் கோடு யாராவது தங்கள் ஸ்மார்ட்போனில் ஸ்கேன் செய்தால், அந்த கல்லறையில் இருக்கும் நபரின் வாழ்க்கை மற்றும் நினைவுகள் என அனைத்தையும் அறிந்துகொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. சமீபத்தில் இணையத்தில் வைரலான வீடியோவில், கல்லறைகளில் க்யூஆர் கோடு பதிவு செய்யப்பட்டிருப்பதும், அஞ்சலி செலுத்த செல்வோர் அந்த க்யூஆர் கோடு கோடுகளை ஸ்கேன் செய்து அந்த கல்லறையில் நல்லடக்கம் செய்யப்பட்டவரின் வாழ்க்கையைப் பற்றிய அனைத்து தகவல்களையும் தெரிந்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டது.
அதேபோல் கல்லறைகளில் க்யூஆர் கோடு ஸ்கேன் செய்தால் கல்லறையில் புதைக்கப்பட்டிருப்பவரின் பெயர், படங்கள், பிறப்பிடம் மற்றும் அவரது வாழ்க்கை விவரங்கள் அதில் இடம்பெற்றிருக்கும். குறிப்பாக இதனுடன் அவர்கள் வாழ்வில் நடந்த முக்கிய நிகழ்வுகள், கதைகள், குடும்பத்தின் விவரங்கள், வாழ்க்கைத் துணை, பிள்ளைகள், பேரன்கள் என அனைவரின் விவரங்களையும் சேர்த்துக் கொள்ளலாம் என்று கூறப்படுகிறது.
சுருக்கமாக கூறவேண்டும் என்றால் இது வெறும் கல்லறை அல்ல. நன்கு வாழ்ந்து மறைந்தவர்களின் கதைகள் வாழும் இடம் என்று இதனைச் சொல்லும் வகையில் அமைந்திருக்கிறது. ஆனாலும் இந்த புதிய முயற்சிக்குப் பல தரப்பிலிருந்தும் பல்வேறு கருத்துக்கள் எழுந்துள்ளன. சிலர் இந்த முயற்சிக்கு வரவேற்பு தெரிவித்திருந்தாலும், சிலர் எதிர்மறையான கருத்துக்களைப் பதிவிட்டிருக்கிறார்கள்.
ஜிமெயில் லாகின்:
மேலும் கடந்த மார்ச் மாதம் வெளியான அறிவிப்பில், ஜிமெயில் லாகின் செய்ய க்யூஆர் கோடு பயன்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. அதாவது இந்த ஜிமெயில் பயன்படுத்தும் பயனர்களுக்கு தங்களது கணக்கை பாதுகாப்பாக லாகின் செய்ய Two Factor Authentication முறையை கூகுள் நிறுவனம் நீண்ட காலமாக வழங்கி வருகிறது. அதுவும் இந்த முறையில் பயனர்கள் தங்களது யூசர் நேம் மற்றும் பாஸ்வேர்டை உள்ளீடு செய்த பின்பு SMS மூலம் வரும் ஆறு இலக்க குறியீட்டை உள்ளிடுவது மூலம் கணக்கை லாகின் செய்ய முடியும்.
இந்த முறை பாதுகாப்பானதாக இருந்தாலும் சில சமயங்களில் ஹேக்கர்கள் எஸ்எம்எஸ் சரிபார்ப்பு குறியீட்டை இடைமறித்து கணக்குகளை ஹேக் செய்ய வாய்ப்புகள் அதிகமாக இருப்பதாக சைபர் பாதுகாப்பு நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். அதேபோல் இந்த எஸ்எம்எஸ் மூலம் சரிபார்ப்பு குறியீடு அனுப்புவது கூகுள் நிறுவனத்திற்குக் கூடுதல் செலவை ஏற்படுத்துகிறது என்றும் கூறப்படுகிறது.
எனவே இந்த காரணங்களால் கூகுள் நிறுவனம் எஸ்எம்எஸ் அடிப்படையிலான சரிபார்ப்பு குறியீட்டை நீக்க முடிவு செய்துள்ளதாகத் தகவல் வெளியானது. மேலும் கூகுள் நிறுவனம் இந்த எஸ்எம்எஸ் சரிபார்ப்பு குறியீட்டிற்குப் பதிலாக க்யூ ஆர் கோட் (QR code) அடிப்படையிலான சரிபார்ப்பு முறையை அறிமுகம் செய்ய உள்ளது. இந்த க்யூ ஆர் கோட் முறை எப்படி செயல்படும் என்பதைப் பார்க்கலாம்.
பயனர்கள் ஜிமெயில் லாகின் பக்கத்தில் யூசர் நேம் மற்றும் பாஸ்வேர்டை டைப் செய்த பின்பு, க்யூ ஆர் கோட் ஒன்று திரையில் தோன்றும். அடுத்து பயனர்கள் தங்கள் மொபைல் போனில் இருக்கும் ஜிமெயில் செயலியைப் பயன்படுத்தி அந்த க்யூ ஆர் கோடை ஸ்கேன் செய்வதன் மூலம் கணக்கை எளிமையாக லாகின் செய்ய முடியும் என்று கூறப்படுகிறது.

எஸ்எம்எஸ் முறையை விட இந்த க்யூ ஆர் கோட் அம்சம் மிகவும் பாதுகாப்பானது என்று கூகுள் நிறுவனம் கூறியுள்ளது. அதாவது இந்த க்யூ ஆர் கோட் முறையில் சரிபார்ப்பு குறியீடு எஸ்எம்எஸ் மூலம் அனுப்பப்பட மாட்டாது. எனவே இதனால் ஹேக்கர்கள் சரிபார்ப்பு குறியீட்டை இடைமறிப்பது மிகவும் கடினம். பின்பு இந்த க்யூ ஆர் கோட் முறை கூகுள் நிறுவனத்திற்கு அதிக செலவும் கொடுக்காது.
ஜிமெயில் பயனர்களுக்கு சிறந்த பாதுகாப்பை உறுதி செய்யவும், பின்பு சிறந்த சேவையை மேம்படுத்தவும் விரைவில் இந்த புதிய அப்டேட்களை கூகுள் நிறுவனம் கொண்டுவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications








