கண்டுபிடிக்கப்பட்டது : 'மற்றொரு' உலகம்..!

Posted By:

அண்டம் - "இப்படி இருக்கலாம்", "அப்படி இருக்கலாம்" என்று, வெறும் கற்பனையை மட்டும் வைத்துக் கொண்டு அளந்து பார்க்க முடியாத ஒன்று, அதனால் தான் உலகின் மாபெரும் தொலைநோக்கிகள் உருவாக்கப்பட்டுக்கொண்டே இருக்கின்றன.

உலகம் 'இப்படித்தான்' அழியும் - விஞ்ஞானிகள் விளக்கம்..!

அப்படியாக பல லட்சம் கிலோமீட்டர் தூரம் வரை உன்னிப்பாக அண்டத்தை அலசி எடுக்க உருவாக்கப்பட்ட உலகின் மிக முக்கியமான தொலைநோக்கிகளில் ஒன்று தான் - நாசாவின் கெப்ளர் (Kepler). அப்படியான ஒரு தேடலில் உலகத்தை போன்றே இருக்கும் மற்றுமொரு கிரகத்தை கண்டுபிடித்துள்ளது கெப்ளர்..!

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
கிரகம் :

கிரகம் :

கண்டுபிடிக்கப்பட்ட கிரகம் பூமியை விட பெரியது மற்றும் பூமி கிரகத்தை விட பழமையானது என்பது குறிப்பிடத்தக்கது..!

பூமியின் மூத்த பழைய சகோதரன் :

பூமியின் மூத்த பழைய சகோதரன் :

ஆகையால் கண்டுபிடிக்கப்பட்ட அந்த கிரகத்தை 'பூமியின் மூத்த பழைய சகோதரன்' என்று செல்லமாக அழைக்கிறார்கள் விஞ்ஞானிகள்..!

பிரதி :

பிரதி :

இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட உலகம் போன்றே காட்சியளிக்கும் கிரககங்களில், இது தான் பூமி கிரகத்தை பிரதி எடுத்தது போல் இருக்கிறது என்கிறார்கள் விஞ்ஞானிகள்.

பெயர் :

பெயர் :

கெப்ளர் தொலைநோக்கி கண்டுபிடிக்கப்பட்டதால், இந்த கிரகத்திற்கு கெப்ளர்-425பி (Kepler-425B) என்று விஞ்ஞானிகள் பெயர் சூட்டியுள்ளனர்.

தூரம் :

தூரம் :

சிக்னஸ் (Cygnus) நட்சத்திர குவியலில் இருந்து 1400 ஒளியாண்டு தூரத்தில் இந்த கெப்ளர்-425பி கிரகம் இருக்கிறதாம்.

ஒளியாண்டு :

ஒளியாண்டு :

ஒரு ஒளியாண்டு என்பது சுமார் 9 ட்ரில்லியன் கிலோமீட்டர்கள் என்பது குறிப்பிடத்தக்கது..!

காரணம் :

காரணம் :

மிகவும் பெரிய அளவிலான ஆச்சரியார்த்தை இந்த கிரகம் ஏற்படுத்த காரணம் என்னவென்றால் பூமியை போலவே வாழ்வாதாரங்கள் அதில் அதிகமாக காணப்படுகிறதாம்.

சுற்றுப்பாதை :

சுற்றுப்பாதை :

உலகம் சூரியனை சுற்றி வருவது போலவே, கெப்ளர்-425பி ஒரு பெரிய நட்சத்திரத்தை சுற்றி வருகிறதாம்..!

பூமியை விட :

பூமியை விட :

மேலும் அந்த கெப்ளர் 425பி கிரகமானது பூமியை விட 60% பெரியது, 5 மடங்கு எடை அதிகமானது மற்றும் பூமியில் இருக்கும் புவியிர்ப்பு விசையை விட அங்கு 2 மடங்கு அதிகம் என்றும் விஞ்ஞானிகள் கணித்துள்ளனர்..!

ஒரு சுற்று :

ஒரு சுற்று :

தன் சுற்றுவட்ட பாதையில் முழுமையாக ஒரு சுற்றை முடிக்க கெப்ளர் 425பி கிரகம் 385 நாட்கள் எடுத்துக்கொள்ளுமாம்..!

வகை :

வகை :

கெப்ளர் 425பி கிரகம் சுற்றி வரும் நட்சத்திரமானது கே (K) அல்லது எம் (M) வகை நட்சத்திரங்கள் என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

அர்த்தம் :

அர்த்தம் :

அதாவது, சூரியனை விட அளவில் மிக சிறியதாக, குளுமையாக மற்றும் பழமையான நட்சத்திரங்கள் என்று அர்த்தம்.

மொத்தம் :

மொத்தம் :

கெப்ளர் தொலைநோக்கியை பயன்படுத்தி, இதுவரை மொத்தம் 1030 வெளிகோள்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது..!

இல்லை :

இல்லை :

ஆனால் அந்த 1020 வெளிகோள்களில் ஒன்று கூட பூமி கிரகத்தை போன்று இல்லையாம், புதிதாய் கண்டுப்பிடிக்கப்பட்ட கெப்ளர் 425பி கிரகத்தை தவிர்த்து..!

தேடல் :

தேடல் :

நாசாவின் இந்த கெப்ளர் தொலைநோக்கி அண்டத்தில் உள்ள பல வகையான நட்சத்திரங்கள், வெளிகோள்கள், மேலும் வேற்று கிரகவாச ஆதார தேடல் ஆகிய பல காரணங்களுக்காக கடந்த 2009-ஆம் ஆண்டு, நிறுவப்பட்டது.

தமிழ் கிஸ்பாட் :

தமிழ் கிஸ்பாட் :

மேலும் இதுபோன்ற தொழில்நுட்ப செய்திகளை உடனுக்குடன் பெற - தமிழ் கிஸ்பாட் ஃபேஸ்புக் பக்கம் மற்றும் தமிழ் கிஸ்பாட் வலைதளம்..!

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
English summary
Check about here NASA’s Kepler Telescope Has Just Discovered Another Earth. Read more about this in Tamil Gizbot.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot