நீங்கள் செய்யும் 'இந்த' சிறிய தவறு உங்களுக்கே ஆபத்தாகலாம்.. உங்கள் தகவலை பாதுகாக்க இதை உடனே செய்யுங்கள்..

|

உங்கள் ஆன்லைன் டேட்டாவைப் பத்திரமாகவும் பாதுகாப்பாகவும் வைத்திருப்பது எவ்வளவு முக்கியமானது என்பதை நாம் அனைவரும் முதலில் புரிந்துகொள்ள வேண்டும். அதேபோல், உங்கள் டிஜிட்டல் தகவலை எப்படி பாதுகாப்பது என்று உங்களுக்குத் தெரியவில்லை என்றால், இந்த பதிவை இறுதி வரை தொடர்ந்து படித்து, உங்கள் டிஜிட்டல் தகவலை எப்படிப் பாதுகாப்பது என்று தெரிந்துகொள்ளுங்கள். இந்த டிஜிட்டல் மயமான காலத்தில், உங்கள் தகவலை பாதுகாப்பது எப்படி என்ற விபரங்களை நீங்கள் தெரிந்துகொள்வது கட்டாயமானது.

ஸ்மார்ட்போன், கம்ப்யூட்டர், லேப்டாப்பில் உள்ள டிஜிட்டல் தகவல்

ஸ்மார்ட்போன், கம்ப்யூட்டர், லேப்டாப்பில் உள்ள டிஜிட்டல் தகவல்

இன்றைய காலகட்டத்தில், நம்முடைய பல முக்கியமான தகவல்கள் அனைத்தையும் நாம் பயன்படுத்தும் ஸ்மார்ட் போன், கம்ப்யூட்டர் அல்லது லேப்டாப் போன்ற சாதனங்களில் சேமித்து வைக்கிறோம். உண்மையைச் சொல்லப் போனால், டிஜிட்டல் முறைப்படி நம்முடைய அனைத்து தகவலையும் சேமித்து வைப்பது நம் வாழ்க்கையை எளிதாக்குகிறது. ஆனால், ஒரு சிறிய தவறு நம் தரவுகளை ஆன்லைனில் லீக் செய்ய வழிவகுக்கும் என்பதால் நாம் கவனத்துடன் செயல்படுவது மிகவும் முக்கியமானது.

நம்முடைய அலட்சியம் பற்றி சைபர் நிபுணர்கள் கூறுவது என்ன?

நம்முடைய அலட்சியம் பற்றி சைபர் நிபுணர்கள் கூறுவது என்ன?

நம்முடைய அலட்சியம், நம்மை ஆபத்தான சூழ்நிலைக்குத் தள்ளலாம் என்பதனால், பாதுகாப்பாக நம்முடைய தகவல்களை எப்படிப் பத்திரப்படுத்துவது என்பதைத் தெரிந்துகொள்ள வேண்டும் என்கின்றனர் சைபர் கிரைம் நிபுணர்கள். இந்திய சைபர் நிபுணர் அபிஷேக் தபாய், நமது தரவைப் பாதுகாப்பாக வைப்பது எவ்வளவு முக்கியமானது? மற்றும் இவற்றைப் பாதுகாக்க நாம் என்ன நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ள அறிவுரைகளை இப்போது பார்க்கலாம்.

டிஜிட்டல் எற (Digital Era) என்றால் என்னவென்று தெரியுமா?

டிஜிட்டல் எற (Digital Era) என்றால் என்னவென்று தெரியுமா?

விஷயத்திற்கு நேரடியாகச் செல்வதற்கு முன்னதாக, நாம் வாழ்ந்துகொண்டிருக்கும் டிஜிட்டல் எற (Digital Era) பற்றி முதலில் புரிந்துகொள்ள வேண்டும். டிஜிட்டல் சகாப்தம் அல்லது டிஜிட்டல் எற என்பது தொழில்துறை அடிப்படையிலான ஒரு தகவல் சார்ந்த பொருளாதாரத்திற்குக் கணினி அல்லது பிற தொழில்நுட்ப சாதனங்களை நடுத்தர பொருளாகவோ அல்லது தகவல்தொடர்பு மூலமாகவோ பயன்படுத்துவதாகும். இந்த காலகட்டத்தைத் தான் நாம் டிஜிட்டல் எற என்று அழைக்கிறோம்.

நாம் வாழும் டிஜிட்டல் காலத்தின் பெயர் இது தான்

நாம் வாழும் டிஜிட்டல் காலத்தின் பெயர் இது தான்

இந்த டிஜிட்டல் சகாப்தத்தில் நாம் இப்போது இருக்கும் இடத்தின் காலகட்டம் மிட் டிஜிட்டல் பேஸ் (mid-digital phase) என்று அழைக்கப்படுகிறது. சரி, இப்போது எப்படி நாம் இந்த டிஜிட்டல் காலத்தில் நம்முடைய தகவல்களை எப்படி பாதுகாக்க வேண்டும் என்று பார்க்கலாம். மொபைல் சாதனத்தில் தரவுப் பாதுகாப்பிற்காக, உங்கள் 15 இலக்க IMEI எண்ணை எப்போதும் சேமித்து வைத்துக்கொள்ளுங்கள். ஒருவேளை, உங்களின் மொபைல் போன் திருடப்பட்டாலோ அல்லது தொலைந்து போனாலோ இந்த எண் மிகவும் தேவைப்படும்.

IMEI எண் எவ்வளவு முக்கியமானது?

IMEI எண் எவ்வளவு முக்கியமானது?

குறிப்பாக, காவல்துறையில் புகார் அளிக்க இந்த IMEI எண் மிகவும் முக்கியமானது என்பதை மறக்க வேண்டாம். இந்த IMEI எண்ணை மூன்றாம் நபர் மற்றும் யாருடனும் பகிர்ந்துகொள்ள வேண்டாம். அதேபோல், உங்கள் ஸ்மார்ட் போன் சாதனத்தில் ஆட்டோமேட்டிக் லாக் அம்சம் மற்றும் பாஸ்வோர்ட் லாக் அல்லது PIN லாக் போன்ற அம்சங்களைப் பயன்படுத்த மறக்காதீர்கள். இவையெல்லாம், அடிப்படை விஷயங்கள் என்றாலும் கூட, உங்களின் தகவல் திருடு போவதைத் தடுக்க உதவும் என்பதை மறக்க வேண்டாம்.

வங்கி வாடிக்கையாளர்களே உஷார்.! தெரியாமல் கூட 'இதை' மட்டும் கிளிக் செய்யாதீர்கள்? ஏன் தெரியுமா?வங்கி வாடிக்கையாளர்களே உஷார்.! தெரியாமல் கூட 'இதை' மட்டும் கிளிக் செய்யாதீர்கள்? ஏன் தெரியுமா?

SIM கார்டை லாக் செய்வது அவசியம்.. ஏன் தெரியுமா?

SIM கார்டை லாக் செய்வது அவசியம்.. ஏன் தெரியுமா?

உங்கள் மொபைல் எண் மற்றும் அதில் உள்ள தகவலைப் பாதுகாக்க சிம் கார்டைப் லாக் செய்து பழகுங்கள். இதை ஆக்டிவேட் செய்ய SIM PIN விருப்பத்தைப் பயன்படுத்துங்கள். இதனால், சாதனம் திருடப்பட்டால் கூட, உங்கள் சிம் தவறாகப் பயன்படுத்தப்படாமல் பார்த்துக்கொள்ள முடியும். மெமரி கார்டு தகவலைப் பாதுகாக்க பாஸ்வோர்ட் விருப்பத்தைப் பயன்படுத்துங்கள். உங்கள் மொபைல் சாதனம், உங்களைப் பற்றிய பல தகவலை தன்னுள் கொண்டுள்ளதானால் அவற்றை ஒருபோதும் கவனிக்காமல் இருந்து விடாதீர்கள்.

தெரியாமல் நீங்கள் செய்யும் மிகப் பெரிய தவறே இது தான்

தெரியாமல் நீங்கள் செய்யும் மிகப் பெரிய தவறே இது தான்

கேமரா, ஆடியோ அல்லது வீடியோ பிளேயர்கள் மற்றும் இணைக்கப்பட்ட புளூடூத், இன்ஃபிரரெட், வைஃபை போன்ற அம்சங்கள் பயன்பாட்டில் இல்லாதபோது முடக்கவும். உங்களுடைய தகவல் தரவை தொடர்ந்து பேக் அப் செய்து வைப்பதும் பாதுகாப்பானது. நம்மில் பெரும்பாலானோர் தெரியாமல் செய்யும் தவறுகளில் இதுவும் ஒன்று, குக்கீகளை ஏற்பது. உண்மையில், குக்கீகளை ஏற்கலாமா வேண்டாமா? என்ற குழப்பம் நிறைய பேரிடம் இருக்கிறது. எல்லா வகையான இணையதளங்களிலிருந்தும் குக்கீகளை நாம் ஏற்பது பாதுகாப்பற்றது.

எப்போதும் குக்கீகளை ஏற்காதீர்கள்

எப்போதும் குக்கீகளை ஏற்காதீர்கள்

குக்கீகளின் உதவியுடன், உங்களின் முக்கியமான தகவல்கள் அனைத்தும் அந்த இணையதளங்களுக்குச் செல்லும் என்பதை கவனத்தில் வைத்துக்கொள்ளுங்கள். பின்னாளில் இதுவே உங்களுக்கு ஒரு வினையாக மாறக்கூடும். உங்களிடம் இருந்து குக்கீகள் மூலம் எடுக்கப்பட்ட தகவலை அந்த இணையதள நபர்கள் தவறாகப் பயன்படுத்திக்கொள்ள வாய்ப்புள்ளது என்பதனால் எச்சரிக்கையாக இருங்கள். இதைத் தவிர்க்க, நம்பகமான இணையதளத்தின் குக்கீகளை மட்டுமே ஏற்றுக்கொள்ள வேண்டும். முடிந்தவரை குக்கீகளை நிராகரிப்பது நல்லது.

ஆன்டிவைரஸ் சாப்ட்வேர் பயன்படுத்துங்கள்

ஆன்டிவைரஸ் சாப்ட்வேர் பயன்படுத்துங்கள்

உங்கள் சாதனத்தில் அதிக பாதுகாப்பை உறுதிப்படுத்த ஆன்டிவைரஸ் சாப்ட்வேர்களை பயன்படுத்துவது சிறப்பானது. உங்களுக்குத் தெரியாத அல்லது நம்பிக்கை இல்லாத இணையத்தளங்களில் இருந்து புதிய ஆப்ஸ் அல்லது கோப்புகளை பதிவிறக்கம் செய்யும் பழக்கத்தையும் கைவிடுதல் பாதுகாப்பானது. இந்த சிறிய-சிறிய மாற்றங்களை நீங்கள் சரியாக கடைப்பிடித்து நடந்தாலே, உங்களின் டிஜிட்டல் தகவல் தவறாகப் பயன்படுத்தப்படாமல் பாதுகாப்பாக இருக்கலாம் என்பதே உண்மை.

Best Mobiles in India

English summary
Keep Your Online Data Safe And Secure By Doing These Mistakes and Follow These Steps To Be Protected : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X