டுவிட்டரில் வீடியோ பதிவிட்ட விவசாயி: ஒரே செயலில் விவசாயி, தொகுதி மக்களை மகிழ்வித்த பாஜக எம்பி!

|

டுவிட்டரில் விவசாயி ஒருவர் பதிவிட்டிருந்த வீடியோவை பார்த்த பாஜக எம்பி உடனடியாக எடுத்த நடவடிக்கையில் விவசாயி மற்றும் தொகுதி மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

இந்தியாவில் எதிர்பார்த்ததை விட அதிகரிப்பு

இந்தியாவில் எதிர்பார்த்ததை விட அதிகரிப்பு

கொரோனா பாதிப்பு இந்தியாவில் எதிர்பார்த்ததை விட அதிகரித்துக் கொண்டே வருகிறது. தற்போதைய நிலைபடி இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 23 ஆயிரத்தை நெருங்கி வருகிறது. மற்ற சில நாடுகளோடு ஒப்பிடுகையில் இது குறைவு என்றாலும் இந்தியாவில் பிற நாட்டவர்கள் பாராட்டு வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டது.

20 சதவீதம் பேர் குணமடைந்துள்ளனர்

20 சதவீதம் பேர் குணமடைந்துள்ளனர்

அதேபோல் இந்தியாவில் கொரோனா பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கையை ஒப்பிடும் போது 20 சதவீதம் பேர் குணமடைந்துள்ளனர் என்பதும் 3 சதவீதம் உயிரிழந்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

கொரோனா பரவல் அதிகரித்துக் கொண்டே வருகிறது

கொரோனா பரவல் அதிகரித்துக் கொண்டே வருகிறது

இந்தியாவில் மகாராஷ்டிராவில் கொரோனா பரவல் அதிகரித்துக் கொண்டே வருகிறது. தற்போதுவரை அங்குமட்டும் 6000-த்துக்கும் பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதேபோல் அங்கு 280-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். மேலும் கோவாவில் கொரோனா பாதிக்கப்பட்ட அனைவரும் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதையடுத்து அங்கு மட்டும் 100 சதவீதம் கொரோனாவில் இருந்து மீண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

குஜராத்தில் 2600-க்கும் மேற்பட்டோருக்கு நோய்த்தொற்று உறுதி

குஜராத்தில் 2600-க்கும் மேற்பட்டோருக்கு நோய்த்தொற்று உறுதி

குஜராத்தில் 2600-க்கும் மேற்பட்டோருக்கு நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 110-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். தலைநகர் டெல்லியில் 2300-க்கும் மேற்பட்டோருக்கு நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 50 பேர் உயிரிழந்துள்ளனர்.

தமிழகத்தில் மேலும் சிலருக்கு கொரோனா தொற்று உறுதி

தமிழகத்தில் மேலும் சிலருக்கு கொரோனா தொற்று உறுதி

தமிழகத்தில் மேலும் சிலருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் பாதித்தவர்கள் எண்ணிக்கை 1800-ஐ கடந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்தியா முழுவதும் ஊரடங்கு அமல் படுத்தப்பட்டிருந்தாலும், கொரோனா தொற்று பரவல் அதிகரித்துக் கொண்டேதான் வருகிறது.

சமூக தொற்று ஏற்படுவதை தவிர்க்க ஊரடங்கு உத்தரவு

சமூக தொற்று ஏற்படுவதை தவிர்க்க ஊரடங்கு உத்தரவு

இதையடுத்து சமூக தொற்று ஏற்படுவதை தவிர்க்க ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. நோய் அறிகுறி உள்ளவர்களை தனிமைப்படுத்தி கண்காணித்தல் உள்ளிட்ட பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பரிசோதனைகள் தற்போது அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில், வைரஸ் தொற்று உறுதி செய்யப்படுவோரின் எண்ணிக்கையும் உயர்கிறது. இதையடுத்து ஊரடங்கு கடுமையாக்கப்பட்டே வருகிறது.

தமிழகத்தில் அத்தியாவசிய பொருட்கள் கிடைக்க பல்வேறு ஏற்பாடு

தமிழகத்தில் அத்தியாவசிய பொருட்கள் கிடைக்க பல்வேறு ஏற்பாடு

இந்த ஊரடங்கு காலத்தில் தமிழகத்தில் அத்தியாவசிய பொருட்கள் கிடைக்க பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. அதன்படி காய்கறிகள், பழங்கள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் தற்போது தமிழகமெங்கும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.

முட்டைகோஸ் விளைவித்திருந்த விவசாயி

முட்டைகோஸ் விளைவித்திருந்த விவசாயி

இந்த நிலையில் சத்தியமங்கலம் அருகே முட்டைகோஸ் விளைவித்திருந்த விவசாயி ஒருவர் இந்த ஊரடங்கு உத்தரவின் காரணமாக, முட்டைகோஸ்களை விற்பனை செய்ய முடியாத நிலையில் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து தனது வருத்தத்தை கண்ணையா சுப்பிரமணியன் என்ற விவசாயி டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.

பாஜக எம்பி எடுத்த அதிரடி முடிவு

இந்த வீடியோவை பார்த்த பாஜக எம்பி, அந்த விவசாயி விளைவித்த அனைத்து முட்டைக் கோஸையும் கொள்முதல் செய்து கொள்வதாக தெரிவித்த அந்த விவசாயியை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளார். பெங்களூரு தெற்கு தொகுதி பாஜக எம்பி தேஜஸ்வி சூர்யா, தன் தொகுதி மக்களுக்கு இலவசமாக காய்களை வழங்க முடிவு செய்துள்ளார்.

பாஜக எம்பிக்கு டுவிட்டரில் நன்றி

அப்போது தான் இந்த விவசாயி டுவட்டரில் பதிவிட்டிருந்த வீடியோவை பார்த்தார். இதையடுத்து அந்த விவசாயி விளைவித்த அனைத்து முட்டைக் கோஸ்களையும் கொள்முதல் விலைக்கே வாங்கிக் கொள்வதாக அறிவித்துள்ளார். இதையடுத்து விவசாயி கண்ணையன் பாஜக எம்பிக்கு டுவிட்டரில் நன்றி தெரிவித்தார்.

Best Mobiles in India

English summary
karnataka mp immediatly take action after seeing farmer sad

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X