வீடியோ எடுக்க முயன்ற இளம்பெண்: பண்ணை குளத்தில் பலி! கொலையா? விபத்தா?

|

கர்நாடகாவில் உள்ள, கோலார் மாவட்டத்தின் வேதகிரியில் பகுதியில் வசிக்கும், 20 வயது மாலா என்ற இறுதி ஆண்டு பி.ஏ மாணவி, டிக் டாக் வீடியோ பதிவு செய்ய முயன்று பண்ணை குளத்தில் விழுந்து உயிர் இழந்துள்ளார். இந்த சம்பவம் அப்பகுதி மக்களைச் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

வீடியோ எடுக்க முயன்ற இளம்பெண்: பண்ணை குளத்தில் பலி! கொலையா? விபத்தா?

டிக் டாக் தொடர்பான செய்திகள் இன்னும் வலைத்தளங்களை நிரப்பி தான் வருகிறது. பயனர்கள் செய்யும் காரியங்களுக்கு நிறுவனம் பொறுப்பாகாது என்ற பதில் தான் டிக் டாக் நிறுவனத்திடமிருந்து வருகிறது.

 டிக் டாக் வீடியோ எடுக்க முயற்சித்த மாலா

டிக் டாக் வீடியோ எடுக்க முயற்சித்த மாலா

பெங்களூரிலிருந்து 75கிலோ மீட்டர் தொலைவில் உள்ள கோலார் என்ற பகுதியில் தான் இந்த சமத்துவம் நடந்தேறியுள்ளது. கால்நடை தீவனம் எடுப்பதற்காகப் பண்ணை வீட்டிற்குச் சென்ற மாலா, டிக் டாக் வீடியோ ஒன்றை ரெக்கார்ட் செய்ய முயன்றிருக்கிறார்.

குளத்தினுள் விழுந்து மரணம்

குளத்தினுள் விழுந்து மரணம்

பண்ணை வீட்டில் உள்ள குளத்தருகில் அமர்ந்து வீடியோ பதிவு செய்திருக்கிறார். எதிர்பாராத விதமாக வீடியோ பதிவு செய்யும் பொழுது தடுமாறி குளத்தினுள் விழுந்து, நீரில் மூழ்கி உயிர் இழந்திருக்கிறார். தீவனம் எடுக்கச் சென்ற மகள் இன்னும் வீடு திரும்பவில்லை என்று மாலாவைத் தேடிப் பெற்றோர்கள் பண்ணை வீட்டிற்குச் சென்றுள்ளனர்.

<span style=ஆபாச இணையதளத்தை விளம்பரப்படுத்த கிரிக்கெட் மைதானத்தில் ஓடிய பெண்: கைது.!" title="ஆபாச இணையதளத்தை விளம்பரப்படுத்த கிரிக்கெட் மைதானத்தில் ஓடிய பெண்: கைது.!" loading="lazy" width="100" height="56" />ஆபாச இணையதளத்தை விளம்பரப்படுத்த கிரிக்கெட் மைதானத்தில் ஓடிய பெண்: கைது.!

சந்தேகத்தின் பெயரில் விசாரணை

சந்தேகத்தின் பெயரில் விசாரணை

குளத்தில் மாலா பிணமாக மிதந்ததைக் கண்டு அதிர்ந்துபோன பெற்றோர், அவரின் உடலை மீட்டுள்ளனர். இறுதிச் சடங்குகள் முடிந்து மாலாவின் உடல் அவர்களின் முறைப்படி புதைக்கப்பட்டிருக்கிறது. சம்பவம் பற்றிய தகவல் அறிந்து போலீசார் சந்தேகத்தின் பெயரில் விசாரணை துவங்கியுள்ளனர்.

காணாமல் போன ஸ்மார்ட்போன்

காணாமல் போன ஸ்மார்ட்போன்

மாலா பயன்படுத்திய ஸ்மார்ட்போன் இன்னும் கிடைக்காத நிலையில், சந்தேகம் வலுத்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். இது உண்மையிலேயே விபத்து தானா அல்லது கொலை செய்து இது போன்று சித்தரிக்கப்பட்டுள்ளதா என்ற கோணத்தில் போலீசார் விசாரணையைத் துவங்கியுள்ளனர்.

<span style=ரூ.96க்கு 180 நாள்அன்லிமிடெட் வாய்ஸ்கால் எஸ்எம்எஸ் சலுகை வழங்கும் பிஎஸ்என்எல்!" title="ரூ.96க்கு 180 நாள்அன்லிமிடெட் வாய்ஸ்கால் எஸ்எம்எஸ் சலுகை வழங்கும் பிஎஸ்என்எல்!" loading="lazy" width="100" height="56" />ரூ.96க்கு 180 நாள்அன்லிமிடெட் வாய்ஸ்கால் எஸ்எம்எஸ் சலுகை வழங்கும் பிஎஸ்என்எல்!

பிரேத பரிசோதனை

பிரேத பரிசோதனை

குளம் முழுதும் மாலாவின் ஸ்மார்ட்போனை தேடும் பனி துவங்கியுள்ளது. மாலாவின் உடல் மீண்டும் வெளியே எடுக்கப்பட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பப்பட்டுள்ளது என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர். அடுத்தகட்ட விசாரணையில் உண்மை என்ன என்பது கண்டுபிடிக்கப்படும் என்று காவல்துறை தெரிவித்துள்ளது.

Best Mobiles in India

English summary
Karnataka girl dies while shooting tik tok video : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X