Home
News

பப்ஜி விளையாடுவது எப்படி? தேர்வில் எழுதிய மாணவன்: மாணவனுக்கு நேர்ந்த கொடுமை.!

தேர்விற்கு இன்னும் பதினைந்து நாட்கள் தான் உள்ளது என்பதை அவர் உணர்ந்தாலும், பொன்னாக நேரத்தை வீணடித்த பின்னர் இது மிகவும் தாமதமானது என்பதை அறிந்திருந்தார்.

பிரபலமாக பப்ஜி என அழைக்கப்படும் ப்ளேயர் அன்னோன்ஸ் பேட்டில்கிரவுண்ட் எனும் விளையாட்டு சமீபகாலமாக செய்திகளில் முக்கிய இடம் பிடித்துவருகிறது. பப்ஜி விளையாடுவதற்காக கைது செய்யப்படுவதிலிருந்து கல்வி நிறுவனங்களில் தடைசெய்வது வரை நாம் அனைத்தையும் செய்திகளில் பார்த்தோம். எனினும் இந்த சமீபத்திய செய்தி அவற்றிற்கு எல்லாம் மகுடம் வைத்தது போல அமைந்துள்ளது. மாணவர் ஒருவர் தனது முதலாமாண்டு பியுசி பொருளாதார தேர்வின் விடைத்தாளில் "பப்ஜி கேமை விளையாடுவது எப்படி" என்பதை எழுதி தேர்வில் தோல்வியடைந்துள்ளார்.

முதல் மதிப்பெண்

முதல் மதிப்பெண்

கடந்த ஆண்டு நடைபெற்ற 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் முதல் மதிப்பெண் பெற்ற இம்மாணவர், பப்ஜி விளையாட்டிற்கு அடிமையானதுடன் அதற்கு விலையாக படிப்பின் மீதான கவனத்தை அளித்துள்ளார்.

தேர்வுகள் நெருங்கி வருவதை முழுவதுமாக மறந்துவிட்டார்

தேர்வுகள் நெருங்கி வருவதை முழுவதுமாக மறந்துவிட்டார்

ஆன்லைன் விளையாட்டில் தீவிரமாக மூழ்கிவிட்டதை ஒப்புக்கொண்ட அந்த மாணவன், தேர்வுகள் நெருங்கி வருவதை முழுவதுமாக மறந்துவிட்டார். போனுக்கு அடிமையானதை பெற்றோர் கண்டிக்கும்போதெல்லாம், தனது நண்பர்களுடன் உரையாடிக்கொண்டிருப்பதாக பொய்யும் கூறியுள்ளார்.

 வகுப்பிற்கு செல்லாமல் அருகில் உள்ள தோட்டத்திலேயே அமர்ந்து விளையாடுவேன்

வகுப்பிற்கு செல்லாமல் அருகில் உள்ள தோட்டத்திலேயே அமர்ந்து விளையாடுவேன்

"நான் மிகவும் சிரத்தையுடன் படிப்பவன். ஆனால் பப்ஜி விளையாட்டு நன்கு பொழுதுபோகும் வகையில் கவர்ச்சியாக இருந்ததால் கவர்ந்திழுத்து, விரைவில் அடிமையாக்கிவிட்டது. சில நேரங்களில் நான் பப்ஜி விளையாட்டை விளையாடுவதற்காக வகுப்பிற்கு செல்லாமல் அருகில் உள்ள தோட்டத்திலேயே அமர்ந்து விளையாடுவேன்" என அம்மாணவர் நம்மிடம் பகிர்ந்தார்.

தேர்ச்சி பெற முடியவில்லை

தேர்ச்சி பெற முடியவில்லை

தேர்விற்கு இன்னும் பதினைந்து நாட்கள் தான் உள்ளது என்பதை அவர் உணர்ந்தாலும், பொன்னாக நேரத்தை வீணடித்த பின்னர் இது மிகவும் தாமதமானது என்பதை அறிந்திருந்தார். அப்போதே பப்ஜி விளையாட்டை விளையாடுவதை நிறுத்தியிருந்தும், தனது பியுசி தேர்வில் அவரால் தேர்ச்சி பெற முடியவில்லை.

விளையாட்டு வினையாகும் என்பது இதுதானோ!

Best Mobiles in India

English summary
Karnataka Boy Writes In Exam How To Play PUBG, Examiner Fails Him: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X