7 ஆம் வகுப்பு வரை ஆன்லைன் வகுப்பு நடத்த தடை: அதிரடி அறிவிப்பு வெளியிட்ட மாநில அரசு?

|

7 ஆம் வகுப்பு வரை ஆன்லைன் வகுப்பு நடத்த தடை விதித்து கர்நாடக மாநில அரசு தடைவிதித்துள்ளது. எந்த மாநிலம் மற்றும் அதற்கான காரணம் குறித்து பார்க்கலாம்.

200 நாடுகளுக்கு மேல் தாக்கம்

200 நாடுகளுக்கு மேல் தாக்கம்

சீனாவின் வுகான் மாகாணத்தில் இருந்து பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் 200 நாடுகளுக்கு மேல் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. இருப்பினும் கொரோனா தாக்கம் சீனாவில் குறையத் தொடங்கினாலும் பிற நாடுகளில் கோரத்தாண்டவமாடி வருகிறது.

உலகளவில் 75 லட்சத்தை தாண்டியுள்ளது

உலகளவில் 75 லட்சத்தை தாண்டியுள்ளது

உலகளவில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 75 லட்சத்தை தாண்டியுள்ளது. இதில் 38 லட்சத்துக்கும் அதிகமானோர் குணமடைந்துள்ளனர், இருப்பினும் 4 லட்சத்து 23 ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயரிழந்துள்ளனர்.

மகாராஷ்டிராவில் அதிகம்

மகாராஷ்டிராவில் அதிகம்

இந்தியாவிலும் கொரோனா வைரஸ் கோரத்தாண்டவமாடி வருகிறது. இதில் மகாராஷ்டிராவில் 94 ஆயிரத்துக்கும் அதிகமானோரும் தமிழகத்தில் 36 ஆயிரத்துக்கும் அதிகமானோர் டெல்லியில் 32 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் தமிழகத்தில் சென்னையில் கொரோனா கோரத்தாண்டவமாடி வருகிறது.

BSNL அதிரடி அறிவிப்பு: ரூ.99 திட்டத்தில் திருத்தம்., அன்லிமிட்டெட் கால்!BSNL அதிரடி அறிவிப்பு: ரூ.99 திட்டத்தில் திருத்தம்., அன்லிமிட்டெட் கால்!

கொரோனா பரவலைத் தடுக்க ஊரடங்கு உத்தரவு

கொரோனா பரவலைத் தடுக்க ஊரடங்கு உத்தரவு

கொரோனா பரவலைத் தடுக்க ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனால் மாணவர்களுக்கு தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு அடுத்த வகுப்புகளுக்கு தேர்வு செய்யப்பட்டு வருகிறது. அதேபோல் பல்வேறு பள்ளிகளிலும் ஆன்லைன் வகுப்புகள் தொடங்கி நடத்தப்பட்டு வருகிறது.

வசதியில்லாத மாணவர்கள் அவதிப்படுவார்கள்

வசதியில்லாத மாணவர்கள் அவதிப்படுவார்கள்

இருப்பினும் கிராமப்புறங்களில் இணையதளம் மற்றும் ஸ்மார்ட்போன் வசதியில்லாத மாணவர்கள் அவதிப்படுவார்கள் என்றும் அப்படி இருப்பவர்களிடமும், தொடர்ச்சியாக எலக்ட்ரானிக் பொருட்கள் முன்பாக அமர்ந்து இருந்து வகுப்புகளை கவனிப்பது என்பது அவர்களின் உடல் நலம் மற்றும் மனநலத்தில் பாதிப்பு ஏற்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது.

பதிவு செய்யப்பட்ட வீடியோக்கள் மூலம்

பதிவு செய்யப்பட்ட வீடியோக்கள் மூலம்

இதுகுறித்து கர்நாடக மாநிலத்தில் துவக்கக் கல்வித் துறை அமைச்சர் சுரேஷ்குமார் தெரிவிக்கையில், மாணவர்களுக்கு நடத்தப்படும் ஆன்லைன் வகுப்புகளானது பதிவு செய்யப்பட்ட வீடியோக்கள் மூலம் நடத்த வேண்டும். மேலும் இதுகுறித்து விவாதிக்க தனிக்குழு அமைக்கப்பட்டிருக்கிறது. ஆன்லைன் வகுப்புகள் குறித்து வெவ்வேறு மாவட்டங்களில் புகார்களும் எதிர்ப்புகளும் வலுத்து வருகின்றன.

மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள்

மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள்

தொடர்ந்து இதுகுறித்து மனநல மருத்துவர்களிடம் விவாதித்தாக தெரிவித்ததாக தெரிவித்த அமைச்சர் சிவக்குமார், தற்போது 7 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் நடத்த தடை விதிக்கப்பட்டுவதாக தெரிவித்தார்.

உடல் நலம் மற்றும் மனநலத்திற்கு பாதிப்பு

உடல் நலம் மற்றும் மனநலத்திற்கு பாதிப்பு

ஆன்லைன் வகுப்புகளில் பங்கேற்பது உடல் நலம் மற்றும் மனநலத்திற்கு பாதிப்பு விளைவிக்கும் என்பதால் தடை விதிக்கப்பட்டுள்ளது. அதேபோல் ஆன்லைன் வகுப்புகளுக்கு பள்ளி கட்டணம் வசூலிக்க கூடாது எனவும் தெரிவித்துள்ளார்.

வாட்ஸ்அப்-ல் இப்படியொரு ஒரு பிரச்சனையா? உஷார் மக்களே.!வாட்ஸ்அப்-ல் இப்படியொரு ஒரு பிரச்சனையா? உஷார் மக்களே.!

மத்திய மாநில அரசு பதிலளிக்க உத்தரவு

மத்திய மாநில அரசு பதிலளிக்க உத்தரவு

தமிழகத்தை பொருத்தவரை ஆன்லைன் வகுப்பு நடத்தக் கோரி சரண்யா என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். இதுகுறித்து விசாரணையில் பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் நடத்த இடைக்காலத் தடை விதிக்க சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் மறுப்பு தெரிவித்துள்ளனர். அதேபோல் வரும் 20 ஆம் தேதிக்குள் பாதுகாப்பான ஆன்லைன் கல்வி வழங்க என்னென்ன நடவடிக்கை உள்ளது என்பது குறித்து பதிலளிக்குமாறு மத்திய மாநில அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

Best Mobiles in India

English summary
karnataka ban online class upto 7th standard., do you know the reason

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X