டிஜிட்டல் அவதாருடன் மெட்டாவர்ஸில் களமிறங்கும் ஆண்டவர் கமல் ஹாசன்: உலகநாயகனின் சொந்த 'உலகம்' தயார்.!

|

தயாரிப்பாளர், இயக்குனர், நடிகர் மற்றும் அரசியல்வாதியான கமல்ஹாசன் புதிய மெட்டாவர்ஸில் தனது சொந்த டிஜிட்டல் அவதாரத்தை உருவாக்கி பயன்படுத்த போகும் முதல் இந்தியப் பிரபலமாக மாற உள்ளார் என்று செய்திகள் வெளியாகியுள்ளது. பேஸ்புக் நிறுவனம் சமீபத்தில் மெட்டா என்று தனது நிறுவனத்தின் பெயரை மாற்றிக்கொண்டது. நிறுவனம் இப்போது மெட்டாவர்ஸ் தொழில்நுட்பத்தை உருவாக்கி வருகிறது. இதன் மூலம் புதிய டிஜிட்டல் உலகத்தை உருவாக்கவிருக்கிறார்கள். இதில் கமல்ஹாசனின் அவதார் இடம்பெறவுள்ளது.

டிஜிட்டல் உலகத்தில் களமிறங்குகிறாரா ஆண்டவர் கமல் ஹாசன்?

டிஜிட்டல் உலகத்தில் களமிறங்குகிறாரா ஆண்டவர் கமல் ஹாசன்?

ஞாயிற்றுக்கிழமை 67 வயதை எட்டிய கமல்ஹாசன், கலெக்டபிள்கள் அல்லது NFTகள் என்று அழைக்கப்படும் நான் பன்ஜிபிள் டோக்கன்களை பயன்படுத்தி, இந்திய உரிமம் பெற்ற டிஜிட்டல் சேகரிப்பு தளமான Fantico இலிருந்து வரவிருக்கும் மெட்டாவர்ஸ் கேமில் தனது அவதாருடன் ஒரு அருங்காட்சியகத்திற்கான திட்டங்களை அறிமுகப்படுத்தி, டிஜிட்டல் உலகத்தில் அவருக்கான ஒரு தனி இடத்தை பயன்படுத்தப்போகிறார் என்று அறிவித்திருக்கிறார்.

உலகின் வளர்ந்து வரும் மெட்டாவர்ஸ் தொழில்நுட்பம் பற்றி கமல் ஹாசன் கூறியது என்ன?

உலகின் வளர்ந்து வரும் மெட்டாவர்ஸ் தொழில்நுட்பம் பற்றி கமல் ஹாசன் கூறியது என்ன?

"டிஜிட்டல் மற்றும் இயற்பியல் உலகின் வளர்ந்து வரும் மெட்டாவர்ஸ் தொழில்நுட்பத்தை ஆராய்வதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். இது இப்போது மெட்டாவர்ஸ் என்ற புதிய உலகிற்கான வாசலை திறக்கிறது என்பது மிக வேகமாக பிரபலமாகி வருகிறது" என்று கமல்ஹாசன் கூறினார். "ஆறு தசாப்தங்களுக்கும் மேலான எனது வாழ்க்கைப் பயணம் இந்த மெட்டாவர்ஸிற்கான எனது பிரசாதமாக இருக்கும்." என்றும் அவர் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

தினமும் வந்த 'குட் மார்னிங்' மெசேஜ்.. 5.91 லட்சம் அபேஸ்.. உஷார் மக்களே.. இந்த தப்ப நீங்க செய்யாதீங்க..தினமும் வந்த 'குட் மார்னிங்' மெசேஜ்.. 5.91 லட்சம் அபேஸ்.. உஷார் மக்களே.. இந்த தப்ப நீங்க செய்யாதீங்க..

டிஜிட்டல் உலகத்தில் ரசிகர்கள் என்னவெல்லாம் எதிர்பார்க்கலாம்?

டிஜிட்டல் உலகத்தில் ரசிகர்கள் என்னவெல்லாம் எதிர்பார்க்கலாம்?

டிஜிட்டல் சேகரிப்புகளுக்கு ரசிகர்கள் அதிகப் பணம் செலவழித்து வருவதால், பல பிரபலங்கள் இதில் இணைகின்றனர். அமிதாப் பச்சன் மற்றும் சல்மான் கான் போன்ற நட்சத்திரங்களும், கிரிக்கெட் வீரர்கள் மற்றும் இந்தியன் சூப்பர் லீக் (ISL) போன்ற லீக்குகளும் தங்கள் NFTகளை அறிமுகப்படுத்தியுள்ளனர். கமல் ஹாசனுக்கான போஸ்டர்கள், அவதாரங்கள் மற்றும் வீடியோக்கள் உள்ளிட்ட பல்வேறு டிஜிட்டல் சேகரிப்புகளை ஃபான்டிகோ முதலில் வெளியிடும் என்று நிறுவனர் அபயானந்த் சிங் ஊடகத்திடம் தெரிவித்திருக்கிறார்.

கேம் அடிப்படையிலான மெட்டாவேர்ஸ்

கேம் அடிப்படையிலான மெட்டாவேர்ஸ்

"அடுத்த சில மாதங்களில், கேம் அடிப்படையிலான மெட்டாவேர்ஸ் தொடங்கப்படுவதை நாங்கள் பார்க்கிறோம், அங்கு ஹாசன் தனது சொந்த உலகத்தை, அவரது தனிப்பட்ட அருங்காட்சியகத்தை வைத்திருப்பார்," என்று அவர் குறிப்பிட்டுக் கூறியுள்ளார். இது ஹாசனின் உலகத்தை ஆராய்வதன் மூலமும், அவரது டிஜிட்டல் அவதாரங்களுடன் தொடர்புகொள்வதன் மூலமும், நினைவுப் பொருட்கள் மற்றும் டிஜிட்டல் பொருட்களை வாங்குவதன் மூலமும் ஹாசனின் ரசிகர்கள் உலகளவில் அவருடன் தொடர்பு கொள்ள இந்த மெட்டாவர்ஸ் தொழில்நுட்பம் அனுமதிக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.

பிரமிக்க வைக்கும் கீழடி: பாண்டிய மன்னனின் 'மீன்' சின்னத்துடன் உறைக்கிணறு.. சங்ககாலத்தின் சான்றா இது?பிரமிக்க வைக்கும் கீழடி: பாண்டிய மன்னனின் 'மீன்' சின்னத்துடன் உறைக்கிணறு.. சங்ககாலத்தின் சான்றா இது?

இன்னும் ஏராளமான பிரபலங்கள் மெட்டாவர்ஸ் பக்கம் படையெடுப்பு

இன்னும் ஏராளமான பிரபலங்கள் மெட்டாவர்ஸ் பக்கம் படையெடுப்பு

கமல் ஹாசன் தனது படங்களில் வகைகள், காட்சி பாணிகள் மற்றும் தொழில்நுட்பத்தைப் பரிசோதிப்பதில் பெயர் பெற்றவர். உலகளவில், ராப்பர் ஸ்னூப் டோக் செப்டம்பர் மாதம் தி சாண்ட்பாக்ஸில் தனது மெய்நிகர் மாளிகை வழியாக NFT மெட்டாவர்ஸில் நுழைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. ஃபாண்டிகோ மேலும் பல நடிகர்கள், விளையாட்டு வீரர்கள் மற்றும் ஸ்டுடியோக்கள் மற்றும் படைப்பாற்றல் சமூகத்தைச் சேர்ந்த மற்றவர்களுடன் மெட்டாவேர்ஸின் ஒரு பகுதியாக இருக்க பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக சிங் கூறியுள்ளார்.

மெட்டாவர்ஸ் என்றால் என்ன? இது எதற்கானது? இதன் பயன் என்ன? என்பது போன்ற உங்களின் அனைத்து கேள்விகளுக்குமான கேளிவிகளுக்கு பதில் இந்த பதில் உள்ளது. இந்த லிங்க்-ஐ கிளிக் செய்யுங்கள்.

பேஸ்புக் பெயர் மாற்றுவதன் நோக்கம் என்ன?- அது என்ன மெட்டாவெர்ஸ்., எப்படி இருக்கும்?பேஸ்புக் பெயர் மாற்றுவதன் நோக்கம் என்ன?- அது என்ன மெட்டாவெர்ஸ்., எப்படி இருக்கும்?

NFT தளங்களில் உள்ள பொருட்களின் மதிப்பு எவ்வளவு?

NFT தளங்களில் உள்ள பொருட்களின் மதிப்பு எவ்வளவு?

உலகளவில், NFT வீடியோக்கள், புகைப்படங்கள் அல்லது ஆடியோ போன்ற டிஜிட்டல் உள்ளடக்கத்தின் தனித்துவமான உரிமையை நிரூபிக்கும் பிளாக்செயின் இயக்கப்பட்ட தொழில்நுட்பத்தின் அடிப்படையில், ரசிகர்கள் சேகரிக்கக்கூடிய பொருட்களை வாங்கும் முறையை மாற்றி அமைத்துள்ளது. பாலிவுட் ட்ரெண்டிலும் இது இறங்கியுள்ளது. கடந்த வாரம் தான், அமிதாப் பச்சன் தனது NFTகளின் தொகுப்பைச் சமீபத்தில் $966,000க்கு விற்றார். மிகவும் வெற்றிகரமானது மதுஷாலா தொகுப்பு, அவரது தந்தை ஹரிவன்ஷ்ராய் பச்சனின் கவிதையை வாசித்தது. இது ரூ. 5.5 கோடிக்கும் அதிகமான மதிப்புள்ள ஏலங்களைப் பெற்றது.

Most Read Articles
Best Mobiles in India

English summary
Kamal Haasan To Launch His Own Digital Avatar In The Metaverse World Soon : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X