கல்பனா சாவ்லா சாவுக்கு இதுதான் காரணமா?

கல்பனா சாவ்லா என நேற்று பிறந்த ஒரு பெண் குழந்தைக்கு பெயர் வைத்தால் கூட நம் நினைவுக்கு வருவது. விண்வெளி வீராங்கனை கல்பனா சாவ்லா தான்.

|

கல்பனா சாவ்லா என நேற்று பிறந்த ஒரு பெண் குழந்தைக்கு பெயர் வைத்தால் கூட நம் நினைவுக்கு வருவது. விண்வெளி வீராங்கனை கல்பனா சாவ்லா தான். ஆண்கள் கூட நுழைய மறுக்கு துறைகளில் ஒரு பெண் இவ்வளவு சாமர்த்தியமாக நுழைந்து சாதனை படைத்து இருக்கின்றார். உலகமே இவரின் கற்பனை கனவையும் அதை நனவாக்க செயல்பட்ட விதத்தையும் பார்த்து பூரிப்பு அடைத்து வருகிறது.

16எம்பி செல்பீ கேமராவுடன் பட்ஜெட் விலையில் விற்பனைக்கு வரும் ஹானர் 9என்.!16எம்பி செல்பீ கேமராவுடன் பட்ஜெட் விலையில் விற்பனைக்கு வரும் ஹானர் 9என்.!

கல்பனா சாவ்லா சாவுக்கு இதுதான் காரணமா?

விண்வெளி துறை மற்றும் அதனை சார்ந்த கற்பனைகளும் நனவாக்கும் ஈடுபாடும் மற்ற நாட்டு பெண்களிடம் இருந்தது கிடையாது. இந்திய பெண் கல்பனா சாவலாவிடம் மட்டுமே இருந்தது. எத்தனை நூற்றாண்டுகள் கடந்தாலும் கல்பான சாவலாவின் பெயரையோ இல்லை. சாதனையை கூட வேறு ஒரு பெண்ணால் முறியடிக்க முடியாத அளவுக்கு அவரின் செயல்பாடு இருந்துள்ளது.

கடைக் குட்டி கல்பான:

கடைக் குட்டி கல்பான:

இந்தியாவின் ஹரியான மாநிலம் கர்னால் ஊரில் 1961 ஜூலை 1ம் தேதி பிறந்தார். கல்பானாவின் தந்தை வியாபாரி. தாய் இல்லத்தரசி. கல்பனா சாவ்லா வீட்டின் கடைசி (4வது) குழந்தை. சிறு வயதில் விமான ஓவியம் வரைந்து அதற்கு வண்ணம் தீட்டி மகிழ்வார் கல்பனா. விமானம் சத்தம் கேட்டால் கூட வீட்டில் இருந்து வெளியே வந்து கண் இமைக்காமல் மறையும் வரை அதையே பார்த்து கொண்டிருப்பார். அப்போத அவரின் கனவும் கற்பனையும் துளிர் விட ஆரம் வைத்து விட்டது.

விமானப் பொறியியல் படிக்க ஆர்வம்:

விமானப் பொறியியல் படிக்க ஆர்வம்:

சிறு வயது முதலே விமானம் பற்றியும் விண்வெளி சார்ந்த கனவுகளோடு வலம் வந்து கொண்டிருந்தார் கல்பனா சாவலா. நடுத்தர குடும்பத்தில் பிறந்தாலும், அவரின் கனவு மட்டும் உயர்ந்த இடத்தில் இருந்தது. அரசு பள்ளிப்படிப்பை முடித்து விமானப் பொறியியல் படிக்க வேண்டும் என்று ஆசையை பெற்றோரிடம் தெரிவித்தார். ஆனால் குடும்பத்தினர் மறுத்தனர்.

விருப்படி விமானப் பொறியியலில் நுழைந்தார்:

விருப்படி விமானப் பொறியியலில் நுழைந்தார்:

இவரின் ஆர்வம் காரணமாக பெற்றோர் வேறு வழியில்லாமல் சண்டிகரில் உள்ள பஞ்சாப் பொறியியல் கல்லூரியில், விமானப் பொறியியல் படிக்க சேர்த்து விட்டனர். 1982ம் ஆண்டு வெற்றிகரமான முடித்து பட்டம் பெற்றார். அமெரிக்காவின் டெக்சாஸ் பல்கலைக்கழகத்தில் 1984ம் ஆண்டு கல்பனா முதுகலை பட்டமும் பெற்றார்.

முனைவர் பட்டம்:

முனைவர் பட்டம்:

கல்பனா 4 ஆண்டுகள் கழித்து கொலோரோடோ பல்கலையில் விமானப் பொறியியல் துறையில் முனைவர் பட்டும் பெற்றார். 1993ம் ஆண்டு ஒரு தனியார் நிறுவனத்தில் ஆய்வு விஞ்ஞானியாக சேர்ந்தார். விண்வெளி வீரர் ஆக வேண்டும் என்று எண்ணம் ஏற்பட்டது.

3 ஆயிரம் பேருடம் போட்ட போட்டி:

3 ஆயிரம் பேருடம் போட்ட போட்டி:

1994ம் ஆண்டு நாசாவின் விண்வெளி வீரர் பயிற்சிக்கு 3 ஆயிரம் பேர் விண்ணப்பித்தனர். இதில், தேர்வு செய்யப்பட்ட 6 பேரில் ஒருவராக கல்பனா இருந்தார். பிறகு கடுமையாக நடந்த நேர்காணல், உடல் தகுதிகளிலும் வெற்றி கண்டார்.

காதல் திருமணம்:

காதல் திருமணம்:

அமெரிக்காவுக்கு சென்ற போது, 1982ம் ஆண்டு செப்டரில் 2ம் தேதி ஜீன் பியர் ஹாரிசனும் கல்பனாவும் சந்திக் கொண்டனர். பிறகு இவர்கள் இருவருக்கும் காதல் மலர்ந்துள்ளது. பிறகு, 1983ம் ஆண்டு டிசம்பர் 3ம் தேதி இருவரும் மணம் முடித்துக் கொண்டனர். விண்வெளி பயணம் செல்லும் முன் எந்த ஒரு காரியத்தையும் முழுமனதாக செய்தால், எனக்கு ஊக்கும் ஏற்படும் கல்பனா சொல்லுவார். ஆராய்ச்சியாளர்களின் சுயசரிதைகளை விரும்பி படிப்பார். எப்போதும் தன் ஆசிரியர்களுக்கு நன்றி தெரிவிக்கும் பழக்கம் இருந்துள்ளது.

முதல் விண்வெளி பயணம்:

முதல் விண்வெளி பயணம்:

1995ம் ஆண்டு விண்வெளி பயிற்சிகளை நிறைவு செய்து வீராங்கனையானார். பிறகு இரண்டு ஆண்டுகள் கழித்து 1997ம் ஆண்டு நவம்பர் 17ல் கொலம்பியா விண்கலம் எஸ்டிஎஸ்-87 இல் 5 பேருடன் பயணம் செய்தார். 10 மில்லியன் மைல் தொலைவில் பூமியை 252 தடவை பூமியை வலம் வந்தார். பிறகு சக வீரர்களுடன் பூமிக்கு வெற்றிகரமாக திரும்பினார்.

பழுது ஏற்பட்ட விண்கலம்:

பழுது ஏற்பட்ட விண்கலம்:

2003ம் ஆண்டு ஜனவரி 16ம் தேதி ஆறு விண்வெளி வீரர்களுடன் மீண்டும் அதே கொம்பியா விண்கலத்தில் பறந்தார். விண்கலம் செல்லும் போது, வெளிபுறத்தில் பாதுகாப்பு பகுதியில் பாதிப்பு ஏற்பட்டது. பத்திரமாக குழுவினருடன் விண்வெளியில் தரையிறங்கினார். நாசாவுக்கு ஏற்பட்ட பாதிப்பு சரிசெய்ய முடியவில்லை என்று தெரிவிக்கப்பட்டது. ஆனால் நாசா விஞ்ஞானிகளால் அதிக செலவு செய்து, மாற்று விண்கலம் வழங்க முடியவில்லை.

சாதனை மைல் கல்:

சாதனை மைல் கல்:

கல்பனா சால்வா பல்வேறு ஆய்வுகளையும் வெற்றிகரமாக முடித்தார். சரிசெய்யப்படதா அதே விண்ணகலத்தில் பூமிக்கு திரும்பிக் கொண்டிருந்தார். பூமியில் தரையிறங்க 16 நிமிடங்கள் இருக்கும் போது, இடது புற இறக்கையில் அதிக வெப்ப காற்று ஊராய்வு காரணமாக வெடித்து சிதறியது. இதில் விண்கலத்தில் பயணித்த அனைவரும் இறந்தனர். அப்போது கல்பனாவுக்கு வயது 41. அவரின் உடல் கூட அடக்கம் செய்ய கிடைக்கவில்லை. அவர் செய்த உயிர் தியாகமே பெரும் சாதனை மைல் கல்லாக மாறியுள்ளது. கனவுகளை நனவாக்கி விண்வெளியிலே கல்பனா சிறகடித்து கொண்டிருக்கிறார்.

Best Mobiles in India

English summary
Kalpana Chawla killed in Columbia crash :Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X