KALKI 2898 AD படத்துல VFX சூப்பர்னு சொல்றீங்களே.. ஸ்பெஷல் எபெக்ட்ஸ் VS விஎஃப்எக்ஸ் என்ன வித்தியாசம் தெரியுமா?
கல்கி 2898 ஏடி (Kalki 2898 AD) திரைப்படத்தின் டீஸர் மற்றும் ட்ரெயிலர்களை பார்த்துவிட்டு.. "ஆஹா வெயிட்டிங்லயே வெறி ஏத்துதே!" என்கிற மைண்ட் வாய்ஸ் உங்களுக்குள் எழுந்திருந்தால்.. அதற்கு 2 காரணங்கள் மட்டுமே இருக்க முடியும். ஒன்று - இத்திரைப்படத்தின் ஸ்டார் காஸ்டிங். ஹிந்தி ரசிகர்களை கவர்ந்திழுக்க பிக் பி, தீபிகா படுகோன்.. தெலுங்கு ரசிகர்களை சுண்டி இழுக்க பிரபாஸ், தமிழ் ரசிகர்களை ஆர்வமூட்ட கமல்ஹாசன், பசுபதி.. மலையாள ரசிகர்களை எட்டிப்பிடிக்க ஷோபனா, ஆன்னா பென் என.. கல்கி 2898 கிபி திரைப்படத்தின் ஸ்டார் காஸ்டிங் பலரின் எதிர்பார்ப்புகளையும் எகிறவிட்டது!
இதற்கு ஈடாக (2வது காரணம்), மூவி லவ்வர்ஸ் மற்றும் தியேட்டர் எக்ஸ்பீரியன்ஸ் பிரியர்களின் எதிர்பார்ப்புகளை தூண்டியது - கல்கி 2898 ஏடி திரைப்படத்தின் பிரம்மாண்ட விஷூவல் எபெக்ட்ஸ் (விஎஃப்எக்ஸ்) தான். கல்கி 2898 ஏடி-யின் விஎஃப்எக்ஸ் எப்படி உள்ளதென்றால்.. "ப்பா என்ன இப்படி இருக்கு.. இந்த படத்தை பார்த்தால்.. அது தியேட்டரில் மட்டும் தான் பார்க்கணும்.. டிவில லேப்டாப்ல, மொபைல்ல லாம் பார்க்க கூடாது" என்று எண்ணமிடும் அளவிற்கு உள்ளது!

ஆனால் நம்மில் பலருக்கும், விஎஃப்எக்ஸ் (VFX) சூப்பரா இருந்துச்சு என்று மட்டுமே சொல்ல தெரியும். அதற்கு மேல் விஎஃப்எக்ஸ் பற்றி பெரிதாக தெரியாது! விஎஃப்எக்ஸ் என்றால் என்ன? ஸ்பெஷல் எஃபெக்ட்ஸ் மற்றும் விஷுவல் எஃபெக்ட்ஸ் ஆகிய இரண்டிற்கும் இடையே உள்ள வித்தியாசம் என்ன? விஎஃப்எக்ஸ்-ல் என்னென்ன வகைகள் உள்ளன? கல்கி 2898 ஏடி திரைப்படத்திற்கு முன்பாகவே விஷுவல் எஃபெக்ட்ஸ்-ல் பட்டையை கிளப்பிய திரைப்படங்கள் என்னென்ன? போன்ற கேள்விகளுக்காண பதில்கள் இதோ:
விஎஃப்எக்ஸ் என்றால் என்ன? விஷுவல் எஃபெக்ட்ஸ் என்பது திரையில் யதார்த்தத்தை மேம்படுத்தும் நோக்கத்திற்காக லைவ்-ஆக்சன் காட்சிகளுடன் இணைக்கப்பட்ட கம்ப்யூட்டர் ஜெனரேட்டட் அல்லது மனிபுலேடட் இமேஜரி ஆகும். ஒரு திரைப்படத்தின் சூழலை உருவாக்குவதற்கு ஆடைகள், செயற்கை கருவிகள் மற்றும் செட் டிசைன்கள் முக்கியமானவைகள் தான் என்றாலும் கூட, விஎஃப்எக்ஸ் தான் ஒரு திரைப்படத்தின் காட்சிகளை அடுத்த கட்டத்திற்கு.. இன்னும் சொல்லப்போனால் வேறொரு நிலைக்கு எடுத்து செல்ல உதவுகிறது.

ஸ்பெஷல் எஃபெக்ட்ஸ் மற்றும் விஷுவல் எஃபெக்ட்ஸ்-க்கு இடையே என்ன வித்தியாசம் உள்ளது? விஷுவல் எஃபெக்ட்ஸ் மற்றும் ஸ்பெஷல் எஃபெக்ட்ஸ் ஆகிய இரண்டுமே திரையில் யதார்த்தத்தை உயர்த்தவும் மேம்படுத்தவும் பயன்படுத்தப்படும் தொழில்நுட்பங்கள் தான். ஆனால் அவைகள் எங்கே நடக்கிறது என்பதுதான் முக்கிய வேறுபாடு.
ஸ்பெஷல் எஃபெக்ட்ஸ் (Special Effects) செட்டில் நடக்கும் - இது ஒரு நடிகரின் எஸ்எஃப்எக்ஸ் மேக்கப் முதல் ஒரு உண்மையான பாம்ப் பிளாஸ்ட் வரை தையும் குறிக்கலாம். மறுகையில் உள்ள விஷுவல் எஃபெக்ட்ஸ் (Visual Effects) ஆனது டிஜிட்டல் வழிமுறைகளை பயன்படுத்தி போஸ்ட் ப்ரொடெக்ஷனில் நடக்கும்.

விஎஃப்எக்ஸ் என்னென்ன வகைப்படும்? சிஜிஐ (CGI) என்று சுருக்கமாக அழைக்கப்படும் கம்ப்யூட்டர் ஜெனெரேடட் இமேஜரி. ஆரம்ப கட்டங்களில் டெக்ஸ்ட், பேக்கிரவுண்ட் ஸ்டாட்டிக் ஆப்ஜெக்ட்ஸ் போன்ற இரு பரிமாண படங்களை உருவாக்க உதவிய இந்த தொழில்நுட்பம் இப்போது முப்பரிமாண சூழல்கள், டெக்ஸ்ட்கள் மற்றும் பிஸிக்கல் ஆக செட்டில் இல்லாத கூறுகளை (Elements) உருவாக்க அல்லது மேம்படுத்த பயன்படுத்தப்படுகிறது.
அடுத்ததாக கம்போசிட்டிங் (Compositing, இது எந்த நேரத்திலும் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட படங்களை ஒன்றிணைந்து ஒரு ஷாட்டின் தோற்றத்தை மாற்ற அல்லது மேம்படுத்த உதவும் எபெக்ட் ஆகும். திரைப்பட தயாரிப்பில் மிகவும் பரவலாக பயன்படுத்தப்படும் கம்போசிட்டிங் - குரோமா கீ கம்போசிட்டிங் ஆகும்.
இது பொதுவாக க்ரீன் ஸ்க்ரீன் (Green Screen) என்று அழைக்கப்படுகிறது. இந்த விஎப்எக்ஸ் செயல்முறையானது ஒரு பச்சை (அல்லது நீலம்) நிற ஸ்க்ரீனுக்கு முன்னால் நடிகர்கள் மற்றும் பொருட்களை வைத்து ஷூட் செய்துவிட்ட, பின்னர் போஸ்ட் புரொடக்ஷனில் தேவையானதை செய்துகொள்ள உதவுகிறது.
மேட் பெயின்ட்டிங் கூட விஎஃப்எக்ஸ் எபெக்ட்-ன் ஒரு வகையாகும். நவீனகால திரைப்பட தயாரிப்பில், மேட் பெயின்ட்டிங் என்பது ஒரு கலைஞர் டிஜிட்டல் முறையில் பேக்கிரவுண்ட்டை வரைவார், அதன் பின்னர் அதில் நடிகர்கள் மற்றும் பொருள்கள் செருகப்படும். "கேம் ஆஃப் த்ரோன்ஸ்" சீரீஸில் இடம்பெற்ற பெரிய அளவிலான கற்பனை அமைப்புகளை உருவாக்க டிஜிட்டல் மேட் பெயின்ட்டிங்களே அதிகம் பயன்படுத்தபட்டது.
மோஷன் கேப்சர் (Motion Capture) பற்றியும் நாம் இங்கே கட்டாயம் பேச வேண்டும். சிஜிஐ-யின் முன்னேற்றம் தான் - மோஷன் கேப்சர் தொழில்நுட்பம். மோ-கேப் என்று குறிப்பிடப்படும் இந்த தொழில்நுட்பம் நடிகரின் முகபாவனைகள் மற்றும் அசைவுகளை கண்காணித்து, பின்னர் விஎப்எக்ஸ் கலைஞர்களின் உதவியோடு அவர்களின் மீது அனிமேஷன் கூறுகளை சேர்க்க முடியும்.
மோஷன் கேப்சருக்காக நடிகர்கள் பல முக்கிய தொழில்நுட்பங்களை அணிய வேண்டி இருக்கும். அது அவர்களின் உடல் எடை, இயக்கம் மற்றும் இயற்பியல் ஆகியவற்றை படம்பிடிக்கும் சென்சார்களால் மூடப்பட்ட ஒரு சூட் போன்று இருக்கும். மேலும் அவர்களின் முகபாவனைகளை படம்பிடிக்கும் வண்ணம் தலையில் கேமரா ஒன்றும் பொருத்தப்படும். இப்படியாக சேகரிக்கப்பட்ட தரவுகள் அனைத்தும் விஎப்எக்ஸ் குழுவிற்கு பயன்படுத்தக்கூடிய மென்பொருளாக தொகுக்கப்பட்டு, பின்னர் டிஜிட்டல் முறையில் உருவாக்கப்பட்ட பாத்திரமாக வடிவமைக்கப்படும்.
கல்கி 2898 ஏடி திரைப்படத்திற்கு முன்பாகவே விஷுவல் எஃபெக்ட்ஸ்-ல் பட்டையை கிளப்பிய திரைப்படங்கள் என்னென்ன? கல்கி 2898 ஏடி திரைப்படமானது அதன் வியக்க வைக்கும் விஎப்எக்ஸ்-ஆல் பார்வையாளர்களின் ஆர்வத்தை தூண்டியுள்ளது மற்றும் நிறைய பாராட்டுகளைபெற்றும் வருகிறது. இருப்பினும் கூட இத்திரைப்படத்திற்கு முன்பாகவே.. விஎப்எக்ஸ்-ல் முத்திரை பதித்த சில இந்திய திரைப்படங்கள் வெளியாகியுள்ளன.
அந்த பட்டியலில் கல்கி 2898 ஏடி திரைப்படத்தின் கதாநாயகன் ஆன பிரபாஸ் நடித்த பாகுபலி: தி கன்க்ளூஷன் (Baahubali: The Conclusion) திரைப்படமும் அடங்கும். 2017 ஆம் ஆண்டு வெளியான இத்திரைப்படத்தில் மொத்தம் 2400 விஎப்எக்ஸ் காட்சிகள் உள்ளன என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.
இதுதவிர்த்து 2010 இல் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த நடிப்பில் வெளியான எந்திரன், 2011 இல் ஷாருக் கான் நடிப்பில் வெளியான ரா 1, 2013 இல் ஹ்ரித்திக் ரோஷன் நடிப்பில் வெளியான கிரிஷ் 3, 2018 இல் வெளியான எந்திரன் பாகம் 2 (2.0), 2022 இல் ராம் சரண் மற்றும் ஜூனியர் ஏன்டிஆர் நடிப்பில் வெளியான ஆர்ஆர்ஆர், அதே 2022 இல் வெளியான பிரம்மஸ்திரா போன்ற திரைப்படங்களில் இடம்பெற விஎப்எக்ஸ் காட்சிகள் இன்னமும் பலருடைய நினைவுகளில் இருந்து நீங்காதபடி உருவாக்கப்பட்டுள்ளன. படம் எப்படி இருந்தாலும்.. இந்த பட்டியலில் கல்கி 2898 ஏடி திரைப்படமும் சேரும் என்பதில் சந்தேகமே வேண்டாம்!


Click it and Unblock the Notifications