Home
News

கல்கி 2898 ஏடி படத்தின் கிராபிக்ஸ் காட்சிகள் எப்படி இருக்கு? 600 கோடிக்கு படம் வொர்த்தா.. சுவாரசிய தகவல் இதோ

மிகவும் அதிகம் எதிர்பார்த்த கல்கி படம் இன்று திரையரங்குகளில் வெளியாகி உள்ளது. நாக் அஸ்வின் இயக்கத்தில் பிரபாஸ், கமல்ஹாசன், அமிதாப் பச்சன், தீபிகா படுகோன் உள்ளிட்ட பல முக்கியமான நடிகர்கள் இந்த கல்கி 2898 ஏடி (KALKI 2898 AD) படத்தில் உள்ளனர். குறிப்பாக கல்கி படத்தின் மிகப்பெரிய பலம் என்றால் அது விஷுவல் எஃபெக்ட்ஸ் மற்றும் ஸ்பெஷல் எஃபெக்ட்ஸ் தான்.

பிரபாஸ் நடித்த முந்தைய படமான ஆதிபுருஷ் படத்தின் கிராபிக்ஸ் காட்சிகள் பயங்கரமாக ட்ரோல் செய்யப்பட்டன. அதுவும் இவ்வளவு பணம் செலவிட்டு தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தியும் இந்தியாவில் தயாரிக்கப்படும் கிராபிக்ஸ் காட்சிகள் தரம் குறித்த பல கேள்விகள் இருந்தன. ஆனால் இந்த எல்லா கேள்விகளுக்கும் கல்கி படம் பதில் சொல்லும்படி அமைந்துள்ளது.

கல்கி 2898 ஏடி படத்தின் கிராபிக்ஸ் காட்சிகள் எப்படி இருக்கு?

அதாவது IMAX டிஜிட்டல் கேமரா, ARRI ALEXA 65 மற்றும் ARRI டிஎன்ஏ லென்ஸ்கள் என பல அதிநவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி இந்த கல்கி படம் எடுக்கப்பட்டது. குறிப்பாக படத்தின் முக்கியமான அம்சமான கல்கி கார், மஹிந்திரா ரிசர்ச் வேலி மற்றும் ஜெயம் ஆட்டோ இன்ஜினியரிங் நிறுவனங்களின் கூட்டு முயற்சியின் மூலம் மிக நுணுக்கமாக வடிவமைக்கப்பட்டு உருவாக்கப்பட்டது. மேலும் காரை உருவாக்க ரூ.4 கோடி செலவிடப்பட்டுள்ளது.

ரியல்-டைம் ரெண்டரிங் (Real-time rendering), ஏஐ-டூல்ஸ், 3டி அனிமேஷன் (3D Animation) போன்ற பல்வேறு அசத்தலான தொழில்நுட்ப வசதிகளுடன் இந்த திரைப்படம் உருவாகியுள்ளது. சுருக்கமாகக் கூறவேண்டும் என்றால் இந்த கல்கி திரைப்படத்தின் மிகப்பெரிய பலம் என்றால் படத்தின் இந்த ஸ்ச்பெஷல் எஃபக்ஸ் காட்சிகள் தான்.

குறிப்பாக இதிகாசக் கதையை சைன்ஸ் ஃபிக்ஷன் வகையோடு இணைத்து நம்பகத்தன்மையான ஒரு திரைக்கதையை உருவாக்கியிருக்கிறார் இயக்குநர் நாக் அஸ்வின். அதுவும் படத்தின் தொடக்கத்தில் வரும் குருக்ஷேத்திர போர் காட்சிகள் தொடங்கி க்ளைமேக்ஸ் வரை அசாத்தியமான ஒரு உலகத்தை கிராபிக்ஸ் உதவியுடன் நம் கண் முன்னாள் நிஜமாக இருப்பது போன்று உருவாக்கிக் காட்டியிருக்கிறார்கள்.

அதுவும் ஸ்டார் வார்ஸ், டூன் போன்ற ஹாலிவுட் படங்களில் 1000 கோடிக்கு அதிகமான பட்ஜெட்டில் உருவாக்கப்படும் விஷயங்களை 600 கோடிகளில் எடுக்கப்பட்ட படத்தில் காட்சிப்படுத்தியிருப்பது வேறலெவல் என்று தான் கூறவேண்டும். குறிப்பாக இந்த படத்தில் வெறும் இரண்டு காட்சிகளில் மட்டும் தான் கமலஹாசனைப் பார்க்க முடிகிறது. ஆனாலும், அவருடைய கதாபாத்திரம் மிரட்டி இருக்கிறது. இரண்டாம் பாதியில் கமலுடைய காட்சிகள் கண்டிப்பாக மிரள வைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கல்கி 2898 ஏடி படத்தின் கிராபிக்ஸ் காட்சிகள் எப்படி இருக்கு?

புராணத்தையும் எதிர்கால டெக்னாலஜி உலகத்தையும் மிக்ஸ் செய்து 2898ம் வருடத்தில் நடைபெற்றால் எப்படி இருக்கும் என்கிற கற்பனை கதையாகவே இந்த கல்கி படம் உருவாகி இருக்கிறது. மேலும் இந்த படம் தொழில்நுட்ப்ரீதியாக கைதட்டல்களையும் பாராட்டுக்களையும் பெற்றாலும் பொதுவாக ஹாலிவுட் படங்களின் திரைக்கதை வடிவத்தையே கல்கி படம் பின்பற்றியிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

அதேபோல் சண்டைக் காட்சிகளே படத்தின் பெரும்பாலான நேரத்தை எடுத்துக் கொள்கின்றன. ஆனால் ஆக்‌ஷன் காட்சிகளுக்குக் கொடுத்த முக்கியத்துவத்தைக் கதாபாத்திரங்களின் உணர்ச்சியைப் பலப்படுத்துவதில் கொடுத்திருக்கலாம். அதேபோல் இத்தனை பிரம்மாண்ட மேக்கிங் மற்றும் கிராபிக்ஸ் காட்சிகளை தியேட்டரில் தான் பார்த்தாக வேண்டும். ஓடிடியில் பொறுமையாக பார்த்தால் நிச்சயம் தியேட்டர் எக்ஸ்பீரியன்ஸ் கிடைக்காது.

Best Mobiles in India

English summary
KALKI 2898 AD graphics have been given a significant amount of attention: check details here
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X