கபாலி ரஜினியின் 'ப்ரிஸ்மரூபம்'..!
சமீப காலமாக ஒட்டுமொத்த சமூக வலைத்தளங்களையம் கலக்கி கொண்டிருக்கும் 2 சென்சேஷன்களின் கலவை தான் இந்த தொகுப்பு. முதல் சென்சேஷன் நம்ம சூப்பர் ஸ்டார் ரஜினி நடிப்பில் வெளியாகியுள்ள கபாலி திரைப்படம். இரண்டாவது சென்சேஷன் நமது புகைப்படங்களுக்கு கலக்கலான கார்டூனிக் எபெக்ட்டை வழங்கும் ப்ரிஸ்மா (PRISMA)..!
ப்ரிஸ்மா - புகழ்பெற்ற கலைஞர்கள் கலைப்படைப்பு பாணியை பயன்படுத்தி உங்கள் புகைப்படங்களை கார்ட்டூனிக்காக உருமாற்ற உதவும் ஒரு ஆப் ஆகும். ஒரு வகையான நரம்பியல் வலையமைப்புகள் (neural networks) மற்றும் செயற்கை நுண்ணறிவின் (artificial intelligence) தனிப்பட்ட சேர்க்கையை கொண்டு உங்களின் மறக்கமுடியாத தருணங்களை கலைநயம்மிக்கதாய் உருவாக்க ப்ரிஸ்மா உதவுகிறது..!
அப்படியான ப்ரிஸ்மா எபெக்ட் கண்களின் வழியாக கபாலி ரஜினியை கண்டால் எப்படி இருக்கும்..?? சும்மா அதிரும்ல.!

ஐபோன் :
ப்ரிஸ்மா ஒரு ஐபோன் செயலியாகும்..!

ஆண்ராய்டு :
தற்போது அதன் பிரபலத்தன்மை காரணமாக ஆண்ராய்டு பீட்டாவில் வெளியாக்கப்பட்டுள்ளது.

எளிமை :
உங்கள் போட்டவை தேர்வு செய்து விருப்பமான பில்டரை பயன்படுத்தி மிக எளிமையாக எடிட் செய்து கொள்ளலாம்.

கபாலி ரஜினி :
அப்படியாக, கபாலி ரஜினியின் சில ப்ரிஸ்மா புகைப்படங்கள் உங்களுக்காக..!

பதிவிறக்கம் :
இந்த ஆப் வெளியான ஐந்து வாரத்திற்குள் 7.5 மில்லியன் பதிவிறக்கம் செய்யப்பட்டுள்ளது.

பிரபலங்கள் :
பெரும்பாலான பிரபலங்கள் ப்ரிஸ்மா பயன்படுத்தி தங்கள் புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

ஓவியம் :
ப்ரிஸ்மா ஆப் உங்கள் புகைப்படத்தை அச்சு அசலாக ஒரு ஓவியம் போலவே மாற்றி கொடுக்கும்..!

இன்ஸ்டாகிராம் :
முகநூலை விட குறிப்பாக இன்ஸ்டாகிராமில் ப்ரிஸ்மா அதிகம் கலக்குகிறது..!


Click it and Unblock the Notifications