Home
News

தினமும் ரூ.2 கணக்கு.. மாசம் ரூ.60 எடுத்து ரெடியா வைங்க.. Tata Play டிடிஎச் மற்றும் ஆப் சேவையில் புதிய மாற்றம்!

டாடா பிளே (Tata Play) நிறுவனமானது தினமும் ரூ.2 கட்டணத்தில் அதன் தமிழ் (Tamil), மலையாளம் (Malayalam) மற்றும் இந்தி (Hindi) டாடா பிளே சந்தாதாரர்களுக்கு புதிய சேவை ஒன்றை அறிவித்துள்ளது. அது தமிழ், மலையாளம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் ஜப்பானிய அனிமேஷன்களை (Japanese animation) வழங்கும் விளம்பரமில்லா சேவை (Ad-free service) ஆன அனிமே லோக்கல் (Anime Local) ஆகும். டிவி மற்றும் டாடா ப்ளே மொபைல் ஆப் வழியாக அணுகக்கூடிய இந்த சேவை, ஒரு நாளைக்கு ரூ.2 என்கிற செலவின் கீழ் அணுக கிடைக்கும்.

டாடா பிளே நிறுவனத்தின் கூற்றுப்படி அனிமே லோக்கல் சேவையின் அணுகலை மேலும் எளிதாக்கும் வகையில், இது ஒரே நேரத்தில் டாடா ப்ளே மொபைல் ஆப் வழியாகவும் அணுக கிடைக்கும். இந்த அனிமே லோக்கல் சேவையானது நருடோ, சார்ஜென்ட் கெரோரோ, நிஞ்ஜாபாய் ரண்டாரோ, நருடோ ஷிப்புடென், பிளாக் க்ளோவர் மற்றும் ரோபோடன் போன்ற பிரபலமான அனிமேஷன் நிகழ்ச்சிகளை தமிழ், மலையாளம் மற்றும் இந்தி மொழிகளில் வழங்கும்.

தினமும் ரூ.2 கணக்கு.. Tata Play சேவையில் புதிய மாற்றம்!

இதேபோல கடந்த மார்ச் மாதம் டாடா ப்ளே டைரக்ட்-டு-ஹோம் (Direct-to-Home) சேவையின் கீழ் ரூ.99 மதிப்புள்ள புதிய சேவை ஒன்ரும் சேர்க்கப்பட்டது. அது டாடா ப்ளே 4கே (Tata Play 4K) என்று அழைக்கப்படுகிறது. இதுவொரு வேல்யூ ஆடட் சேவை (New Value added service) ஆகும். பெயர் குறிப்பிடுவது போலவே டாடா ப்ளே 4கே என்பது சூப்பர் ஹை ரெசல்யூஷனில் (Super-high resolution) கன்டென்ட்-ஐ பார்க்க உதவும் ஒரு சேவையாகும்.

இதேபோல டாடா ப்ளே நிறுவனத்தின் கீழ் ரூ.199 மதிப்பிலான இன்னொரு வேல்யூ ஆடட் சேவையும் கிடைக்கிறது. அது டாடா ப்ளே ரெக்கார்ட் பிரீமியம் (Tata Play Record Premium) என்று அழைக்கப்படுகிறது. பெயர் குறிப்பிடுவது போலவே இது, வாடிக்கையாளர்கள் தங்களுக்கு பிடித்த நிகழ்ச்சிகளை பதிவு (Record) செய்ய உதவும் ஒரு சேவையாகும்.

டாடா ப்ளே ரெக்கார்ட் பிரீமியம் சேவையின் முக்கியமான சிறப்பம்சம் என்னவென்றால், இது ஒரே நேரத்தில் பல சேனல்களில் இருந்து கன்டென்ட்-ஐ ரெக்கார்ட் செய்ய அனுமதிக்கிறது. அதாவது நீங்கள் வேறொரு சேனலில் எதையாவது பார்த்து கொண்டிருக்கும் அதே நேரத்தில், பின்னர் பார்க்க வேண்டிய மற்றொரு டிவி நிகழ்ச்சியை ரெக்கார்ட் செய்யலாம்.

இந்த சேவைக்கான சந்தாவை டாடா ப்ளேவின் அதிகாரப்பூர்வ இணையதளம் (Tata Play Website) அல்லது டாடா ப்ளே மொபைல் ஆப் (Tata Play Mobile App) வழியாக டிஜிட்டல் முறையில் வாங்கலாம். மேலும் இந்த டாடா ப்ளே ரெக்கார்ட் பிரீமியம் சேவையானது டாடா பிங்கே பிளஸ் செட்-டாப்-பாக்ஸ் (Tata Play Binge+ STB) வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே கிடைக்கும் என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.

புதிய அனிமே லோக்கல் சேவையின் துவக்கம் குறித்து, டாடா பிளே நிறுவனத்தின் தலைமை வர்த்தக மற்றும் கன்டன்ட் அதிகாரி ஆன பல்லவி பூரி பேசுகையில், "டாடா பிளே சேவையில் சேர்க்கப்பட்டுள்ள அனிமே லோக்கல் ஏற்கனவே கிடைக்கும் முழுமையான சலுகையில் மேலுமொரு கூடுதலாக இருக்கும். அனிமேஷன் கன்டென்ட்டிற்கான ரசிகர் தளம் நாளுக்கு நாள் வளர்ந்து கொண்டே வருகிறது. எனவே எங்களுடைய இந்த புதிய சேவை அவர்களுக்கு விருந்தளிக்கும் என்று நம்புகிறோம்" என்று கூறியுள்ளார்.

டாடா பிளே சேவையின் கீழ் கிடைக்கும் 45 க்கும் மேற்பட்ட பொழுதுபோக்கு மற்றும் இன்ஃபோடெயின்மென்ட் வேல்யூ ஆடட் சேவைகளின் கீழ் தற்போது அனிமே லோக்கல் சேவையும் இணைந்துள்ளது. டாடா பிளே சேவையின் கீழ் எண்டர்டெயின்மெண்ட், கிட்ஸ், லேர்னிங், ரிஜினல் கன்டென்ட் மற்றும் பக்தி போன்ற பல வகைகளை கண்டெட்களை உள்ளடக்கிய பல வகையான சேவைகள் அணுக கிடைக்கிறது என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.

Best Mobiles in India

English summary
Just Rs 2 per day Tata Play Launched Anime Local New Ad Free Japanese Animation in Tamil
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X