"நான் தான் கொன்றேன்" என்ன செய்வீங்க! ஓப்பனாக சொன்ன Elon Musk!

|

"அதை கொன்றுவிட்டேன்" என தனது ட்விட்டரின் அதிகாரப்பூர்வ கணக்கில் Elon Musk ஓப்பனாக பதிவிட்டுள்ளார். எலான் மஸ்க் ட்விட்டர் வாங்கியதில் இருந்து தினசரி குறைந்தபட்சம் ஒரு செய்தியாவது அதுகுறித்து வந்துவிடுகிறது. அதன்படி இன்று வெளியான தகவலை பார்க்கலாம்.

தினசரி குறைந்தபட்சம் ஒரு செய்தி

தினசரி குறைந்தபட்சம் ஒரு செய்தி

எலான் மஸ்க் ட்விட்டர் வாங்கியதில் இருந்து தினசரி குறைந்தபட்சம் ஒரு செய்தியாவது அதுகுறித்து வந்துவிடுகிறது. பொதுவாக ஒரு நிறுவனத்தை ஒருவர் கைப்பற்றுகிறார் என்றால் பொறுமையாக படிப்படியாக அதில் மாற்றம் செய்வது வழக்கம். ஆனால் இங்கு இருப்பவர் எலான் மஸ்க் எனவே அப்படி எல்லாம் எதிர்பார்க்க முடியாது. ட்விட்டரை வாங்கிய நாள் முதல் தினசரி ஒரு மாற்றங்களை அதில் செய்து வருகிறார் மஸ்க். எனவே தான் தினசரி குறைந்தபட்சம் ஒரு செய்தி வெளியாகிறது. அதன்படி இன்று என்னவென்று பார்க்கலாம்.

முட்டாள்தனமான விஷயங்களைச் செய்யும்

முட்டாள்தனமான விஷயங்களைச் செய்யும்

எலான் மஸ்க் பதிவிட்ட ஒரு பதிவை பார்த்துவிட்டு விஷயத்துக்கு போகலாம். "வரவிருக்கும் மாதங்களில் ட்விட்டர் பல முட்டாள்தனமான விஷயங்களைச் செய்யும் என்பதை நினைவில் கொள்ளவும். எங்கள் செயல்பாட்டின் மூலம் செய்யாததையும் மாற்றுவோம்" என குறிப்பிட்டுள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடி ட்விட்டர் கணக்கு

பிரதமர் நரேந்திர மோடி ட்விட்டர் கணக்கு

ட்விட்டரில் சமீபத்தில் வெளியான புதுப்பிப்புப்படி, தேர்ந்தெடுக்கப்பட்ட சரிபார்க்கப்பட்ட கணக்குகளுக்கு "Official" என்ற லேபிள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி தற்போது தேர்ந்தெடுக்கப்பட்ட ட்விட்டர் பக்கங்களில் Official என்ற லேபிள்களும் காட்டப்படுகிறது. பிரதமர் நரேந்திர மோடியின் அதிகாரப்பூர்வ பக்கத்தில் Official என்ற லேபிள் இடம்பெற்றிருக்கிறது.

நான்தான் அதைக் கொன்றேன்

நான்தான் அதைக் கொன்றேன்

பல அதிகாரப்பூர்வ கணக்குக்கு இந்த லேபிள் வழங்கப்பட்டு வந்த நிலையில் பலருக்கு இந்த லேபிள் நீக்கப்பட்டும் வருகிறது. அமெரிக்க யூடியூபர் மார்க்யூஸ் பிரவுன்லீ, அவரது ட்விட்டர் கணக்கின் லேபிள் மறைந்திவிட்டதை அடுத்து இதுகுறித்து ட்வீட் செய்திருந்தார். அதற்கு எலான் மஸ்க், "நான்தான் அதைக் கொன்றேன்... ப்ளூ செக் பெரிய லெவலாக இருக்கும்" என குறிப்பிட்டார்.

ப்ளூடிக் அனைவருக்கும் கிடையாதா?

ப்ளூடிக் அனைவருக்கும் கிடையாதா?

அதாவது முன்னதாக பலருக்கு "சரிபார்க்கப்பட்ட கணக்குகள்" என அங்கீகாரம் வழங்கப்பட்டது. அது இனி வழங்கப்படாது. சரி, ப்ளூடிக் கட்டணம் செலுத்த தயார் என்றாலும் முன்னதாக சரிபார்க்கப்பட்ட கணக்குகள் என அங்கீகாரம் வழங்கப்பட்ட அனைவருக்கும் லேபிள் வாங்குவதற்குக் கிடைக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரபலங்கள் என்பதில் முக்கியத்துவம் கொடுத்து இந்த ப்ளூடிக்கை வழங்க எலான் மஸ்க் முடிவெடுத்துள்ளார் என கூறப்படுகிறது.

ட்விட்டரில் ப்ளூ டிக் பெற்றவர்கள் தான் இனி உலகளவில் பிரபலம் என்பதை தோற்றுவிக்கும் முயற்சியில் எலான் மஸ்க் இறங்கிட்டாரோ என்னவோ தெரியவில்லை.

ட்விட்டரை வாங்க விருப்பம் தெரிவித்த மஸ்க்

ட்விட்டரை வாங்க விருப்பம் தெரிவித்த மஸ்க்

ஆரம்பக்கட்டத்தில் ட்விட்டரை வாங்க விருப்பம் தெரிவித்த மஸ்க், பின் இந்த முடிவில் இருந்து பின்வாங்கினார். இதற்கு பிரதான காரணமாக ஒன்றை குறிப்பிட்டார். அதாவது ட்விட்டரில் ஸ்பேம் மற்றும் போலி கணக்குகள் குறித்த விவரத்தை நிர்வாகம் முறையாக சமர்பிக்கவில்லை என மஸ்க் கூறினார். இதையடுத்து பல்வேறு விவாதங்கள் சர்ச்சைகள் எழுந்தது. இவை அனைத்துக்கும் பிறகும் மஸ்க் ட்விட்டரை வாங்க மீண்டும் விருப்பம் தெரிவித்து அதை வாங்கவும் செய்தார்.

நினைத்ததை செய்யும் மஸ்க்

நினைத்ததை செய்யும் மஸ்க்

ட்விட்டரை மஸ்க் வாங்கியவுடன் ஸ்பேம் மற்றும் போலி கணக்குகள் குறித்த நடவடிக்கை எடுப்பாரா? முந்தை நிர்வாகத்தின் குற்றத்தை சுட்டிக்காட்டிய மஸ்க் அவரது தலைமையில் பொறுப்பேற்ற உடன் அதை சரி செய்வாரா? என்ற கேள்விகள் முன்வைக்கப்பட்டது. இந்த கேள்விகளுக்கு பதிலளிக்கும் வகையில் மஸ்க் நடவடிக்கையில் இறங்கி இருக்கிறார்.

போலி ஆள்மாறாட்ட கணக்குகள்

போலி ஆள்மாறாட்ட கணக்குகள்

அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனை போல ஆள்மாறாட்டம் செய்து பல கணக்குகள் கண்டறியப்பட்டதை அடுத்து மஸ்க் இந்த முடிவை எடுத்துள்ளார் என கூறப்படுகிறது. அமெரிக்க அதிபருக்கு மட்டும் இந்த சிக்கல் இல்லை சிறிய நடிகர் முதல் ஒவ்வொரு பிரபலங்களுக்கும் இந்த சிக்கல் இருந்தது. அது என் கணக்கு அல்ல, இது தான் எனது அதிகாரப்பூர்வ கணக்கு என பலரும் விளக்கமளித்ததை பார்த்திருப்போம். அந்தளவிற்கு ட்விட்டரில் போலி ஆள்மாறாட்ட கணக்குகள் இருந்தது.

எச்சரிக்கை இன்றி தடை

எச்சரிக்கை இன்றி தடை

இதுகுறித்த அறிவிப்பை மஸ்க் ட்வீட்டின் மூலம் வெளியிட்டார். அதில், ட்விட்டர் தற்போது நேரடியாக கணக்குகளை இடை நிறுத்தும் எனவும் மற்றவர்களை போல் ஆள்மாறாட்டம் செய்வது கண்டறியப்பட்டால் எச்சரிக்கை இன்றி தடை செய்யப்படும் எனவும் குறிப்பிட்டுள்ளார். ட்விட்டர் பயனர்களின் உண்மைத் தன்மைக்கு இந்த நடவடிக்கை உகந்ததாக இருக்கும் எனவும் கூறப்படுகிறது.

Best Mobiles in India

English summary
Just Killed It! Elon Musk tweeted on his official Twitter account Do You Know the Reason?

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X