பெட்ரூம்ல ஒன்னு.. ஹால்ல ஒன்னு.. வெறும் ரூ.7649 க்கும், ரூ.9999 ஸ்மார்ட் TV.. Amazonல் அள்ளும் ஆர்டர்கள்!
அவரசப்பட்டு எந்த ஸ்மார்ட் டிவியையும் வாங்கி விட வேண்டாம்.. அமேசான் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் சேல் வரட்டும்.. சூப்பர் சூப்பரான ஆஃபர்கள் கிடைக்கும்.. அப்போது ஒரு நல்ல ஸ்மார்ட் டிவியாக பார்த்து வாங்கி விடலாம் என்று காத்திருந்த பலரில் நீங்கள் ஒருவரா?
ஆமென்றால் இதுவே அதற்கான சரியான நேரம். பலரும் ஆவலோடு காத்திருந்த அமேசான் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் சேல் (Amazon Great Indian Festival Sale) தற்போது நேரலையில் உள்ளது. இம்முறை, ஸ்மார்ட்போன்கள் மீது மட்டுமின்றி.. பல நிறுவனங்களின் பிரபலமான ஸ்மார்ட் டிவிகள் மீதும் கூட அட்டகாசமான தள்ளுபடிகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

உங்களிடம் ரூ.10,000 பட்ஜெட் இருந்தால் போதும்.. இன்னும் குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்றால் ரூ.7,649 இருந்தால் போதும்.. இந்த அமேசான் விற்பனையில் உங்களால் புதிய ஸ்மார்ட் டிவியை வாங்க முடியும். அதென்ன டிவி மாடல்? வேறு என்னென்ன டிவிகளின் மீது நம்ப முடியாத தள்ளுபடி கிடைக்கிறது? இதோ விவரங்கள்:
01. எம்ஐ 32-இன்ச் ஏ சீரிஸ் ஸ்மார்ட் கூகுள் டிவி (Mi 32-inch A Series Smart Google TV): நெட்பிளிக்ஸ், அமேசான் ப்ரைம், யூட்யூப் மற்றும் பிற ஆப்களுக்கான ஆதரவுடன் வரும் இந்த 32-இன்ச் ஷாவ்மீ ஸ்மார்ட் டிவியானது அமேசான் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் விற்பனையின் போது, ரூ.3,990 என்கிற எக்ஸ்சேஞ்ச் தள்ளுபடியுடன் சேர்த்து வெறும் ரூ.9,999 க்கு வாங்க கிடைக்கும்.
02. சாம்சங் 32-இன்ச் வொண்டர்டெயின்மெண்ட் சீரீஸ் எல்இடி ஸ்மார்ட் டிவி (Samsung 32-inch Wondertainment Series LED Smart TV): சாம்சங் நிறுவனத்தின் இந்த 32-இன்ச் ஸ்மார்ட் டிவியானது, நிகழும் அமேசான் விற்பனையின் போது ரூ.22,990 க்கு பதிலாக வெறும் ரூ.13,990 க்கு வாங்க கிடைக்கும்.
03. சாம்சங் 43-இன்ச் கிரிஸ்டல் ஐஸ்மார்ட் எல்இடி டிவி (Samsung 43-inch Crystal iSmart Smart LED TV): அமேசான் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் விற்பனையின் போது சாம்சங்கின் இந்த 43-இன்ச் ஸ்மார்ட் டிவியானது ரூ.22,740 க்கு வாங்க கிடைக்கும். நினைவூட்டும் வன்ணம் இதன் அசல் விலை ரூ. 26,990 ஆகும். இதே டிவி 50, 55 மற்றும் 60 இன்ச் டிஸ்பிளே சைஸ் வகைகளிலும் வாங்க கிடைக்கிறது.
04. ரெட்மி 32 இன்ச் எஃப் சீரிஸ் ஸ்மார்ட் எல்இடி ஃபயர் டிவி (Redmi 32-inch F Series Smart LED Fire TV): ரெட்மி நிறுவனத்தின் இந்த 32 இன்ச் ஸ்மார்ட் டிவி தான் இந்த பட்டியலின் ஹைட்லட். ஏனென்றால் இதுதான் வெறும் ரூ.7,649 க்கு வாங்க கிடைக்கிறது. நினைவூட்டும் வண்ணம் இதன் அசல் விலை ரூ.8,999 ஆகும்
05. எல்ஜி 55-இன்ச் 4கே ஸ்மார்ட் எல்இடி டிவி (LG 55-inch 4K Smart LED TV): 32-இன்ச் அல்லது 43-இன்ச் மாடல்கள் எல்லாம் உங்கள் வீட்டிற்கு சிறியதாக இருக்கும் என்று நீங்கள் நினைத்தால், மேசான் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் விற்பனையின் போது, எல்ஜி நிறுவனத்தின் இந்த 55-இன்ச் ஸ்மார்ட் டிவியை நீங்கள் கருத்தில் கொள்ளலாம்.
எல்ஜியின் இந்த 55-இன்ச் ஸ்மார்ட் எல்இடி டிவியானது ரூ.3,990 என்கிற நேரடி தள்ளுபடியை பெற்று ரூ.33,740 க்கு வாங்க கிடைக்கிறது. நினைவூட்டும் வண்ணம் எல்ஜி 55-இன்ச் 4கே ஸ்மார்ட் எல்இடி டிவியின் அசல் விலை ரூ.39,990 ஆகும். மேற்கண்ட 5 ஸ்மார்ட் டிவிகளை தவிர்த்து மேலும் பல மாடல்கள் மீதும் சலுகைகள் கிடைக்கின்றன தான். இருப்பினும் அமேசானின் ஸ்மார்ட் டிவி டீல்களில் இவைகள் தான் பேஸ்ட் ஆக உள்ளன!


Click it and Unblock the Notifications








