என்னது! இதுவொரு இயர்பட்ஸ் சாதனமா? குழந்தைகளுக்கு இது பாதுகாப்பானதா? நம்பவே முடியாத அம்சம்!
Just Corseca இந்தியாவில் அதன் புதிய ஜோடி TWS இயர்பட்ஸ்களை அறிமுகம் செய்துள்ளது. இந்த புதிய இயர்பட்ஸ்களை நிறுவனம் ஜஸ்ட் கோர்செகா ஸ்டால்கர் (Just Corseca Stalker) என்ற பெயரில் புது மாதிரியான இயர்பட்ஸ் சாதனத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
Just Corseca பிராண்டின் புதிய ஆடியோ தயாரிப்பு ஒரு சிறிய மேசை உருவக பொம்மை போன்ற பொருள் உடன் சேர்ந்து வருகிறது. இந்த கௌபாய் போன்ற சிறிய பொம்மை உள்ளே இயர்பட்ஸ் சாதனங்களை வைக்கும்படி, நிறுவனம் அதன் TWS சாதனத்தை உருவாக்கியுள்ளது. இந்த இயர்பட்ஸ்கள் இன்பில்ட் வாய்ஸ் கண்ட்ரோல், டச் கண்ட்ரோல் போன்ற பல அம்சங்களை கொண்டுள்ளது.

Just Corseca Stalker TWS இப்போது வெறும் 6,999 ரூபாய்க்கு இந்தியாவில் வாங்க கிடைக்கிறது. இது 12 மாத உத்தரவாதக் காலத்துடன் விற்பனைக்கு கிடைக்கிறது. தயாரிப்பை நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ வலைத்தளமான Justcorseca.in மற்றும் Amazon, Flipkart மற்றும் Myntra போன்ற இ-காமர்ஸ் தளங்களின் வழியாக நாம் வாங்கலாம். இது ப்ளூ, பிளாக் மற்றும் பிங்க் ஆகிய 3 நிறங்களில் வாங்க கிடைக்கிறது.
இந்தியா முழுவதும் உள்ள பிற ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் சில்லறை விற்பனைக் கடைகள் மூலமாகவும் இந்த Just Corseca Stalker TWS இயர்பட்ஸ் சாதனத்தை நாம் வாங்க முடியும். அதிகாரப்பூர்வ இணையதளத்தில் FIRST50 என்ற கூப்பன் குறியீட்டைப் பயன்படுத்தி முதல் 50 வாடிக்கையாளர்களுக்கு FLAT 50% தள்ளுபடியையும் பிராண்ட் வழங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது. வித்தியாசமான இயர்பட்ஸ் சாதனம் வேணுமென்றால், இதை உடனே வாங்குங்கள்.
ஜஸ்ட் கோர்செகா ஸ்டால்கர் இயர்பட்ஸ் சாதனம் மேசையில் வைக்கக்கூடிய ஒரு அலங்கார உருவ பொம்மையுடன் வருவது வித்தியாசமான இரட்டிப்பு நன்மையாகிறது. இந்த சாதனம்சமீபத்திய J6973 புளூடூத் V5.1 சிப்செட் அடிப்படையில், Just Corseca Stalker 10 மீட்டர் இயங்கும் வரம்பைக் கொண்டுள்ளது.

இது மெலிதான மற்றும் இலகுரக இயர்பட்ஸ்களை கொண்டுள்ளது.இவை அதன் சார்ஜிங் பாட்களில் வைக்கப்படும்போது விவேகமானதாக இருக்கும். Just Corseca பிராண்டின் படி, ஒரு பைரேட் கிட் எஃபிஜியின் ஷூக்கள் போல் இவை காட்சியளிக்கின்றன. நீங்கள் இயர்பட்ஸை பயன்படுத்த விரும்பினால், அது உடனடியாக உங்கள் ஸ்மார்ட்போன் அல்லது லேப்டாப் உடன் இணைகிறது.
ஒவ்வொரு இயர்பட்ஸ் சாதனங்களும் மேற்பரப்பிலும் ட்ராக் மாற்றம், வால்யூம் சரிசெய்தல், அழைப்புக்கு பதில் அளித்தல் மற்றும் வாய்ஸ் கண்ட்ரோல்லருக்கான அணுகலை செயல்படுத்த மென்மையான டச் கண்ட்ரோல் அம்சத்துடன் வருகிறது. கூடுதலாக, இது இன்பில்ட் வாய்ஸ் அங்கீகார அம்சத்தையும் கொண்டுள்ளது. இதைப் பயன்படுத்தி நீங்கள் கடைசியாக அழைக்கப்பட்ட எண்ணை மீண்டும் டயல் செய்யும்படி கேட்கலாம்.
மேலும் அழைப்பவரின் பெயரையும் உங்கள் ஐபோனின் பேட்டரி நிலையையும் உங்களுக்குத் தெரிவிக்க குரல் அறிவிப்பு அம்சத்தை நீங்கள் வாய்ஸ் கண்ட்ரோல் மூலம் பயன்படுத்தலாம். ஒவ்வொரு இயர்பட்ஸ்களும் 3 மணிநேரம் வரை பேசும் நேரத்தை வழங்குகின்றன. அதேபோல், வெறும் 2 மணிநேரம் சார்ஜ் செய்தால் முழு நேர பிளே நேரத்தை வழங்குகின்றன.


Click it and Unblock the Notifications








