பார்க்கவே வித்தியாசமா இருக்கே.! இப்படி ஒரு TWS இயர்பட்ஸ்-ஆ? அடடே சவுண்ட்லாம் கெத்தா கேக்குதே!
ஜஸ்ட் கோர்செகா (Just Corseca) என்ற பிராண்டை இதற்கு முன் எத்தனை முறை நீங்கள் கேள்விப்பட்டிருப்பீர்கள் என்று எனக்கு தெரியவில்லை. இருந்தாலும், இந்த பிராண்டை பற்றி இப்போது தெரிந்துகொள்ளுங்கள். இது தரமான சாதனங்களை தயாரிக்கும் இந்திய நிறுவனமாகும்.
Just Corseca அதன் போர்ட்போலியோவில் ஸ்மார்ட் வாட்ச், ஸ்மார்ட் கிளாஸ், ப்ளூடூத் ஸ்பீக்கர், இயர்போன்ஸ் மற்றும் இயர்பட்ஸ் என்று பல தயாரிப்புகளை உள்நாட்டில் விற்பனை செய்து வருகிறது. இப்போது Just Corseca நிறுவனம் புதிதாக ஒரு TWS இயர்பட்ஸ் சாதனத்தை அதன் பட்டியலில் சேர்த்துள்ளது. இது பார்க்கவே வித்தியாசமான தோற்றத்தில் ட்ரான்ஸ்பரென்ட்டாக காட்சியளிக்கிறது. ஒரு வகையில் Nothing Ear (1) சாதனத்தை போல சாயலை கொண்டுள்ளது.

இருப்பினும், இது முழுமையாக அப்படி இல்லை என்பது விதியசமாக உள்ளது. Just Corseca நிறுவனம் இப்போது Just Corseca Snow Pods என்ற புதிய TWS இயர்பட்ஸ் சாதனத்தை அறிமுகம் செய்துள்ளது. இது பிரீமியம் தரத்தில், அட்டகாசமான வடிவமைப்புடன் உருவாக்கப்பட்டுள்ளது. Just Corseca Snow Pods TWS ஆனது, நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான corseca.in மற்றும் Amazon, Flipkart மற்றும் Myntra போன்ற இ-காமர்ஸ் தளங்களில் கிடைக்கிறது.
இதன் விலை ரூ.2,999 ஆகும். பிற ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் சில்லறை விற்பனை மூலமாகவும் இந்த இயர்பட்ஸ் சாதனத்தை வாங்கலாம். இது 12 மாத உத்தரவாதத்துடன் கிடைக்கிறது. Just Corseca Snow Pods TWS Earbuds ஆனது சமீபத்திய JL6983D2 மேம்பட்ட புளூடூத் V5.3 அம்சத்தைக் கொண்டுள்ளது. இது பாஸ்ட் சிங்க் மற்றும் பாஸ்ட் பேரிங் இணைப்பு அம்சத்தை ஆதரிக்கிறது. இதனால் இயர்பட்கள் தானாகவே உங்கள் சந்தானத்துடன் இணைந்து இயக்கப்பட்டும்.
சார்ஜிங் கேஸைத் திறந்தவுடன் ஆட்டோமேட்டிக் பேரிங் நடைபெறும். இந்த Just Corseca Snow Pods மல்டி பேரிங் அம்சத்துடன் வருகிறது. இதை பல சாதனங்களுடன் இணைக்க முடியும். ஒவ்வொரு இயர்பட்ஸ் கருவியும் 38 கிராம் எடையுடன் வருகிறது. ஒவ்வொரு இயர்பட்ஸ் சாதனமும் டச் பேனல் மூலம் டச் கண்ட்ரோல் அம்சத்துடன் இயங்குகிறது. உதாரணமாக, உங்களுக்கு வரும் அழைப்புகளை சிம்பிள் டச் மூலம் பதில் அளிக்கலாம்.
உங்கள் இயர்பட்ஸ் சாதனத்தின் வால்யூம் சத்தத்தை நீங்கள் கண்ட்ரோல் செய்யலாம். உங்கள் மியூசிக் அனுபவத்தை மேம்படுத்த இதில் மியூசிக் கண்ட்ரோல் அம்சமும் உள்ளது. இந்த Just Corseca Snow Pods உங்கள் ஸ்மார்ட்போனின் வாய்ஸ் அஸிஸ்டன்டை தொடர்பு கொள்ளவும் அனுமதிக்கிறது. ஆண்ட்ராய்டு பயனர்கள் கூகுள் அசிஸ்டன்ட் அம்சத்தையும், iOS பயனர்கள் Siri அம்சத்தையும் பயன்படுத்தலாம்.
பேட்டரி ஆயுளைப் பொறுத்தவரை, ஒவ்வொரு இயர்பட்ஸிலும் 30mah பேட்டரி உள்ளது. இது சுமார் 5 மணி நேரம் பிளேபேக் நேரத்தை வழங்குகிறது. இதன் சார்ஜிங் கேஸ் 200mah பேட்டரி உடன் வருகிறது. இது மொத்தம் 20 மணிநேரத்தை வழங்குகிறது. கூடுதலாக Just Corseca Snow Pods சாதனத்தை 5 முறை ரீசார்ஜ் செய்ய அனுமதிக்கும் சார்ஜ்ஜை இது கொண்டுள்ளது. வித்தியாசமாக இருக்கும் இந்த சாதனத்தை ட்ரை செய்து பாருங்கள்.


Click it and Unblock the Notifications