கஸ்டமர்ஸ் கடுப்பு.. Jio-வின் ரூ.11 திட்டம் அறிமுகமான மறுநாளே.. பிரபல Vodafone திட்டத்தின் நன்மை குறைப்பு!
முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் ரூ.11 மதிப்புள்ள புதிய திட்டத்தை அறிமுகம் செய்து, ஒட்டுமொத்த டெலிகாம் மார்க்கெட்டையுமே மிரளவிட்டு இருந்தது. ஜியோவின் புதிய ரூ.11 திட்டம் ஒரு டேட்டா வவுச்சர் ஆகும். இந்த திட்டத்தின் கீழ் மொத்தம் 10ஜிபி அளவிலான 4ஜி டேட்டா கிடைக்கும். ஆனால் இந்த திட்டத்தின் வேலிடிட்டி வெறும் 1 மணி நேரம் மட்டுமே ஆகும்
1 மணி நேரத்திற்குள் பெரிய அளவிலான ஃபைல்களை டவுன்லோட் செய்ய விரும்பும் பயனர்களுக்கு ஜியோவின் ரூ.11 திட்டம் ஒரு வரப்பிரசாதமாக இருக்கும். இப்படி ஒரு அட்டகாசமான திட்டம் அறிமுகமான வேகத்தில்.. வோடாபோன் ஐடியா (Vodafone Idea) நிறுவனம் தனது பிரபலமான டேட்டா வவுச்சர் ஒன்றில் முக்கிய மாற்றத்தை செய்துள்ளது.

உடனே வோடபோன் ஐடியாவும் 10 ஜிபி டேட்டாவை அள்ளி கொடுக்கிறது என்று நினைத்துக்கொள்ள வேண்டாம். ஏற்கனவே கொடுத்து கொண்டிருந்த டேட்டாவை குறைத்துள்ளது. இந்நிறுவனம் அதன் ரூ.23 ப்ரீபெய்ட் திட்டத்தின் பலன்களை "சைலன்ட் ஆக" மறுசீரமைத்துள்ளது. அறியாதோர்களுக்கு ரூ.24 என்பது ஒரு 4ஜி டேட்டா வவுச்சர் ஆகும்; மலிவு விலையில் குறுகிய கால வேலிடிட்டியை விரும்பும் விஐ பயனர்கள் மத்தியில் மிகவும் பிரபலமான திட்டமாகும்.
கடத்த 2023 ஆம் ஆண்டில் அறிமுகமான ரூ.23 ப்ரீபெய்ட் திட்டமானது நேற்று வரையிலாக 1 நாள் என்கிற வேலிடிட்டியுடன் 1.2ஜிபி டேட்டாவை வழங்கி வந்தது. தற்போது இது 1ஜிபி டேட்டாவை மட்டுமே வழங்குகிறது. அதாவது ரூ.23 திட்டத்தின் டேட்டா நன்மையில் 200எம்பி டேட்டா குறைக்கப்பட்டு உள்ளது.
ஆக இனிமேல் 1ஜிபிக்கும் அதிகமாக எட்ஸ்ரா டேட்டாவை தேடும் வோடாபோன் பயனர்கள் ரூ. 3 அதிகமாக செலவழித்து, ரூ.26 மதிப்புள்ள டேட்டா பிளானை தான் ரீசார்ஜ் செய்ய வேண்டும், இந்த டேட்டா பூஸ்டர் 1.5ஜிபி டேட்டாவை 1 நாள் என்கிற வேலிடிட்டியின் கீழ் வழங்குகிறது. நாங்கள் இங்கே குறிப்பிடும் 1 நாள் என்கிற வேலிடிட்டி என்பது சர்வீஸ் வேலிடிட்டி அல்ல என்பதை குறிப்பிட விரும்புகிறோம்.
அதாவது ரூ.23 மற்றும் ரூ.26 திட்டங்களுக்கு சர்வீஸ் வேலிடிட்டி எதுவும் கிடையாது. இதன் அர்த்தம் உங்களிடம் ஏற்கனவே ஆக்டிவ் ஆக உள்ள மெயின் ரீசார்ஜ் இருந்தால் மட்டுமே, கூடுதல் டேட்டா தேவைப்படும் போது ரூ.23 அல்லது ரூ.26 டேட்டா பூஸ்டர்களை ரீசார்ஜ் செய்ய முடியும்.
இவ்விரு திட்டங்களில் ஒன்றை ரீசார்ஜ் செய்வதன் மூலம் உங்கள் சிம் காரட்டை ஆக்டிவ் ஆக வைத்திருக்க முடியும் என்று நம்பினால் அது தவறு; அப்படி செய்ய முடியாது. உண்மையில்.. ஆக்டிவ் பிளான் இல்லாமல்.. ஒரு மெயின் ரீசார்ஜ் இல்லாமல் உங்களால் ஒரு டேட்டா வவுச்சரை ரீசார்ஜ் செய்யவே முடியாது.
இருப்பினும் ரூ.23 மற்றும் ரூ.26 ஆகிய திட்டங்களுடன் குறிப்பிடப்படும் 1 நாள் வேலிடிட்டி என்பது அவைகள் வழங்கும் டேட்டா நன்மைகளுக்கானது. அதாவது 1 நாளுக்குள் 1ஜிபி அல்லது 1.5ஜிபி டேட்டாவை பயன்படுத்தி விட வேண்டும், இல்லை என்றால் அது காலாவதி ஆகிவிடும். டேட்டா பூஸ்டர் வழியாக கிடைக்கும் டேட்டாவை பயன்படுத்தாமல் இருந்தால், அது மறுநாள் கிடைக்குமா? கிடைக்காதா என்கிற குழப்பத்தை தீர்க்கவே, அவைகள் 1 நாள் வேலிடிட்டி என்று குறிப்பிடப்படுகின்றன.
ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தினம் புதிய ரூ.11 ப்ரீபெய்ட் திட்டத்திலும் இப்படி ஒரு குறை உள்ளது. இது 1 மணிநேர வேலிடிட்டியுடன் வந்தாலும், முன்னரே குறிப்பிட்டபடி இதுவொரு 4ஜி டேட்டா வவுச்சர் ஆகும். உங்களுடைய பகுதியில் ஜியோ 4ஜி-யின் வேகம் தரமாக இருந்தால் ஒரு பிரச்சனையும் இல்லை; ஒருவேளை போதுமானதாக இல்லை என்றால், ரூ.11 திட்டத்தின் கீழ் கிடைக்கும் 10ஜிபி அளவிலான 4ஜி டேட்டாவையும் உங்களால் முழுமையாக பயன்படுத்த முடியாது.


Click it and Unblock the Notifications