மண்டியிட்ட Apple.. பல்பு வாங்கிய iPhone 15 சீரீஸ்..? அறிமுகமான ஒரே வாரத்துல ரூ.6,000 ஆஃபர் அறிவிப்பு!
கடந்த செப்.12 ஆம் தேதியன்று உலகளவில் அறிமுகமான ஆப்பிளின் புதிய ஐபோன் 15 சீரீஸின் ப்ரீ-ஆர்டர்கள் (அதாவது முன்பதிவுகள்) தொடங்கியுள்ள நிலையில், முழு ஐபோன் 15 சீரீஸ் மீதும், அதாவது 4 புதிய ஐபோன்கள் மீதும் ரூ.6000 வரையிலான தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது.
அறிமுகம் செய்யப்பட்ட 1 வாரத்தில் ஐபோன் 15 சீரீஸ் மீது அறிவிக்கப்பட்டுள்ள இந்த சலுகை.. "ஐபோன் 15 சீரீஸ் பல்பு வாங்கி விட்டதா?".. "எதிர்பார்த்த அளவில் முன்பதிவுகள் நடக்கவில்லையா? அதனால் தான் அறிமுகமான வேகத்தில் ரூ.6000 தள்ளுபடியை அறிவிக்கப்பட்டு உள்ளதா?" போன்ற கேள்விகளையும், சந்தேகங்களையும் கிளப்பி உள்ளது!

இந்த கேள்விகளுக்கான பதில்களை தேடுவதை விட, வந்த வரை லாபம் என்று புதிய ஐபோன்கள் மீது கிடைக்கும் இந்த சலுகையை பயன்படுத்தி கொள்வதே புத்திசாலித்தனம். இந்த சலுகையில் உள்ள முக்கியமான டிவிஸ்ட் என்னவென்றால்.. இது ஆப்பிள் இந்தியா (Apple India) இணையதளத்திலும், டெல்லி மற்றும் மும்பையில் உள்ள ஆப்பிளின் அதிகாரப்பூர்வ ஸ்டோர்களில் மட்டுமே அணுக கிடைக்கும்.
ஆப்பிள் இந்தியா இணையதளம் வழியாக ஐபோன் 15 சீரீஸின் கீழ் அறிமுகம் செய்யப்பட்டுள்ள 4 மாடல்களில் ஏதேனும் ஒன்றை, எச்டிஎப்சி (HDFC) பேங்க் கார்டை பயன்படுத்தி வாங்கினால் உங்களுக்கு ரூ.6000 வரையிலான உடனடி தள்ளுபடி கிடைக்கும். நினைவூட்டும் வண்ணம் அனைத்து ஐபோன் 15 சீரீஸ் மாடல்களும் வருகிற செப்டம்பர் 22 ஆம் தேதி முதல் ஸ்டோர்களில் வாங்க கிடைக்கும்.
ரூ.6000 என்கிற தள்ளுபடிகளுக்கு பிறகான ஐபோன் 15 சீரீஸ் மாடல்களின் விலை நிர்ணயம் என்ன? ஐபோன் 15 (iPhone 15) மாடலின் அசல் விலை ரூ.79,900, ஆனால் தள்ளுபடியின் கீழ் இப்போது ரூ.74,900 க்கு வாங்க கிடைக்கும். ஐபோன் 15 பிளஸ் (iPhone 15 Plus) மாடலின் அசல் விலை ரூ.89,900, ஆனால் தள்ளுபடியின் கீழ் இப்போது ரூ.84,900 க்கு வாங்க கிடைக்கும்.
இதேபோல ஐபோன் 15 ப்ரோ (iPhone 15 Pro) மாடலின் அசல் விலை ரூ.1.34,900, ஆனால் தள்ளுபடியின் கீழ் இப்போது ரூ.1.28,900 க்கு வாங்க கிடைக்கும். ஐபோன் 15 ப்ரோ மேக்ஸ் (iPhone 15 Pro Max) மாடலின் அசல் விலை ரூ.1,59,900, ஆனால் தள்ளுபடியின் கீழ் இப்போது ரூ.1.53,900 க்கு வாங்க கிடைக்கும்.
பழைய ஐபோன்களின் புதிய விலைகள்: ஐபோன் 14 (iPhone 14) மாடலின் அசல் விலை ரூ.69,900, ஆனால் தள்ளுபடியின் கீழ் இப்போது ரூ.65,900 க்கு வாங்க கிடைக்கும். ஐபோன் 14 பிளஸ் (iPhone 14 Plus) மாடலின் அசல் விலை ரூ.79,900, ஆனால் தள்ளுபடியின் கீழ் இப்போது ரூ.75,900 க்கு வாங்க கிடைக்கும்.
ஐபோன் 13 (iPhone 13) மாடலின் அசல் விலை ரூ.59,900, ஆனால் தள்ளுபடியின் கீழ் இப்போது ரூ.56,900 க்கு வாங்க கிடைக்கும். ஐபோன் எஸ்இ (iPhone SE) மாடலின் அசல் விலை ரூ.49,900, ஆனால் தள்ளுபடியின் கீழ் இப்போது ரூ.47,900 க்கு வாங்க கிடைக்கும்.
ஆப்பிளின் மற்ற தயாரிப்புகளின் மீது கிடைக்கும் சலுகைகள்: ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 9-ன் (Apple Watch Series 9) அசல் விலை ரூ.41,900 ஆகும், ஆனால் தள்ளுபடிக்கு பிறகு இது ரூ.39,400 க்கு வாங்க கிடைக்கிறது. இதேபோல ஆப்பிள் வாட்ச் அல்ட்ரா 2-வின் (Apple Watch Ultra 2) அசல் விலை ரூ.89,900 ஆகும், ஆனால் தள்ளுபடிக்கு பிறகு இது ரூ.86,900 க்கு வாங்க கிடைக்கும்.
கடைசியாக ஆப்பிள் வாட்ச் எஸ்இ மாடலின் அசல் விலை ரூ.29,900 ஆகும், ஆனால் தள்ளுபடிக்கு பிறகு இது ரூ.28,400 க்கு வாங்க கிடைக்கிறது. மேற்கண்ட ஆப்பிள் தயாரிப்புகளை தவிர, ஆப்பிள் ஐபாட்ஸ், மேக்புக்ஸ் மற்றும் பல தயாரிப்புகளும் கூட தள்ளுபடி விலையின் கீழ் வாங்க கிடைக்கிறது.


Click it and Unblock the Notifications








