பூமியை விட 11 மடங்கு பெரிய கிரகம் இது தானா? அம்மாடியோவ் எவ்வளவு பெருசு! வீடியோ பார்த்து வியந்த மக்கள்..

|

நமது சூரிய குடும்பத்தில் மிகவும் முக்கியமான கிரகமாக, நாம் வசிக்கும் பூமி விஞ்ஞானிகளால் பாராட்டப்படுகிறது. இதற்கான முக்கிய காரணம், நமது சூரியனில் இருந்து மூன்றாவது கிரகமாகத் திகழும் பூமி மட்டுமே நமது ஒட்டுமொத்த பால்வழி அண்டத்தில் உயிர்களைப் பாதுகாக்கும் ஒரே வானியல் பொருளாகச் சூரியனைச் சுற்றி வலம் வருகிறது. சூரியக் குடும்பம் முழுவதும் அதிக அளவு திரவ நீர் காணப்படும் ஒரே கிரகமும் பூமி மட்டுமே. பூமியின் மேற்பரப்பு சுமார் 71% கடலால் ஆனது, இதில் துருவ பனி, ஏரிகள் மற்றும் ஆறுகள் என்று நீர் வளம் கிரகம் முழுதும் பரவியுள்ளது.

பூமியை விட 11 மடங்கு பெரிய கிரகம் உண்மையில் இருக்கிறதா?

பூமியை விட 11 மடங்கு பெரிய கிரகம் உண்மையில் இருக்கிறதா?

நமது பூமியின் அளவு சுமார் 6,371 km ஆரம் கொண்டது. ஒரு முழுமையான வட்டத்தின் அரை நீளம் தான் ஆரம் என்று குறிப்பிடப்படுகிறது. ஒரு சராசரி மனிதன் முடிந்த வரை வேகமாகப் பயணித்து, பூமியைச் சுற்றி வரக் குறைந்தது 80 நாட்கள் எடுத்துக்கொள்ளும் என்று கூறப்படுகிறது. அந்த அளவிற்குப் பூமி மிகப் பெரியது என்றே கூறலாம். ஆனால், நமது சூரியக் குடும்பத்தில் பூமியை விட 11 மடங்கு பெரிய கிரகம் ஒன்று இருக்கிறது. இதற்கான ஆதார வீடியோவாக சமீபத்தில் வெளியான ஒரு அனிமேஷன் வீடியோ அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

சூரியக் குடும்பத்தில் மிகப் பெரிய இராட்சச கிரகம் இது தான்

சூரியக் குடும்பத்தில் மிகப் பெரிய இராட்சச கிரகம் இது தான்

டிவிட்டரில் வெளியிடப்பட்ட ஒரு அனிமேஷன் வீடியோ பதிவு, இணையப் பயனர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. ஏனெனில் இது வியாழனின் ஈர்க்கக்கூடிய அளவு மற்றும் அது எவ்வாறு வேகமாகச் சுழல்கிறது என்பதைக் காட்டுகிறது. நமது சூரியக் குடும்பத்தில் இருக்கும் வியாழன் என்ற கிரகம் ஜூபிட்டரை குறிக்கிறது. இந்த வீடியோ, கிரக வானியலாளரும் அறிவியல் தொடர்பாளருமான ஜேம்ஸ் ஓ'டோனோகுவால் பகிரப்பட்டது. இந்த கிளிப், வியாழன் ஆதிக்கம் செலுத்தும் சூரிய மண்டலத்தின் அனைத்து கிரகங்களையும் காட்டுகிறது.

1 கிலோ மாம்பழம் 2.70 லட்சமா? உலகளவில் டிரெண்டிங்கான இந்த மாம்பழத்தில் அப்படி என்ன ருசி இருக்கு?1 கிலோ மாம்பழம் 2.70 லட்சமா? உலகளவில் டிரெண்டிங்கான இந்த மாம்பழத்தில் அப்படி என்ன ருசி இருக்கு?

ஜூபிட்டர் கிரகத்தின் உண்மையான அளவு என்ன தெரியுமா?

ஜூபிட்டர் கிரகத்தின் உண்மையான அளவு என்ன தெரியுமா?

பின்னர் அது நமது பல்வலி அண்டத்தின் முக்கிய நட்சத்திரமான சூரியனால் குள்ளமாகிறது என்பதையும் தெளிவாகக் காட்டுகிறது. இந்த வீடியோ, நமது சூரியக் குடும்பத்தில் உள்ள 9 கிரகங்களின் அளவு எப்படி வேறுபட்டிருக்கிறது என்பதை எளிதாகப் புரியும்படி காண்பிக்கிறது. இந்த வீடியோவை பார்த்தால், உங்களுக்கே விஷயம் தெளிவாகப் புரியும். ஜூபிட்டர் உண்மையிலேயே நமது பூமியை விட 11 மடங்கு மிகப்பெரியதாக இருக்கிறது. இதன் ஆரம் சுமார் 69,911 km ஆகும்.

இவ்வளவு பெரிய கிரகத்தின் ஒரு நாள் அளவு இவ்வளவு கம்மியா?

இவ்வளவு பெரிய கிரகத்தின் ஒரு நாள் அளவு இவ்வளவு கம்மியா?

"வானப் பொருள்கள் அளவு, சுழற்சி வேகம் மற்றும் சாய்வு ஆகியவற்றில் அளவிடு," குறித்து டாக்டர் ஓ'டோனோகு, தலைப்பில் எழுதியுள்ளார். பின்வரும் ட்வீட்டில், வியாழனின் ஒரு நாள் என்பது வெறும் 9 மணி நேரம் 56 நிமிடங்கள் மட்டுமே நீடிக்கும் என்று உண்மையை டாக்டர் ஓ'டோனோக் பதிவில் விளக்கியுள்ளார். இது சூரிய குடும்பத்தில் மிகப்பெரிய மற்றும் வேகமாகச் சுழலும் கிரகம் என்பது இதன் மூலம் நிரூபணம் ஆகியுள்ளது. ஆரம்பக்கால சூரியக் குடும்பத்தில், இது சூரியனைச் சுற்றி வரும் பொருட்களின் சுமைகளிலிருந்து வளர்ந்து, சுற்றுப்பாதை உந்தத்தை சுழல் கோண உந்தமாக மாற்றியது.

90 நிமிடத்தில் 2 முறை சூரியனை பார்த்த வீரர்கள்.. 45 நிமிடத்தில் அதிக குளிர்.. அடுத்து சுட்டெரிக்கும் வெப்பம்..90 நிமிடத்தில் 2 முறை சூரியனை பார்த்த வீரர்கள்.. 45 நிமிடத்தில் அதிக குளிர்.. அடுத்து சுட்டெரிக்கும் வெப்பம்..

நெட்டிசன்ஸ்களை வியப்பில் ஆழ்த்திய வீடியோ பதிவு

இந்த காரணத்திற்காகப் பெரிய கிரகங்கள் வேகமாகச் சுழல்கிறது என்று அவர் மேலும் கூறியுள்ளார். பகிரப்பட்ட வீடியோவிலிருந்து, வீடியோ 13 மில்லியனுக்கும் அதிகமான முறை பார்க்கப்பட்டுள்ளது. டிவிட்டர் பயனர்கள் இந்த வியக்கத்தகு அனிமேஷனுக்குப் பதிலளித்துள்ளனர். வியாழனின் மிகப்பெரிய அளவு மற்றும் அதன் விரைவான சுழற்சி விகிதம் இரண்டிலும் கருத்துத் தெரிவித்துள்ளனர். உண்மையிலேயே இந்த வீடியோ மிகவும் நன்றாக உருவாக்கப்பட்டுள்ளது என்று நெட்டிசன்ஸ்களால் பாராட்டை பெற்றுள்ளது.

எது ஜூபிட்டர் கிரகத்திற்கு மொத்தம் 79 நிலவுகளா?

எது ஜூபிட்டர் கிரகத்திற்கு மொத்தம் 79 நிலவுகளா?

அமெரிக்க நேஷனல் ஏரோநாட்டிக்ஸ் அண்ட் ஸ்பேஸ் அட்மினிஸ்ட்ரேஷன் (நாசா) கூற்றுப்படி, சூரியனில் இருந்து ஐந்தாவது கிரகமான வியாழன் வெகுஜனத்தில் மிகவும் பெரியது, இது மற்ற அனைத்து கிரகங்களையும் விட இரண்டு மடங்கு பெரியது. இந்த கிரகம் பூமியை விட 11 மடங்கு பெரிய ஆரம் கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த மிகப்பெரிய இராட்சச கிரகம் 79 நிலவுகளைக் கொண்டது. இதில் 53 நிலவுகளுக்கு நாசா பெயர் சூட்டியுள்ளது. இன்னும் எஞ்சியிருக்கும் 26 நிலவுக்கு நாசா பெயர்களைத் தேர்வு செய்து வருகிறது என்பதும் கவனிக்கத்தக்கது.

உங்க போன் ரொம்ப ஹேங் ஆகிறதா? இல்ல மெதுவா இயங்குகிறதா? அப்போ உடனே 'இதை' செய்யணும்..உங்க போன் ரொம்ப ஹேங் ஆகிறதா? இல்ல மெதுவா இயங்குகிறதா? அப்போ உடனே 'இதை' செய்யணும்..

Best Mobiles in India

English summary
Jupiter Size Is 11 Times Bigger Than Earth And Its Size Comparison Of Other Planets : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X