ஜீனிபர் நெட்வொர்க் வெளியிட்டுள்ள புதிய 5G மற்றும் IoT ரூட்டிங் பிளாட்ஃபார்ம் !
MX பிளாட்பாரத்தில் 5 ஆம் தலைமுறை தொழில் நுட்பத்தை ஜீனிபர் நெட்வொர்க் அறிமுகப்படுத்தியுள்ளது.
ஜீனிபர் நெட்வொர்க், புதிய MX5G யுனிவர்சல் ரூட்டிங் பிளாட்ஃபார்ம் மற்றும் பல புதிய மென்பொருள்களையும் வெளியிட்டுள்ளது. தற்போதைய சூழலையும் எதிர் காலத் தேவையையும் கருத்தில் கொண்டு அவற்றுக்கு ஏற்பப் புதிய தொழில் நுட்பங்களை அறிமுகப்படுத்துவதாக இந்நிறுவனம் கூறுகிறது.

MX பிளாட்பாரத்தில் 5 ஆம் தலைமுறை தொழில் நுட்பத்தை ஜீனிபர் நெட்வொர்க் அறிமுகப்படுத்தியுள்ளது. அளவில்லா வரைவுத் திட்டங்கள் (programmability), திறன் மிக்க செயல்பாடு, குறைவான செலவு ஆகியவற்றின் காரணமாக தொழில்துறையினர் விரும்பும் மிகச்சிறந்த நெட்வொர்க் ஊடகமாக MX பிளாட்பாரம் திகழ்கிறது. இது, மென்பொருள் மற்றும் ஹார்டுவேர் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு இயங்கும் நெட்வொர்க் ஆகும்.
கிளவுடு (Cloud) மற்றும் என்டர்பிரைஸ் வாடிக்கையாளர்கள் தங்களுடைய சேவையை அடுத்த தலைமுறைக்கும் எடுத்துச் செல்வதற்கும் ஏற்ற தொழில் நுட்பமாக இது விளங்குகிறது. தற்போது 5ஆம் தலைமுறைக்கும் (5G) ஏற்ற தொழில்நுட்பம், மென்பொருளை அடிப்படையாகக் கொண்ட பரந்த இணையதளச் சேவை (SD – WAN) என MX பிளாட்பாரம் புதுத் திறன்களோடு வெளிவந்திருக்கிறது. இணையச் சேவை வழங்குபவர்கள், telco edge மற்றும் cloud computing போன்ற தொழில் நுட்பங்கள் மூலமாகத் தங்களுடைய வாடிக்கையாளர்களுக்குத் தரவுப் பரிமாற்றங்களைத் (Dats Transmission) தரமாகவும் வேகமாகவும் வழங்க முயற்சிக்கின்றனர். இணையச் சேவை வழங்குபவர்கள் தற்போது பயன்படுத்தும் தொழில் நுட்பக் கட்டமைப்பு மிகவும் சிக்கலானதாகவும், அதிகம் செலவு பிடிக்கக் கூடியதாகவும், எளிதில் பாதிப்புக்கு உள்ளாகக் கூடியதாகவும் மாறிவிட்டது. எனவே அவர்களுக்குத் தங்களுடைய சேவையைத் தக்கவைத்துக் கொள்ளவும்,விரிவுபடுத்தவும், வேகமாக இயங்கவும் இது போன்ற புதிய நுட்பங்கள் தேவைப்படுகின்றன. ஜீனிபர் நிறுவனத்தின் சேவையை வழங்கும் வாடிக்கையாளர்களிடம் அவர்கள் சந்திக்கும் சவால்கள் தொடர்பாகக் கருத்துக்கள் கேட்கப்பட்டது. SD-WAN, IoT, மற்றும் 5G போன்ற அடுத்த தலைமுறைக்கான சேவைகளை விரிவுபடுத்த இது உதவிகரமாக இருந்தது. அவர்கள் தெரிவித்த கருத்துக்களின் அடிப்படையில் ஜீனிபர் நிறுவனம் காலத்திற்கேற்ற மாற்றங்களுடன் தன்னுடைய புதிய ரூட்டிங் பிளாட்பார்மை அறிமுகப்படுத்தியுள்ளது. கருத்துத் தெரிவித்தவர்களுள் பாதிக்கும் மேற்பட்டவர்கள் (55%) தொழில்நுட்பக் கட்டமைப்புக்கான செலவுதான் தங்களுடைய முதல் அல்லது இரண்டாவது சவால் எனத் தெரிவித்திருந்தனர். 40 சதவிகிதத்திற்கும் அதிகமானோர், நெட்வொர்க்கை ஒருங்கிணைத்து வழங்குவதில் உள்ள சிக்கல்கள்தான் தங்களுடைய முதல் அல்லது இரண்டாவது சவால் எனக் கருத்துத் தெரிவித்திருந்தனர். வாடிக்கையாளர்கள் எதிர் கொள்ளும் சவால்களைத் தீர்க்க என்ன வழி? என அவர்களிடமே கருத்துக் கேட்கப்பட்டது. டேடா பிளான் வழியமைப்புடன் (data-plane programmability) கூடிய முதலீட்டுக்கான பாதுகாப்பு அம்சம்தான் மேற்கண்ட சிக்கல்களைத் தீர்ப்பதற்கான முதல் அல்லது இரண்டாவது தீர்வாக இருக்கும் என 55 சதவிகிதத்திற்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்கள் கருத்துத் தெரிவித்திருந்தனர். வாடிக்கையாளர்களின் கருத்துக்களைப் பிரதிபலிக்கும் வகையில், ஜீனிபர் நிறுவனம் தன்னுடைய புதிய MX Series 5G Universal Routing பிளாட்பாரத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

எண்ணற்ற வழியமைப்பு அம்சங்களைச் செயல்படுத்துவதற்கான புதிய சிலிகான், இணையற்ற செயல்பாட்டை உறுதிப்படுத்துவதற்காக நெட்வொர்க் கட்டுப்பாட்டுத் திட்டத்தை ஒருங்கிணைக்கவும் அதனைப் பயனாளர் திட்டத்திலிருந்து பிரித்துத் (CUPS) தனியே செயல்படுத்துவதற்கும் ஏற்ற தொழில் நுட்பம், எளிமையாக இயக்குவதற்கு ஏற்ற வடிவமைப்பு, அதிகரிக்கப்பட்ட வேகம், குறைந்த செலவு எனப் பல்வேறு வகையான சிறப்பு அம்சங்களுடன் MX Series 5G Universal Routing பிளாட்பாரத்தை வெளியிட்டுள்ளது ஜீனிபர் நிறுவனம்.
விரிவான ஆட்டோமேசன், சிறந்த வகையிலான மென்பொருள் மேலாண்மை, MX சந்தாதாரர் மேலாண்மை, மேம்படுத்தப்பட்ட ரியல் – டைம் செயற்பாடுகள், வாடிக்கையாளர்கள் மிக எளிமையாக சேவைகளைப் பெறவும் அதனை விரிவுபடுத்திக் கொள்வதற்கும் ஏற்ற வசதி ஆகியவற்றுடன் இந்தப் புதிய ரூட்டிங் பிளாட்பாரத்தை ஜீனிபர் நிறுவனம் வெளியிட்டுள்ளது.


Click it and Unblock the Notifications