Home
News

RBI ஒப்புதல்.. சொந்தமாக பேங்க் அக்கவுண்ட் இல்லாத டீன் ஏஜ் பசங்களுக்கான UPI ஆப்.. எப்படி பணம் போகும்?

ஜூனியோ பேமெண்ட்ஸ் பிரைவேட் லிமிடெட் (Junio Payments Private - JPPL) ஆனது ப்ரீபெய்ட் பேமென்ட் இன்ஸ்ட்ருமென்ட்களை (Prepaid Payment Instruments - PPIs) வழங்க இந்திய ரிசர்வ் வங்கியிடமிருந்து (Reserve Bank of India - RBI) கொள்கை ரீதியான அங்கீகாரத்தை பெற்றுள்ளது.

ஜூனியோ பேமெண்ட்ஸ் ஆனது ஃபர்ஸ்ட்பே டெக்னாலஜிஸ் பிரைவேட் லிமிடெட்டின் (FirstPay Technologies Private Limited) துணை நிறுவனம் என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது. இந்த ஒப்புதலின் கீழ், யுபிஐ (UPI) என்கிற ஒருங்கிணைந்த பேமென்ட் இன்டர்ஃபேஸுடன் (Unified Payments Interface) இணைக்கப்பட்ட டிஜிட்டல் வாலட்டை அறிமுகப்படுத்த ஜூனியோவை அனுமதி கிடைத்துள்ளது.

சொந்தமாக பேங்க் அக்கவுண்ட் இல்லாத டீன் ஏஜ் பசங்களுக்கான UPI ஆப்!

இதனால் பயனர்கள் - குறிப்பாக டீனேஜர்கள் மற்றும் இளைஞர்கள் - யுபிஐ க்யூஆர் குறியீடுகளை ஸ்கேன் செய்து வங்கி கணக்கு இல்லாமலேயே பணம் செலுத்த முடியும். இந்த அம்சம் என்பிசிஐ (NPCI) என்கிற இந்திய தேசிய பேமென்ட் கார்ப்பரேஷனின் (National Payments Corporation of India) யுபிஐ சர்க்கிள் முயற்சியுடன் ஒத்துப்போகிறது.

இது இளம் பயனர்கள் தங்கள் பெற்றோரின் பேங்க் அக்கவுண்ட் உடன் இணைக்கப்பட்டு, அதன் மூலம் யுபிஐ பரிவர்த்தனைகளை செய்ய அனுமதிக்கும். அறியாதோர்களுக்கு ஜூனியோ பேமெண்ட்ஸ் என்பது அங்கித் கேரா மற்றும் சங்கர் நாத் ஆகியோரால் நிறுவப்பட்ட, இளம் பயனர்களுக்காக வடிவமைக்கப்பட்ட ஒரு பேமண்ட் ஆப் ஆகும்.

இந்த ஆப்பின் கீழ் - பிஸிக்கல் மற்றும் விர்ச்சுவல் ரூபே கோ-பிராண்டட் ப்ரீபெய்ட் கார்டுகள், செலவினங்களுக்கான பேரன்ட் கண்ட்ரோல்கள் மற்றும் பரிவர்த்தனைகளை கண்காணித்தல் உள்ளிட்ட பல டூல்கள் / அம்சங்கள் உள்ளது. இந்த தளத்தில் தற்போது இரண்டு மில்லியனுக்கும் அதிகமான பயனர்கள் உள்ளனர் என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.

இந்திய ரிசர்வ் வங்கியின் கொள்கை ரீதியான ஒப்புதல், பாதுகாப்பான மற்றும் இணக்கமான டிஜிட்டல் நிதி தயாரிப்புகளுக்கான அணுகலை விரிவுபடுத்தும் அதன் இலக்கை ஆதரிக்கிறது என்று ஜூனியோ பேமெண்ட்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. ஜூனியோ தனது ஆப் மற்றும் வரவிருக்கும் வாலட் அம்சங்கள் மூலம் இளைஞர்களிடையே நிதி கல்வியறிவை வலுப்படுத்துவதையும், பொறுப்பான பண மேலாண்மையை ஊக்குவிப்பதையும் நோக்கமாக கொண்டுள்ளது என்று தெரிவித்துள்ளது.

மேலும் ஜூனியோ பேமெண்ட்ஸ் நிறுவனம் ஆனது யுபிஐ ஒருங்கிணைப்பு, சேமிப்புடன் இணைக்கப்பட்ட ரிவர்ட்ஸ் மற்றும் பிராண்ட் வவுச்சர் சலுகைகளையும் சேர்க்க திட்டமிட்டுள்ளது. ஜூனியோ பேமென்ட்ஸ் பிரைவேட் லிமிடெட், இந்தியாவில் நிதி கல்வியறிவு, குடும்பம் சார்ந்த பண மேலாண்மை மற்றும் பொறுப்பான டிஜிட்டல் பரிவர்த்தனைகளை மையமாகக் கொண்ட ஒழுங்குபடுத்தப்பட்ட டிஜிட்டல் கட்டண தயாரிப்புகளை தொடர்ந்து உருவாக்குகிறது; அதனொரு பகுதியே ஜூனியோ பேமெண்ட்ஸ் ஆகும்.

யுபிஐ தொடர்பான மற்ற சமீபத்திய அப்டேட்கள்: என்பிசிஐ (NPCI) என்கிற இந்திய தேசிய கொடுப்பனவு கழகம் (National Payments Corporation of India) ஆனது யுபிஐ செட்டில்மென்ட்களை - அங்கீகரிக்கப்பட்ட பரிவர்த்தனைகள் (Authorised transactions) மற்றும் விவாதத்திற்கு உரிய பரிவர்த்தனைகள் (Dispute transactions) என இரண்டாக பிரிப்பதாக அறிவித்து உள்ளது.

அங்கீகரிக்கப்பட்ட பரிவர்த்தனைகள் (ஆத்தரைஸ்டு செட்டில்மென்ட்) என்றால் என்ன? அங்கீகரிக்கப்பட்ட யுபிஐ செட்டில்மென்ட் என்பது யுபிஐ பரிவர்த்தனையின் இறுதி கட்டமாகும். இதில் பணம் செலுத்துபவரின் வங்கி கணக்கிலிருந்து பெறுநரின் வங்கி கணக்கிற்கு சரியான முறையில் எந்த சிக்கலும் இல்லாமல் நிதி மாற்றப்படும்.

விவாதத்திற்கு உரிய பரிவர்த்தனைகள் (டிஸ்ப்பியூட் செட்டில்மென்ட்) என்றால் என்ன? விவாதத்திற்கு உரிய யுபிஐ பரிவர்த்தனைகள் என்பது யுபிஐ பரிவர்த்தனையில் உள்ள சிக்கல்களை தீர்ப்பதற்கான முறையான செயல்முறையாகும். அதாவது பணம் செலுத்துவதில் தோல்வி தவறான பேமண்ட்கள் அல்லது அங்கீகரிக்கப்படாத பரிவர்த்தனைகள் போன்றவைகள் டிஸ்ப்பியூட் செட்டில்மென்ட் ஆகும்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Junio Payments Gets RBI approval for digital wallet Teenagers to pay via UPI without bank account
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X