Home
News

ஜூன் 1 முதல் புதிய விதிகள்.. UPI, ATM சேவைகளில் அதிரடி மாற்றம்.. கட்டாயம் தெரிஞ்சுக்கோங்க!

ஜூன் 1 முதல் யுபிஐ (UPI) மற்றும் ஏடிஎம் (ATM) சேவைகளில் பல முக்கிய மாற்றங்கள் அமலுக்கு வர உள்ளன. இந்த புதிய விதிமுறைகள் வங்கி சேவைகள் மற்றும் டிஜிட்டல் பரிவர்த்தனைகளில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும். இது குறித்த விரிவான தகவல்களை இந்த பதிவில் சற்று விரிவாகப் பார்க்கலாம்.

யுபிஐ (UPI) அப்டேட்
இந்தியாவில் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனைகளின் பயன்பாடு தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், யுபிஐ சேவைகளின் பாதுகாப்பை மேலும் வலுப்படுத்த புதிய மாற்றங்கள் அமல்படுத்தப்படுகின்றன. இதன் ஒரு பகுதியாக, இனி QR கோடு ஸ்கேன் செய்து அல்லது மொபைல் எண் மூலம் பணம் அனுப்பும் போது, பணம் பெறுபவரின் வங்கிக் கணக்கில் பதிவு செய்யப்பட்டுள்ள உண்மையான பெயர் பயனர்களின் திரையில் தெளிவாகக் காண்பிக்கப்படும். இந்த நடைமுறை தவறான கணக்குகளுக்குப் பணம் அனுப்பப்படுவதைத் தடுப்பதுடன், ஆன்லைன் மோசடிகளைக் குறைக்கவும் உதவும்.

ஜூன் 1 முதல் புதிய விதிகள்.. UPI, ATM சேவைகளில் அதிரடி மாற்றம்..

குறிப்பாக, போலி பெயர்கள் அல்லது தவறான அடையாளங்களைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்படும் மோசடி முயற்சிகளுக்கு இந்த நடைமுறை கூடுதல் தடையாக அமையும் என நிதித்துறை நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

வங்கி சேவைகளில் புதிய மாற்றங்கள்?

ஏடிஎம் பயன்பாட்டில் விரைவில் சில மாற்றங்கள் அமலுக்கு வரலாம் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன. குறிப்பாக, பிற வங்கிகளின் ஏடிஎம்-களை பயன்படுத்தும்போது வழங்கப்படும் இலவச பரிவர்த்தனைகளின் எண்ணிக்கையைப் பல வங்கிகள் மறுபரிசீலனை செய்து வருவதாகக் கூறப்படுகிறது.

இதன் விளைவாக, பணம் எடுப்பது, கணக்கு இருப்பை சரிபார்ப்பது, மினி ஸ்டேட்மென்ட் பெறுவது உள்ளிட்ட சேவைகளுக்கான கட்டணங்கள் சில வாடிக்கையாளர்களுக்கு அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது. வங்கிகளின் புதிய கொள்கைகள் அமலுக்கு வந்தால், ஏடிஎம் பரிவர்த்தனைகளைப் பயன்படுத்தும் முன் விதிமுறைகள் மற்றும் கட்டண விவரங்களை வாடிக்கையாளர்கள் கவனமாக சரிபார்ப்பது நல்லது. அதுவும் இந்த மாற்றங்கள் குறித்து வங்கிகள் அதிகாரப்பூர்வ அறிவிப்புகளை வெளியிட்ட பின்னரே முழுமையான விவரங்கள் தெளிவாகும்.

யுபிஐ மூலம் பிஎஃப் பணம்
ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பான (Employees' Provident Fund Organisation) இபிஎப்ஓ (EPFO) விரைவில் PF தொகையை நேரடியாக UPI மூலம் பெறும் புதிய வசதியை அறிமுகம் செய்ய உள்ளது.

ஜூன் 1 முதல் புதிய விதிகள்.. UPI, ATM சேவைகளில் அதிரடி மாற்றம்..

சமீபத்தில் இந்த புதிய வசதி குறித்துப் பேசிய மத்திய தொழிலாளர் நலத்துறை அமைச்சரான மன்சுக் மாண்டவியா, இனி EPFO உறுப்பினர்கள் தங்கள் பிஎஃப் பணத்தை யுபிஐ மூலம் தங்கள் வங்கி கணக்கிற்குக் கொண்டுவரலாம். இதற்கான டெஸ்டிங் ப்ராசஸ் வெற்றிகரமான முடிவடைந்துள்ளது எனத் தெரிவித்தார். எனவே இந்த ஜூன் மாதம் பிஎஃப் பணத்தை யுபிஐ மூலம் எடுக்க வாய்ப்பு உள்ளது.

பான் கார்டு புதிய விதிகள்
வருமான வரித்துறை ஜூன் 1 முதல் பான் கார்டு தொடர்பான சில புதிய விதிமுறைகளை அமல்படுத்த உள்ளது. இந்த மாற்றங்களின் மூலம், சில குறிப்பிட்ட பரிவர்த்தனைகளில் பான் கார்டு சமர்ப்பிக்கும் தேவையில் தளர்வு வழங்கப்பட உள்ளது. உதாரணமாக, ஒரே நாளில் ரூ.50,000-க்கு மேல் செய்யப்படும் டெபாசிட் பரிவர்த்தனைகளுக்கு இனி பான் கார்டு கட்டாயமாக இருக்காது. ஆனால் அதிக மதிப்புள்ள பரிவர்த்தனைகளுக்கான பான் கார்டு தேவை விதிமுறை கடுமையாக்கப்பட்டுள்ளது.

Best Mobiles in India

English summary
June 1 Rule Update: Key Changes in UPI, PAN and ATM Transactions You Must Know
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X