இந்த ஜூலை மாதத்தில் அறிமுகமாகும் 13 புது ஸ்மார்ட்போன்கள்; இதோ ஃபுல் லிஸ்ட்!

|

இதுவரையிலாக, இன்னும் குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்றால், ஜூன் 2022 இறுதி வரையிலாக, அறிமுகமான எந்தவொரு புதிய ஸ்மார்ட்போனுமே உங்களை ஈர்க்கவில்லை என்றால், வருத்தப்பட வேண்டாம்!

ஏனெனில் 2022 ஜூலை மாதத்தில் தான் பெரும்பாலான நிறுவனங்களில் தரமான ஸ்மார்ட்போன்கள் சந்தைக்கு வரவுள்ளன. அந்த பட்டியலில் ஒன்றல்ல.. இரண்டல்ல மொத்தம் 13 ஸ்மார்ட்போன்கள் உள்ளன.

எந்தெந்த நிறுவனங்கள் என்னென்ன ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்ய உள்ளன?

எந்தெந்த நிறுவனங்கள் என்னென்ன ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்ய உள்ளன?

இன்னும் சுவாரசியமான விடயம் என்னவென்றால், வெளியாகவுள்ள 13 ஸ்மார்ட்போன்களுமே ஒன்றுக்கொன்று ஒற்றுப்போகும் சில குறிப்பிட்ட அம்சங்களையும் பெற உள்ளன!

அதென்ன அம்சம்? எந்தெந்த நிறுவனங்கள் என்னென்ன ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்ய உள்ளன? அவைகள் எம்மாதிரியான அம்சங்களை பேக் செய்யும்? வாருங்கள் விரிவாக பார்க்கலாம்!

பெரும்பாலான ஸ்மார்ட்போன்களில் இடம்பெறவுள்ள ஒரே சிப்செட்!

பெரும்பாலான ஸ்மார்ட்போன்களில் இடம்பெறவுள்ள ஒரே சிப்செட்!

அந்த சிப்செட், ஸ்னாப்டிராகன் 8+ ஜென் 1 எஸ்ஓசி (Snapdragon 8+ Gen 1 SoC) ஆகும்.

சீன ஸ்மார்ட்போன் தயாரிப்பாளர் ஆன சியோமி, அதன் Xiaomi 12S Ultra சீரீஸின் அறிமுகமானது வருகிற ஜூலை 4 ஆம் தேதி நடக்கும் என்பதை உறுதிப்படுத்தியுள்ளது. அந்தத் தேதியில், Snapdragon 8+ Gen 1 சிப்செட்டை பேக் செய்யும் சில முதல் ஸ்மார்ட்போன்களை நாம் பார்ப்போம்.

Nothing Phone 1 விலை இவ்ளோ தானா? தம்பி OnePlus.. கொஞ்சம் ஓரமா நில்லு!Nothing Phone 1 விலை இவ்ளோ தானா? தம்பி OnePlus.. கொஞ்சம் ஓரமா நில்லு!

சியோமி மட்டும் இல்ல... இந்த லிஸ்டில் பல நிறுவனங்கள் உள்ளன!

சியோமி மட்டும் இல்ல... இந்த லிஸ்டில் பல நிறுவனங்கள் உள்ளன!

சியோமியின் அறிமுகத்திற்குப் பிறகு, ரியல்மி (Realme), ஒன்பிளஸ் (OnePlus), ஐக்யூ (iQOO), மோட்டோரோலா (Motorola), நுபியா (Nubia), ஆசஸ் ஆர்ஓஜி (Asus ROG), ரெட் மேஜிக் (Red Magic), லெனோவோ (Lenovo) மற்றும் பிளாக் ஷார்க் (Black Shark) போன்ற நிறுவனங்களின் - ஸ்னாப்டிராகன் 8+ ஜென் 1 எஸ்ஓசி - ஸ்மார்ட்போன்களையும் நாம் பார்க்கலாம்

ஆக ஜூலை முழுக்க வெறும் Snapdragon 8+ Gen 1 மாடல்கள் தானா?

ஆக ஜூலை முழுக்க வெறும் Snapdragon 8+ Gen 1 மாடல்கள் தானா?

இல்லை! பிரபல சீன டிப்ஸ்டர் ஆன டிஜிட்டல் சாட் ஸ்டேஷன் வழியாக வெளியான புதிய லீக் தகவலின்படி, இந்த ஜூலையில், ஸ்னாப்டிராகன் மற்றும் டைமென்சிட்டியின் புதிய மாடல்கள் ஒன்றன் பின் ஒன்றாக அறிமுகப்படுத்தப்படும். ஆனால் அவற்றில், Snapdragon 8+ Gen 1 சிப்செட் ஆனது சுமார் 13 புதிய ஸ்மார்ட்போன்களில் இடம்பெறும்.

Amazon, Flipkart-ல் Amazon, Flipkart-ல் "இதை" கூவிக்கூவி விப்பாங்க.. அவசரப்பட்டு வாங்கிடாதீங்க!

ஸ்னாப்டிராகன் 8+ ஜென் 1 எஸ்ஓசி-ஐ தவிர்த்து வேறு எந்த ஸ்பெஷலும் இல்லையா?

ஸ்னாப்டிராகன் 8+ ஜென் 1 எஸ்ஓசி-ஐ தவிர்த்து வேறு எந்த ஸ்பெஷலும் இல்லையா?

இந்த ஜூலை மாதத்தில், ஸ்னாப்டிராகன் 8+ ஜென் 1 எஸ்ஓசி மட்டும் தான் ஸ்பெஷலா? வேறு எந்த அம்சங்களும் முக்கியத்துவம் பெறாதா? என்று கேட்டால் - நிறையவே இருக்கிறது!

ஜூலை மாதத்தில் அறிமுகம் செய்யப்பட உள்ள சில மாடல்களில் குறைந்தபட்சம் 100W பாஸ்ட் சார்ஜிங்கும் மற்றும் அதிகபட்சமாக 150W பாஸ்ட் சார்ஜிங்கும் இடம்பெறும்.

இந்த பட்டியலில் Realme GT2 மாஸ்டர் எக்ஸ்ப்ளோரர் எடிஷன், OnePlus 10T மற்றும் iQOO 10 ஸ்டாண்டர்ட் எடிஷன் ஆகியவைகளும் அடங்கும்.

இந்த லிஸ்டில் 200எம்பி கேமராவும் அடக்கம்!

இந்த லிஸ்டில் 200எம்பி கேமராவும் அடக்கம்!

மோட்டோரோலாவை பொறுத்த வரை, இந்நிறுவனம் அதன் மோட்டோரோலா எட்ஜ் 30 அல்ட்ராவை அறிமுகப்படுத்த உள்ளது. இது ஸ்னாப்டிராகன் 8+ Gen 1 SoC-ஐ பேக் செய்வது மட்டுமில்லாமல், 200 MP கேமராவுடன் வரும் உலகின் முதல் ஸ்மார்ட்போனாகவும் இருக்கும்.

சியோமி நிறுவனமும் இந்த சென்சாரை பயன்படுத்தும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம். ஆனால், அது இந்த ஜூலை மாதத்திலேயே நடக்காது. சியோமியின் 200MP கேமரா ஸ்மார்ட்போன் ஆனது பின்னர் அறிமுகம் செய்யப்படும்.

ஆபிஸ் வரச்சொல்லி மிரட்டிய எலான் மஸ்க்கிற்கு 'பல்பு' கொடுத்த பணியாளர்கள்!ஆபிஸ் வரச்சொல்லி மிரட்டிய எலான் மஸ்க்கிற்கு 'பல்பு' கொடுத்த பணியாளர்கள்!

ஆசஸ், பிளாக் ஷார்க் போன்ற கேமிங் போன்களில்?

ஆசஸ், பிளாக் ஷார்க் போன்ற கேமிங் போன்களில்?

ஆசஸ் நிறுவனம் அதன் ROG Phone 6 ஸ்மார்ட்போனை குவால்காம் ஸ்னாப்டிராகன் 8+ ஜென் 1 எஸ்ஓசி உடன் தயாரித்து வருகிறது, மேலும் இது 6,000mAh பேட்டரியைபேக் செய்யும் என்றும் கூறப்படுகிறது.

மறுகையில் உள்ள லெனோவா மற்றும் பிளாக் ஷார்க் ஆகியவைகளும் ஸ்னாப்டிராகன் 8+ ஜென் 1 கொண்டு இயங்கும் ஸ்மார்ட்போன்களை கொண்டுவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும், மாடல் பெயர் குறித்த விவரங்கள் இல்லை.

டைமன்சிட்டி 9000 சிப்செட்டின் நிலை என்ன?

டைமன்சிட்டி 9000 சிப்செட்டின் நிலை என்ன?

டைமன்சிட்டி 9000 சிப்செட்-ஐ பொறுத்தவரை, இது ஒரு "இரண்டாவது விருப்பமாக" உள்ளது. அதாவது சியோமி நிறுவனம் அதன் Xiaomi 12S Pro-வில் Dimensity 9000-ஐ பேக் செய்யலாம். அதேபோல iQOO நிறுவனமும் டைமன்சிட்டி 9000 சிப்செட் உடனான ஒரு புதிய பிளாக்ஷிப் மாடலை வெளியிடலாம்.

ஆகமொத்தம், ஜூலை மாதம் ஸ்மார்ட்போன் ஆர்வலர்களுக்கான ஒரு பரபரப்பான மாதமாக இருக்கும் என்பதில் சந்தேகமே வேண்டாம்.

Best Mobiles in India

English summary
July 2022 New Smartphone Launches Upcoming Mobile from Xiaomi Realme OnePlus iQOO Motorola Asus Lenovo

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X