தனித்துவ அம்சங்களோடு ஜோஷ் ஆப்- பயன்படுத்துவது எப்படி தெரியுமா?

|

டிக்டாக் செயலி போன்று குறுகிய வீடியோக்களை பதிவேற்றும் பயன்பாடுகளில் ஒன்று ஜோஷ். இது இந்தியாவில் தடை செய்யப்பட்ட டிக்டாக்கிற்கு இணை மாற்றாக அமைந்துள்ளது. இந்தியாவில் டிக்டாக் தடை செய்யப்பட்ட நாளில் இருந்து பல்வேறு உள்நாட்டு வீடியோ பகிர்வு தளங்கள் வெளியாகி வருகிறது. இருப்பினும் இந்த ஜோஷ் செயலி மற்ற செயலிகளைவிட தனித்துவமான அம்சங்களை கொண்டுள்ளது.

ஜோஷ் ஆப்: என்றால் என்ன

ஜோஷ் ஆப்: என்றால் என்ன

டிக்டாக் போன்று குறுகிய வீடியோக்களை பகிர்வதற்கும் உருவாக்குவதற்கும் ஜோஷ் சிறந்த செயலியாகும். ஜோஷ் செயலி இந்தியாவில் தயாரிக்கப்பட்ட பயன்பாடாக இருப்பதால் இது இந்தி, தமிழ், கன்னடம், ஆங்கிலம் மற்றும் மலையாளம் போன்ற பல்வேறு பிராந்திய மொழிகளை ஆதரிக்கிறது. இந்த செயலியில் வேடிக்கையான பதிவு, கவர்ச்சிகரமான பதிவு, நடனம் இசை போன்ற பல்வேறு வகையில் பொழுதுபோக்கு வீடியோக்களை பகிரலாம். ஜோஷ் பயன்பாட்டின் தனித்துவ அம்சம் குறித்து பார்க்கையில் இது உள்நுழைவு(லாக்-இன்) கட்டாயப்படுத்தாது.

ஜோஷ் செயலியை பதிவிறக்கம் செய்து எப்படி

ஜோஷ் செயலியை பதிவிறக்கம் செய்து எப்படி

ஜோஷ் பயன்பாடு தற்போது ஆண்ட்ராய்டு செயலிக்கு மட்டுமே கிடைக்கிறது. இந்த பயன்பாட்டை கூகுள் ப்ளே ஸ்டோரில் பதிவிறக்கம் செய்யலாம். குறிப்பாக ஜோஷ் பயன்பாட்டை பதிவிறக்கம் செய்ய இந்த லிங்கை கிளிக் செய்யலாம். (பதிவிறக்கம் செய்யும் லிங்க்), இந்த ஸ்மார்ட்போனின் அளவு 7.6 எம்பி ஆகும்.

ஜோஷ் செயலியை எவ்வாறு பயன்படுத்துவது

ஜோஷ் செயலியை எவ்வாறு பயன்படுத்துவது

ஜோஷ் பயன்பாடானது பல்வேறு மொழி விருப்பங்களில் கிடைக்கிறது. இதில் தங்களுக்கு தேவையான விருப்பத்தை தேர்ந்தெடுக்கலாம். ஜோஷ் பயன்பாடானது இந்தி, மலையாளம், தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆங்கிலம் உள்ளிட்ட மொழிகள் காண்பிக்கப்படும் தேர்ந்தெடுக்கப்பட்ட மொழிகளுக்கான வீடியோக்கள் காண்பிக்கப்படும்.

ஜோஷ் பயன்பாடானது டிக்டாக் போன்றே வாடிக்கையாளர்களின் தேவையை பூர்த்தி செய்கிறது. மேலும் டிக்டாக் போன்றே பயனர்கள் பிராந்திய மற்றும் சர்வதேச பயனர்களின் வீடியோக்களை காண்பிக்கிறது.

வீடியோக்களை எவ்வாறு உருவாக்குவது, பதிவேற்றுவது

வீடியோக்களை எவ்வாறு உருவாக்குவது, பதிவேற்றுவது

ஜோஷ் பயன்பாட்டில் வீடியோக்களை எவ்வாறு உருவாக்குவது, பதிவேற்றுவது என்பது குறித்து பார்க்கலாம்.

ஸ்டெப் 1: வீடியோக்களை உருவாக்க பயனர்கள் ஸ்மார்ட்போனில் கேமரா மற்றும் கேலரியை அணுக அனுமதிக்க வேண்டும்.

ஸ்டெப் 2: உங்கள் வீடியோக்களை கவர்ச்சிகரமாக காண்பிக்க எளிய எடிட்டிங் நுட்பங்களைப் பயன்படுத்தலாம். இசை உள்ளிட்ட பல்வேறு அம்சங்களை சேர்க்கலாம்.

ஸ்டெப் 3: உங்களிடம் கணக்கு இல்லையென்றால் உள்நுழைய வேண்டும் அதன்பின் புதிய கணக்கை உருவாக்க வேண்டும். பயனர்கள் தங்களது வீடியோக்களை தயார் செய்யலாம் அதோடு உங்கள் பயனர் பெயரை உறுதிப்படுத்தவும்.

ஸ்டெப் 4: இந்த பயன்பாட்டுப் பூர்த்தியும் முடிந்ததும். வீடியோவை பதிவேற்றலாம். அதேபோல் வீடியோவைப் பதிவேற்றும்போது இரண்டு விருப்பங்கள் காண்பிக்கும். அது தங்கள் பயன்பாட்டை அனைவரிடமும் பகிரலாம் அல்லது அந்த வீடியோவை பின்தொடர்பவர்கள் மட்டும் பகிரலாம் என்பதாகும். இதில் தங்களுக்கு தேவையானவற்றை பூர்த்தி செய்து கொள்ளவும்.

ஜோஷ் பயன்பாட்டில் வீடியோக்களை எவ்வாறு பகிர்வது

ஜோஷ் பயன்பாட்டில் வீடியோக்களை எவ்வாறு பகிர்வது

அதுமட்டுமின்றி இந்த வீடியோவை பதிவேற்றிய பிறகு பேஸ்புக் மற்றும் வாட்ஸ் ஆப் போன்ற பிற தளங்களில் வீடியோக்களை பகிரலாம். அதேபோல் வீடியோ பதிவேற்றிய பிறகு அருகில் மரம் போன்ற பட்டன் காண்பிக்கும் அதை கிளிக் செய்த பிறகு பயனர்கள் உருவாக்கப்பட்ட வீடியோக்களோடு இதை பகிரலாம்.

ஜோஷ் பயன்பாடு: வரவிருக்கும் புதுப்பிப்புகள்

ஜோஷ் பயன்பாடு: வரவிருக்கும் புதுப்பிப்புகள்

தற்போதைய நிலைப்படி ஜோஷ் பயன்பாடு கூகுள் ப்ளே ஸ்டோரில் மட்டும் கிடைக்கும். மேலும் இந்த செயலி ஐபோன் மற்றும் ஐபாட் பயனர்களுக்கான ஆப்பிள் ஆப் ஸ்டோரில் வழங்கப்படும். தற்போது அறிமுகப்படுத்துள்ள இந்த ஜோஷ் பயன்பாடு ரோபோசோ, மோஜ், மிட்ரான் மற்றும் பிற தயாரிக்கப்பட்ட இந்தியா இயங்குதளங்களுடன் நேரடி போட்டியாக இருக்கும் என்று கருதப்படுகிறது.

Best Mobiles in India

English summary
Josh app is one of the apps, riding high in the horde of short videos sharing platforms. The app comes as an alternative to TikTok, which is currently banned in India. We've been seeing a lot of homegrown alternatives to the popular short video platform emerging in the recent times. There are a few features that make the Josh app quite unique from others.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X