மீண்டும் தாக்குதலை துவங்கிய ஜோக்கர் மால்வேர்.. இந்த 15 ஆப்ஸ்களை உடனே டெலீட் செய்யுங்கள்..

|

சைபர் செக்யூரிட்டி நிறுவனமான காஸ்பர்ஸ்கியின் ஆய்வாளர் டாட்டியானா ஷிஷ்கோவா, சமீபத்தில் ஒரு எச்சரிக்கை செய்தியை ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் பயனர்களுக்காக வெளியிட்டுள்ளது. சமீபத்தில் வெளியான தகவலின் படி கூகுள் பிளே ஸ்டோரில் சக்திவாய்ந்த ஜோக்கர் மால்வேர் மீண்டும் தலையோங்கியுள்ளது என்று ஆய்வாளர் டாட்டியாணா ஷிஷ்கோவா தெரிவித்துள்ளார். ஜோக்கர் மால்வேர் தாக்குதல் மீண்டும் திரும்புவது குறித்து ஆண்ட்ராய்டு போன் பயனர்களை எச்சரிக்கும் வகையில் இந்த செய்தி வெளியாகியுள்ளது.

மீண்டும் 15 ஆண்ட்ராய்டு ஆப்ஸைப் பாதித்துள்ள ஜோக்கர் மால்வேர்

மீண்டும் 15 ஆண்ட்ராய்டு ஆப்ஸைப் பாதித்துள்ள ஜோக்கர் மால்வேர்

இந்த தகவலை வெளிப்படுத்த காஸ்பர்ஸ்கியின் ஆய்வாளர் டாட்டியானா ஷிஷ்கோவா தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். ஜோக்கர் மால்வேர் இந்த முறை மீண்டும் 15 ஆண்ட்ராய்டு ஆப்ஸைப் பாதித்துள்ளது என்பதை ஷிஷ்கோவா கண்டறிந்துள்ளார். ஜோக்கர் தீம்பொருள் கடந்த ஆண்டு பல பயன்பாடுகளைப் பாதித்த பிறகு மிகவும் பயத்தை உருவாக்கியது. பயனர்களைப் பாதுகாக்க, கூகிள் உடனடியாக தலையிட்டு அந்தப் பயன்பாடுகளை அகற்ற வேண்டியிருந்தது.

மீண்டும் - மீண்டும் கூகுள் ப்ளே ஸ்டோரில் திரும்பி வந்த ஜோக்கர் மால்வேர்

மீண்டும் - மீண்டும் கூகுள் ப்ளே ஸ்டோரில் திரும்பி வந்த ஜோக்கர் மால்வேர்

ஆனால், ஒவ்வொரு முறையும் கூகிள் தனது தளத்தில் இருக்கும் பாதிக்கப்பட்ட ஜோக்கர் மால்வேர் ஆப்ஸ்களை நீக்கம் செய்த போதும், அந்த மால்வேர்கள் மீண்டும் - மீண்டும் கூகுள் ப்ளே ஸ்டோரில் திரும்பி வந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த ஆண்டும், கூகிள் நிறுவனம் தனது தளத்தில் இருந்த பாதிக்கப்பட்ட மால்வேர் ஆப்ஸ்களை நீக்கம் செய்தது. இப்போது மீண்டும் இந்த பிரச்சனை தலையோங்க துவங்கியுள்ளது.

800 கோடி மக்கள்.. 1,00,000 ஆண்டுகள் வாழத் தேவையான ஆக்சிஜன் நிலவில் உள்ளது.. உண்மையா? என்ன சொல்றீங்க?800 கோடி மக்கள்.. 1,00,000 ஆண்டுகள் வாழத் தேவையான ஆக்சிஜன் நிலவில் உள்ளது.. உண்மையா? என்ன சொல்றீங்க?

ஜோக்கர் தீம்பொருளால் பாதிக்கப்பட்ட சில பயன்பாடுகள்

ஜோக்கர் தீம்பொருளால் பாதிக்கப்பட்ட சில பயன்பாடுகள்

சமீபத்தில் ஜோக்கர் தீம்பொருளால் பாதிக்கப்பட்ட சில பயன்பாடுகளைப் பயனர்கள் சுமார் 50,000 க்கும் மேற்பட்ட முறை இன்ஸ்டால் செய்துள்ளனர் என்பது கண்டறியப்பட்டுள்ளது. இந்த பாதிக்கப்பட்ட ஆப்ஸ்கள் அனைத்தும் மிகவும் பிரபலமாக இருந்ததும், அதிகப்படியான பதிவிறக்கம் செய்யக் காரணமாக அமைந்திருந்துள்ளது. அதே நேரத்தில் அதிகம் அறியப்படாத பிற ஆண்ட்ராய்டு பயன்பாடுகளும் ஷிஷ்கோவாவின் இந்த பாதிக்கப்பட்ட ஆப்ஸ் பட்டியலில் உள்ளன. தற்போது, ஜோக்கர் மால்வேர் மூலம் பாதிக்கப்பட்ட ஆப்ஸ்களை கீழே பட்டியலிட்டுள்ளோம்.

ஜோக்கர் மால்வேர் என்றால் என்ன, அது என்ன செய்யும்?

ஜோக்கர் மால்வேர் என்றால் என்ன, அது என்ன செய்யும்?

ஜோக்கர் மால்வேர் கூகிள் ப்ளே ஸ்டோரில் உள்ள பிரபலமான ஆப்ஸை பாதித்து, அப்ளிகேஷன்களை பதிவிறக்கம் செய்யும்போது பயனரின் மொபைலில் நுழைகிறது. ஜோக்கர் தீம்பொருள் அதன் குறியீட்டில் சிறிய மாற்றங்கள் மூலம் Google Play ஸ்டோருக்குச் செல்ல முடியும் மற்றும் Play store இன் பாதுகாப்பு மற்றும் சரிபார்ப்பு சோதனைகளை இது எளிமையாகத் தவிர்க்கிறது. இந்த மால்வேர் மிகவும் ஆபத்தானது மற்றும் அடிக்கடி மீண்டும் தோன்றக் கூடியது. ஆகையால், பயனர்கள் பதிவிறக்கம் செய்யும் போது பாதுகாப்பாக இருக்க வேண்டும்.

விண்வெளியில் தோன்றிய 'ஆழ்கடல் உலகம்'.. 1,60,000 ஒளி ஆண்டுகள் தொலைவில் நாசாவின் பிரம்மாண்ட கண்டுபிடிப்பு..விண்வெளியில் தோன்றிய 'ஆழ்கடல் உலகம்'.. 1,60,000 ஒளி ஆண்டுகள் தொலைவில் நாசாவின் பிரம்மாண்ட கண்டுபிடிப்பு..

பயனர்களுக்கே தெரியாமல் பணத்தை சுரண்டும் மால்வேர் ஆப்ஸா இது?

பயனர்களுக்கே தெரியாமல் பணத்தை சுரண்டும் மால்வேர் ஆப்ஸா இது?

இந்த ஜோக்கர் மால்வேர் முதன்முதலில் 2017 இல் கண்டுபிடிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து அடுத்துப் பல ஆண்டுகளாக இந்த தீம்பொருளிலிருந்து பயனர்களைப் பாதுகாக்கக் கூகிள் கடுமையாகப் போராடி வருகிறது. அதன் பேலோடைப் பொறுத்தவரை, ஜோக்கர் தீம்பொருள் பயனர்களுக்குத் தெரியாமல் பின்னணியில் ஆன்லைன் சேவைகளுக்கு சந்தா செலுத்துவதன் மூலம் பயனர்களிடமிருந்து ரகசியமாக பணத்தைத் திருடுகிறது.

வங்கி விபரத்தை செக் செய்தால் மட்டுமே உண்மை தெரியும்

வங்கி விபரத்தை செக் செய்தால் மட்டுமே உண்மை தெரியும்

இது ஆன்லைன் விளம்பரங்களைத் தானாக கிளிக் செய்யும் திறன் கொண்டது மற்றும் பணம் செலுத்துவதை ரகசியமாக அங்கீகரிக்க SMS இலிருந்து OTP களையும் அணுகக் கூடியது என்பது தான் பெரிய சிக்கலாக இருக்கிறது. பயனர்களின் பணத்தை சூறையாட இந்த ஜோக்கர் மால்வேர் உதவுவதால், இது ஆபத்தான மால்வேர் ஆப்ஸாக கருதப்படுகிறது. பேங்க் ஸ்டேட்மென்ட்களைச் சரிபார்க்கும் போது மட்டுமே, ஆன்லைனில் சில சேவைகளுக்குக்கான சந்தாவை ஜோக்கர் மால்வேர் பெற்றிருப்பதைப் பயனர்கள் அறிய முடியும்.

LPG சிலிண்டர் மானியம் மீண்டும் கிடைக்கிறதா? யாருக்கெல்லாம் இது கிடைக்கும்? யாரெல்லாம் பயனடையலாம்?LPG சிலிண்டர் மானியம் மீண்டும் கிடைக்கிறதா? யாருக்கெல்லாம் இது கிடைக்கும்? யாரெல்லாம் பயனடையலாம்?

இந்த 15 ஆப்ஸ்களை உடனடியாக டெலீட் செய்யவும்

இந்த 15 ஆப்ஸ்களை உடனடியாக டெலீட் செய்யவும்

சமீபத்தில் கூகிள் பிளே ஸ்டோரில் இருந்து கண்டறியப்பட்ட ஜோக்கர் மால்வேர் ஆப்ஸ்களை உங்களுக்காகக் கீழே கொடுத்துள்ளோம். இந்த ஜோக்கர் மால்வேர் தொற்றைத் தடுக்க உங்கள் ஆண்ட்ராய்டு ஃபோன்களில் இருந்து இந்த 15 ஆப்ஸ்களை உடனடியாக டெலீட் செய்யும்படி கூகிள் நிறுவனம் வலியுறுத்தியுள்ளது. ஜோக்கர் மால்வேர் மூலம் பாதிக்கப்பட்ட ஆப்ஸ்களின் பட்டியல்.

 • ஈஸி PDF ஸ்கேனர் (Easy PDF Scanner)
 • நௌவ் QRCode ஸ்கேன் (Now QRCode Scan)
 • சூப்பர் கிளிக் VPN (Super-Click VPN)
 • இந்த ஆப்ஸ் எல்லாம் உங்கள் போனில் உள்ளதா?

  இந்த ஆப்ஸ் எல்லாம் உங்கள் போனில் உள்ளதா?

  • வால்யூம் பூஸ்டர் லோவ்டர் சவுண்ட் ஈக்குவலைசர் (Volume Booster Louder Sound Equalizer)
  • பேட்டரி சார்ஜிங் அனிமேஷன் பப்பில் எபக்ட்ஸ் (Battery Charging Animation Bubble Effects)
  • ஸ்மார்ட் டிவி ரிமோட் (Smart TV Remote)
  • வால்யூம் பூஸ்ட்டிங் ஹியரிங் எயிட் (Volume Boosting Hearing Aid)
  • ஃப்ளாஷ்லைட் ஃப்ளாஷ் அலெர்ட் ஆன் கால் (Flashlight Flash Alert on Call)
  • ஹாலோவீன் கலரிங் (Halloween Coloring)
  • ஏர்டெல் வாடிக்கையாளர்களுக்கு இடியாய் விழுந்த செய்தி: கட்டணம் அதிரடியாக உயர்வு.!ஏர்டெல் வாடிக்கையாளர்களுக்கு இடியாய் விழுந்த செய்தி: கட்டணம் அதிரடியாக உயர்வு.!

   உடனே இந்த ஆப்ஸை டெலீட் செய்யுங்கள்

   உடனே இந்த ஆப்ஸை டெலீட் செய்யுங்கள்

   • கிளாசிக் ஈமோஜி கீபோர்டு (Classic Emoji Keyboard)
   • சூப்பர் ஹீரோ எஃபெக்ட் (Super Hero-Effect)
   • டாஸ்லிங் கீபோர்டு (Dazzling Keyboard)
   • இமோஜி ஒன் கீபோர்டு (EmojiOne Keyboard)
   • பேட்டரி சார்ஜிங் அனிமேஷன் வால்பேப்பர் (Battery Charging Animation Wallpaper)
   • பிளெண்டர் போட்டோ எடிட்டர் ஈஸி போட்டோ பேக் கிரௌண்ட் எடிட்டர் (Blender Photo Editor-Easy Photo Background Editor)
   • பாதுகாப்பாக இருக்க இது மட்டுமே வழி

    பாதுகாப்பாக இருக்க இது மட்டுமே வழி

    இந்த 15 ஆண்ட்ராய்டு ஆப்ஸ்களும் ஆபத்தான ஜோக்கர் மால்வேர் மூலம் பாதிக்கப்பட்டுள்ளது என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. ஆகையால், இந்த 15 மால்வேர் பாதிக்கப்பட்ட ஆப்ஸ்களை உடனே உங்கள் ஸ்மார்ட்போனில் இருந்து டெலீட் செய்து பாதுகாப்பாக இருங்கள் என்று கூகிள் நிறுவனம் தெரிவித்துள்ளது.

Most Read Articles
Best Mobiles in India

English summary
Joker Malware Is Back Again Delete These 15 Apps From Your Android Smartphones Immediately : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X