Home
News

சொன்ன மாதிரியே நடந்துருச்சு.. Tamilrockers ஆக மாறிய Twitter! இனி தடுக்கவே முடியாது!

டெலிகிராம் (Telegram), யூடியூப் (YouTube) ஆப்ஸ்களில் முழு படங்கள் கிடைப்பதை போல ட்விட்டரில் (Twitter) எலான் மஸ்க் (Elon Musk) கொண்டுவந்த அதிரடி அப்டேட் திருட்டுத்தனமாக புதுப்புது திரைப்படங்கள் அப்லோட் செய்யப்படுவதை ஊக்குவித்துவிட்டது. இப்போது, பிரபல ஹாலிவுட் படம் எச்டி பிரிண்ட்டில் வெளியாகியிருக்கிறது.

இதுகுறித்த விவரங்களை இங்கே தெரிந்துகொள்ளுங்கள். ட்விட்டர் நிறுவனத்தை வாங்கிய உடனேயே எலான் மஸ்க், ஊழியர்களை பணிநீக்கம் செய்தல், ப்ளூ டிக் யூசர்களுக்கு கட்டணம் விதித்தல் உள்ளிட்ட சில அதிரடி முடிவுகளை எடுத்தார். இந்த முடிவுகள் காரணமாக ட்விட்டர் யூசர்கள் அதிருப்தி அடைந்தனர். ஏன், பல்லாயிரக்கணக்கான ப்ளூ டிக் யூசர்கள் தங்களது சந்தாவை ரத்தே செய்துவிட்டனர்.

Tamilrockers ஆக மாறிய Twitter! லீக்கான John Wick 4

அதேபோல யூசர்களின் எண்ணிக்கையும் படிப்படியாக சரிந்துவந்தது. இந்த நிலைமையை சரி செய்ய எலான் மஸ்க், யூசர்களை தட்டித்தூக்கும் வகையில் அசத்தலான அப்டேட்களை அறிவித்து வருகிறார். அந்த வரிசையில், புதிய ட்விட்டர் சிஇஓ நியமனம், ஆடியோ மற்றும் வீடியோ காலிங் வசதி, ப்ளூ டிக் யூசர்கள் 2 மணி நேர வீடியோவை அப்லோட் செய்யும் வசதி ஆகியவை மிகப்பெரும் வரவேற்பை பெற்றன.

ஆனால், 2 மணி நேர வீடியோவை அப்லோட் செய்யும் வசதியானது, டெலிகிராம் (Telegram), யூடியூப் (YouTube) மற்றும் பேஸ்புக் (Facebook) ஆப்ஸ்களுக்கு ஆப்பு வைக்கும்படி இருப்பது மட்டுமல்லால், தமிழ் ராக்கர்ஸ் (Tamilrockers) போன்று புதுப்புது படங்களை அப்லோட் செய்வதையும் ஊக்குவிக்கும் என்று எதிர்ப்புகள் கிளம்பின. இருப்பினும், எலான் மஸ்க் கண்டுகொள்ளவில்லை.

முதலில், ட்விட்டரில் 2 நிமிடம் 20 நொடிகள் நீளம் கொண்ட வீடியோக்களை மட்டுமே அப்லோட் செய்ய முடிந்த நிலையில், இந்த அப்டேட் மூலம் ஒரு முழு படத்தையே ட்விட்டரில் அப்லோட் செய்ய முடிகிறது. அதுவும் 8 ஜிபி வரையில் அப்லோட் லிமிட் கொடுக்கப்பட்டுள்ளதால் எச்டி (HD) படங்களையே அப்லோட் செய்ய ஊக்குவித்துள்ளது. இந்த அப்டேட் வந்த அன்றே பல ப்ளூ டிக் யூசர்கள் ஈவில் டெட் ரைஸ் (Evil Dead Rise) திரைப்படத்தை அப்லோட் செய்து ட்விட்டரில் பகிர்ந்துவந்தனர்.

இப்போது பிரபல ஹாலிவுட் படமான ஜான் விக் 4 ( John Wick 4) ட்விட்டரில் வெளியிடப்பட்டுள்ளது. அதுவும் எச்டி பிரிண்ட்டில் வெளியிடப்பட்டுள்ளது. ஜான் விக் 4 படம் மார்ச் 24ஆம் தேதி வெளியாகி உலகம் முழுவதும் சக்கை போடுபோட்டது. வசூலையும் வாரிக்குவித்தது. இந்தியாவிலும் ஜான் விக் 4 படத்துக்கு மிகப்பெரும் வரவேற்பு கொடுக்கப்பட்டது. இந்த படம் ஓஓடியில் வெளியாகும் வேளையில் ட்விட்டரில் முழு படமும் அப்லோட் செய்யப்பட்டுள்ளது.

வெளியான 10 மணி நேரத்திற்குள் 26 லட்சம் பேர் அந்த படத்தை ட்விட்டரிலேயே பார்த்துள்ளனர். 8 ஆயிரத்திற்கும் மேற்பட்ட யூசர்சர்கள் அந்த வீடியோவை ரீட்வீட் செய்துள்ளனர். சொல்லப்போனால், இந்த படம் ஜூன் 23ஆம் தேதியே ஓஓடியில் வெளியாக இருந்த நேரத்தில் ட்விட்டரில் வெளியிடப்பட்டுள்ளது.

இந்த செய்தி அந்த படக்குழுவை மிகப்பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது. மேலும் தொழில்நுட்பம், விண்வெளி மற்றும் அறிவியல் தொடர்பான இன்னும் கூடுதல் சுவாரசியமான செய்திகள் பற்றி அறிந்துகொள்ள எங்கள் கிஸ்பாட் சேனல் உடன் இணைந்திருங்கள். உங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.

More from GizBot

Best Mobiles in India

English summary
John Wick 4 leaked on Twitter in high resolution after Elon Musk allows subscriber to upload 2 hour long videos
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X