வீட்டிலிருந்து வேலை.. கைநிறைய சம்பளம்.. பெண்ணுக்கு வந்த SMS.. வாழக்கையில் மறக்கவே முடியாத படி செஞ்சுட்டாங்க..
ஸ்மார்ட்போன் (smartphone), மொபைல் (mobile), லேப்டாப் (laptop), டெஸ்க்டாப் (desktop) போன்ற சாதனங்களில் இணைய வழியில் வேலை தேடும் நபர்களில் நீங்களும் ஒருவர் என்றால், கட்டாயமாக இந்த பதிவை முழுமையாக படிக்க வேண்டும் மக்களே. இணையம் மூலம் வேலைவாய்ப்பு தேடுவோரின் (job vacancies) எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகமாகிக்கொண்டே இருக்கிறது. இதை மோசடி (spammers) செய்பவர்கள் மற்றும் ஹேக்கர்கள் (hackers) தங்களுக்கு சத்தமாக மாற்றிக்கொண்டு, மக்களிடம் இருந்து பணத்தை திருடி வருகிறார்கள். இப்படி வேலை தேடாத ஒரு பெண்ணை நூதனமான முறையில் ஒரு கும்பல் ஏமாற்றி 2 லட்சம் வரை திருடியுள்ளது.
தினமும் பல லட்சம் மக்கள் புதிய வேலைவாய்ப்பு தேடியும், பணிபுரிந்து வரும் நிறுவனத்தில் இருந்து அடுத்த நிலைக்கு செல்ல வேண்டும் என்ற காரணத்திற்காகவும் புது புது வேலைவாய்ப்பு தகவல்களை இணைய வழி மூலம் தேடுகிறார்கள் என்று கணக்கெடுப்பு விபரங்கள் காண்பிக்கிறது. குறிப்பாக, வீட்டில் இருந்து வேலை (work from home jobs) அல்லது ரிமோட் ஜாப்ஸ் (remote jobs) என்ற பிரிவுகளின் கீழ் உள்ள வேலைகளையே மக்கள் அதிகமாக தேடுகிறார்கள் என்று கூறப்படுகிறது.

வீட்டிலிருந்து வேலை.. கைநிறைய சம்பளம்.. நேரடியா இன்டெர்வியூ.. பெண்ணுக்கு வந்த SMS:
கடந்த காலத்தில் வீட்டில் இருந்து வேலை, கைநிறைய சம்பளம் (massive salary job) என்று ஆசை வார்த்தைகளை கூறி பொதுமக்களை மோசடிக்காரர்கள் ஏமாற்றி, அவர்களின் வங்கி கணக்குகளில் இருந்து பணத்தை திருடி வந்தனர். இப்போது இந்த செயல்முறைக்கு அப்பால் சென்று, ஒரு மோசடி கும்பல் புது விதமான நூதன முறை மோசடியை நடத்தி வருவது கண்டறியப்பட்டுள்ளது. சமீபத்தில் மங்களூருவை சேர்ந்த பெண் இந்த மோசடிக்கு இறையாகியுள்ளார்.
மெங்களுரூவில் உள்ள ஒரு வங்கியில் மேலாளராக பணியாற்றி வரும் 38 வயதுடைய வசுதா கோபாலகிருஷ்ண ஷெனாய் என்ற பெண் தான் மோசடி செய்யப்பட்டிருக்கிறார். இவர் மொபைல் எண்ணிற்கு (mobile number) வந்த ஒரு சாதாரண SMS இல் இருந்த செய்தியை படித்துவிட்டு, அதில் இருந்து ஜாப் இன்டெர்வியூ (job interview) டீடைல்ஸ் என்று குறிப்பிடப்பட்ட லிங்க்-கை கிளிக் செய்ததும், அவருடைய ஸ்மார்ட்போன் (smartphone) ஹேக்கர்களின் (hackers) கட்டுப்பாட்டிற்கு சென்றுள்ளது.
ஒரு நொடியில் எல்லாமே மாறிடுச்சு.. வாழக்கையில் மறக்கவே முடியாத படி செஞ்சுட்டாங்க:
அது ஒரு தீங்கிழைக்கும் மோசடிக்கான டைரக்ட் லிங்க் (malicious scam link) என்பதை அறியாமல், அந்த பெண் லிங்க்-கை கிளிக் செய்த மறுநொடி, அவருடைய ஸ்மார்ட்போன் தகவல்கள், ஜிமெயில் (Gmail) விபரங்கள் மற்றும் அமேசான் பிரைம் (Amazon prime) விபரங்கள் முதற்கொண்டு அணைத்து தகவல்களும் ஹேக்கர்களின் கட்டுப்பாட்டிற்கு சென்றுள்ளது. அவருடைய மெயில் மற்றும் அமேசான் கணக்கில் இருந்து அவருடைய அங்கீகாரம் நீக்கப்பட்டிருக்கிறது.
அடுத்த சில மணி நேரத்தில் அவருடைய மொபைல் எண்ணிற்கு தொடர்ச்சியாக பல SMS-கள் வந்து குவிந்துள்ளது. அதில் வருடைய வங்கி கணக்கு (bank account), அமேசான் தளத்தில் சேமித்து வைக்கப்பட்டிருந்த கிரேடு கார்டு விபரங்கள் (credit card details) மூலம் மேற்கொள்ளப்பட்ட பரிவர்த்தனை என்று மொத்தம் ரூ. 2,19,500 மதிப்பிலான பணம் பரிவர்த்தனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது என்று மெசேஜ்ஜில் தகவலை அந்த பெண் பெற்றிருக்கிறார்.
பொதுமக்களுக்கு காவல்துறை கொடுத்த எச்சரிக்கை:
பதற்றம் அடைந்த வசுதா கோபாலகிருஷ்ண ஷெனாய் தனது ஸ்மார்ட்போன் ஹேக் செய்யப்பட்டுள்ளதை உணர்ந்து, அருகில் இருக்கும் காவல் நிலையத்தில் புகார் அளித்து, வழக்கு பதிவு செய்திருக்கிறார். அவர் பதிவு செய்த புகாரின் பெயரில் தற்போது விசாரணை நடந்து வருகிறது. Job Interview details என்ற வார்த்தைக்கு பின்னணியில் ஹேக்கர்கள் அவர்களுடைய தீங்கிழைக்கும் லிங்கை இன்டெர்லின்க் (malicious link interlinked to job interview words alert) செய்துள்ளது முதற்கட்ட விசாரணையில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இத்தகைய சிக்கல்களின் சிக்காமல் இருக்க வேண்டுமென்றால், தெரியாத எண்களில் இருந்து வரும் மெசேஜ்களை (message) ஓபன் செய்யாதீர்கள். வங்கி லோன், ஜாக்பாட் பரிசு, இலவசம், வேலை வாய்ப்பு, கைநிறைய சம்பளம் என்று என்ன ஆசை வார்த்தைகளில் மெசேஜ் அல்லது மெயில் (mail) என்று எது வந்தாலும் அவற்றை திறக்காதீர்கள். அதனுடன் இருக்கும் லிங்க்-கை (link) கிளிக் செய்யதீர்கள் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications








