ஜியோ வேற லெவல்: இனி டிவி மூலம் வீடியோ கால்., செட்ஆப் பாக்ஸில் கேமரா., மலிவு விலையில் அறிமுகம்
ஜியோ திட்டங்கள் அறிக்கப்பட்ட போது தெளிவு இல்லாத விஷயங்களில் ஒன்று, பயனர்கள் டிடிஎச் அல்லது கேபிள் டிவி இணைப்புக்கு கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. இருப்பினும் வாடிக்கையாளர்கள் கூடுதல் டேட்டா செலவில் வழக்கமான தரவுத் திட்டங்களுடன் தொலைக்காட்சி சேவைகளையும் அனுபவிக்க முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. மேலும் மாதாந்திர பில்லிங் துவங்கியதும், நேரடி சேனல்களை பார்ப்பதற்காக செட்-டாப் பாக்ஸ்களை வழங்கப்படும் என தகவல் பரவியது.

ஜியோ ஃபைபர் செட்-டாப் பாக்ஸ்
ஜியோ ஃபைபர் செட்-டாப் பாக்ஸ் ஆனது ஆண்ட்ராய்டு அடிப்படையிலான ஸ்ட்ரீமிங் பிளேயர். இதனுடன் HDMI இணைப்பைப் பயன்படுத்தி டிவிகளுடன் இணைக்க முடியும். இது ப்ளூடூத் அடிப்படையிலான ரிமோட் கண்ட்ரோல் வழங்கப்படுகிறது. செயல்பாடோடு இருக்கும் இன்டெர்நெட் இணைப்புடன் சேனல்களை ஸ்டிரீமிங் செய்யவேண்டும். அதோடு இது ஆண்ட்ராய்டு 7.0 மூலம் இயக்கப்படுகிறது.

Myjio ஆப் மூலமாக திட்டம் தேர்ந்தெடுக்கலாம்
Myjio ஆப் வழியாக ஜியோ பைபர் திட்டத்தை தேர்வு செய்யவும், காலாண்டு மற்றும் வருடாந்திர திட்டத்தையும் தேர்வு செய்யலாம். இதில் தேர்ந்தெடுக்கப்பட்ட கட்டணத்தை செலுத்தி சேவையை பயன்படுத்தலாம். அல்லது ஜியோ பைபர் பெறுவதற்கு அருகில் உள்ள செட்ஆப் பாக்ஸ் டீலர்களை அணுகலாம். வழிமுறைகள் பின்பற்றி அல்லது ஜியோ தொழில்நுட்ப வல்லுநர் உதவியோடு பைபர் இன்ஸ்டால் செய்யலாம்.

ஜியோடிவி கேமரா
ஜயோ பைபர் பயனர்களுக்கு தற்போது ஜியோடிவி கேமரா என்ற நுட்பம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இது வாடிக்கையாளர்கள் மத்தியில் அது என்ன ஜியோடிவி கேமரா என கேள்வி எழத் தொடங்கியுள்ளது. அனைத்திலும் புதுமையை யோசித்து அறிமுகப்படுத்தும் ஜியோ, தற்போது இதிலும் புதிய முறையை அறிமுகம் செய்துள்ளது.

புதிய தொழில்நுட்பம் அறிமுகம்
ஜியோ டிவி கேமரா என்ற புதிய தொழில்நுட்பத்தை அறிமுகம் செய்துள்ளது, இதன் விலையானது ரூ.2,999 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது ஆர்டர் செய்த மூன்று வேலை நாட்களில் டெலிவரி செய்யப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இதற்கு 1 வருடம் வேரண்டியும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி 24 மாதம் இஎம்ஐ முறையிலும் வழங்கப்படுகிறது.

ஜியோ கஸ்டமர் கேருடன் வீடியோ கால்
ஜியோவின் இந்த முறையானது முதற்கட்டமாக ஜியோ கஸ்டமர் கேருடன் வீடியோ கால் மேற்கொள்வதற்கு பயன்படும். அதுமட்டுமின்றி இதற்கான அடுத்தக்கட்ட பணி நடைபெற்று வருகிறது. இந்த பணி நிறைவுபெற்றால், அனைத்து ஜியோ நம்பருக்கும் வீடியோ, ஆடியோ கால் செய்யலாம் என தெரிவிக்கப்படுகிறது.

ஜியோ பைபர் வீடியோ கால்ஸ்
ஜியோ.காம்-ல் இந்த ஜியோ டிவி கேமராவை வாங்கலாம். இந்த ஜியோ பைபர் வீடியோ கால்ஸ் தொழில்நுட்பம், இந்த தொழில்நுட்பம் டிவியோடு கனெக்ட் செய்யப்பட்டு வீடியோ கால் மேற்கொள்ளலாம் என அறிவிக்கப்படுகிறது. ஜியோ கேமரா செட் அப் பாக்ஸ் மூலம் இந்த வீடியோ கால் அழைப்பு மேற்கொள்ளப்படுகிறது.

ஜியோ கால் பயன்பாட்டில் லேண்ட்லைன்
அதேபோல் இந்த JioTVCamera இன் USB ஐ Jio Set-Top Box உடன் இணைத்துக்கொள்ளலாம். பிறகு, STB ஐ மீண்டும் துவக்கி, ஜியோ கால் பயன்பாட்டில் லேண்ட்லைன் எண்ணை அமைக்கவும். நீங்கள் ஏற்கனவே ஜியோகால் பயன்பாட்டை அமைத்திருந்தால், STB ஐ மீண்டும் துவக்கி, செட்ஆப் பாக்ஸ் முன்பே நிறுவப்பட்டுள் ஜியோகால் பயன்பாட்டை ஓபன் செய்து பயன்படுத்தலாம் என கூறப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications








