ஆண்டவரே அம்பானி.. வெறும் ரூ.15 முதல் JioStar திட்டங்கள்.. SD, HD-னு மொத்தம் 15 பேக்குகள்.. இதோ முழு லிஸ்ட்!
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் (Reliance Industries) மற்றும் தி வால்ட் டிஸ்னி (The Walt Disney) ஆகிய 2 நிறுவனங்களின் கூட்டணியில் உருவான ஜியோ ஸ்டார் (JioStar) சேவையின் கீழ் என்னென்ன திட்டங்கள் கிடைக்கும்? அவைகளின் விலை நிர்ணயம் என்ன? என்கிற முழு பட்டியலும் வெளியிடப்பட்டு உள்ளது.
லைவ் (Live) ஆகியுள்ள, அதாவது நேரலைக்கு வந்து உள்ள ஜியோஸ்டார்.காம் வலைத்தளத்தில் (JioStar.com Website) இதுவரை எந்த விதமான ஸ்ட்ரீமிங் கன்டென்ட்கள் இல்லை என்றாலும் கூட, ஜியோஸ்டார் சேவையின் கீழ் வரும் சேனல் சந்தா பேக்குகள் (Channel Subscriptions Packs) ஆனது வாடிக்கையாளர்களின் ஆர்வத்தை தூண்டியுள்ளது.

இதன் கீழ் 10 எஸ்டி திட்டங்கள், அதாவது ஸ்டாண்டர்ட் டெஃபினிஷன் பிளான்கள் (Standard Definition Plans) மற்றும் 5 எச்டி திட்டங்கள், அதாவது ஹை டெஃபினிஷன் பிளான்கள் (High-Definition Plans) என மொத்தம் 15 திட்டங்கள் உள்ளன. மேலும் அனைத்து திட்டங்களும் மிகவும் மலிவான விலையில் பார்வையாளர்களின் தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன.
இந்த திட்டங்களின் விலை எவ்வளவு மலிவாக உள்ளதென்றால், மாதத்திற்கு ரூ.15 முதல் தொடங்குகிறது மற்றும் அதிகபட்சமாக ரூ.125 வரை செல்கிறது. இந்த திட்டங்கள் பிராந்திய மொழி கன்டென்ட்டை வழங்குகின்றன. மேலும் இந்தியா முழுவதும் உள்ள அனைவருக்கும் கிடைக்கும்படியான பொதுவான திட்டங்களாக உள்ளன.
ஸ்டாண்டர்ட் டெஃபினிஷன் பிளான்களின் விலை விவரங்கள்:
1. டிஸ்னி கிட்ஸ் பேக்: ரூ.15 / மாதம்
2. டிஸ்னி ஹங்காமா கிட்ஸ் பேக்: ரூ.15 / மாதம்
3. ஸ்டார் வேல்யூ பேக் ஹிந்தி: ரூ.59 /மாதம்
4. ஸ்டார் பிரீமியம் பேக் இந்தி: ரூ.105 / மாதம்
5. ஸ்டார் வேல்யூ பேக் மராத்தி ஹிந்தி: ரூ.67 / மாதம்
6. ஸ்டார் பிரீமியம் பேக் மராத்தி ஹிந்தி: ரூ.110 / மாதம்
7. ஸ்டார் வேல்யூ பெங்காலி ஹிந்தி: ரூ.65 / மாதம்
8. ஸ்டார் பிரீமியம் பேக் பெங்காலி ஹிந்தி: ரூ 110 / மாதம்
9. ஸ்டார் வேல்யூ பேக் ஒடியா ஹிந்தி மினி: ரூ 15 / மாதம்
10. ஸ்டார் வேல்யூ பேக் கன்னடா ஹிந்தி மினி: ரூ 45 / மாதம்
ஹை டெஃபினிஷன் பிளான்களின் விலை விவரங்கள்:
11. டிஸ்னி கிட்ஸ் பேக் HD: ரூ.18 / மாதம்
12. டிஸ்னி ஹங்காமா கிட்ஸ் பேக் எச்டி: ரூ 18 / மாதம்
13. ஸ்டார் வேல்யூ பேக் லைட் எச்டி இந்தி: ரூ.88 / மாதம்
14. ஸ்டார் பிரீமியம் பேக் லைட் எச்டி: ரூ.125 / மாதம்
15. ஸ்டார் வேல்யூ பேக் மராத்தி லைட் இந்தி எச்டி: ரூ.99 / மாதம்
இந்த திட்டங்கள் பல மொழிகளில் உள்ள, பல்வேறு கன்டென்ட்களுக்கான அணுகலை மிகவும் மலிவு விலையில் வழங்குவதை நோக்கமாக கொண்டுள்ளன. பயனர்கள் தங்கள் பட்ஜெட்டுக்கு ஏற்ற விலையில் பலவிதமான நிகழ்ச்சிகள், திரைப்படங்கள் மற்றும் குழந்தைகளுக்கான நிகழ்ச்சிகளை பார்க்க முடியம். இது இல்லாமல் மேலும் பல கூடுதல் கன்டென்ட்கள் ஜியோஸ்டார் சேவைக்குள் வரவுள்ளன; இப்படியாக ஜியோஸ்டார் இந்திய பொழுதுபோக்கு துறையின் ஒரு முக்கியமான சேவையாக மாற உள்ளது.


Click it and Unblock the Notifications