Home
News

தலைவன் செஞ்சுட்டான்.. ரூ.15 முதல் Jiostar திட்டங்கள்? எந்த திட்டத்திற்கு என்ன நன்மை? SD வேணுமா? HD வேணுமா?

முகேஷ் அம்பானிக்கு (Mukesh Ambani) சொந்தமான ரிலையன்ஸ் ஜியா (Reliance Jio) நிறுவனம் வால்ட் டிஸ்னி (Walt Disney) உடன் இணைத்து புதிய பொழுதுபோக்கு தளத்தை உருவாக்கியுள்ளது. இந்த புதிய தளத்தை முகேஷ் அம்பானி ஜியோஸ்டார் (JioStar) என்று பெயரிட்டுள்ளார். இந்த புதிய ஜியோஸ்டார்.காம் (Jiostar.com) என்ற தளத்தை ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிமுகம் செய்து, அதன் திட்டங்களின் விலை விபரங்களை அறிவித்துள்ளது. ஜியோஸ்டார் தளத்தில் எந்த திட்டம்? என்ன விலையில்? பயன்படுத்த கிடைக்கிறது என்று பார்க்கலாம்.

ஓடிடி (OTT) ஸ்ட்ரீமிங் தளத்தில் இரண்டு முன்னணி நிறுவனங்கள் இப்போது ஒன்றிணைந்து, புதிய சேவையை துவங்கியுள்ளது. ஜியோசினிமா (Jio Cinema) மற்றும் ஜியோ ஹாட்ஸ்டார் (Jio Hotstar) ஆகிய இரண்டு OTT தளங்களை நிறுவனம் இணைத்து, Jiostar.com என்ற தளத்தை அறிமுகம் செய்துள்ளது. இணைப்பைத் தொடர்ந்து, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் Jiostar.com இல் குறிப்பிடத்தக்க 46.82% பங்குகளை வைத்திருக்கிறது.

தலைவன் செஞ்சுட்டான்.. ரூ.15 முதல் Jiostar திட்டங்கள்? SD, HD எது?

அதே நேரத்தில் Hotstar 36.84% பங்குகளை பராமரிக்கிறது, மேலும் Viacom18 மீதமுள்ள 16.34% பங்குகளை வைத்திருக்கிறது. இந்த ஒருங்கிணைப்பு அனைத்து ஹாட்ஸ்டார் உள்ளடக்கத்தையும் Jiostar.com இல் அணுகுவதை உறுதி செய்கிறது. மேலும் நிறுவனம் புதிய தளத்தில் பல்வேறு பொழுதுபோக்கு தொகுப்புகளை அறிமுகப்படுத்தியுள்ளது. புதிய ஜியோஸ்டார் பேக்குகள் இரண்டு வகைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன.

இதில் ஸ்டாண்டர்ட் டெபினிஷன் (Standard Definition - SD) மற்றும் ஹை டெபினிஷன் (High definition - HD) என்று இரண்டு பிரிவுகளில் ரூ.15 முதல் விலை துவங்குகிறது. முதலில் ஸ்டாண்டர்ட் டெபினிஷன் (SD) திட்டங்களின் விலையை பார்க்கலாம்.

ஸ்டாண்டர்ட் டெபினிஷன் (SD) உள்ளடக்கத்திற்கு, இந்தி (Hindi), மராத்தி (Marathi), ஒடியா (Odia), பெங்காலி (Bengali), தெலுங்கு (Telugu), கன்னடம் (Kannada) மற்றும் கிட்ஸ் பேக்குகளின் (Kids packs) தொகுப்பு இதோ:

1. ஹிந்தி பேக்:
- ஸ்டார் வேல்யூ பேக் ஹிந்தி: மாதம் ரூ 59
- ஸ்டார் பிரீமியம் பேக் ஹிந்தி: மாதம் ரூ.105

2. மராத்தி பேக்:
- ஸ்டார் வேல்யூ பேக் மராத்தி: மாதம் ரூ 67
- ஸ்டார் பிரீமியம் பேக் மராத்தி: மாதம் ரூ 110

3. ஒடியா பேக்:
- ஸ்டார் வேல்யூ பேக் ஒடியா மினி: மாதம் ரூ.15
- ஸ்டார் வேல்யூ பேக் ஒடியா: மாதம் ரூ 65
- ஸ்டார் பிரீமியம் பேக் ஒடியா: மாதம் ரூ 105

4. பெங்காலி பேக்:
- ஸ்டார் வேல்யூ பெங்காலி: மாதம் ரூ 65
- ஸ்டார் பிரீமியம் பெங்காலி: மாதம் ரூ 110

5. தெலுங்கு பேக்:
- ஸ்டார் வேல்யூ பேக் தெலுங்கு: மாதம் ரூ 81
- ஸ்டார் வேல்யூ பேக் ஹிந்தி தெலுங்கு: மாதம் ரூ 81
- ஸ்டார் வேல்யூ பேக் தெலுங்கு மினி: மாதம் ரூ.70

7. கன்னட பேக்:
- ஸ்டார் வேல்யூ பேக் கன்னட மினி: மாதம் ரூ 45
- ஸ்டார் வேல்யூ பேக் கன்னடம்: மாதம் ரூ 67
- ஸ்டார் வேல்யூ பேக் இந்தி கன்னடம்: மாதம் ரூ.67

8. கிட்ஸ் பேக்:
- டிஸ்னி கிட்ஸ் பேக்: மாதம் ரூ.15
- டிஸ்னி ஹங்காமா கிட்ஸ் பேக்: மாதம் ரூ.15

9. தமிழ் பேக்:
- ஸ்டார் தமிழ் வேல்யூ பேக்: மாதம் ரூ. 45
- ஸ்டார் பிரீமியம் பேக் தமிழ்: மாதம் ரூ. 105

ஹை டெபினிஷன் (HD) உள்ளடக்கத்திற்கு, சலுகைகள் பின்வருமாறு:
10. ஹிந்தி:
- ஸ்டார் வேல்யூ பேக் லைட் எச்டி: மாதம் ரூ 88
- ஸ்டார் பிரீமியம் பேக் லைட் HD: மாதம் ரூ.125

11. தமிழ் பேக் (HD):
- ஸ்டார் வேல்யூ பேக் எச்டி தமிழ்: மாதம் ரூ 77
- ஸ்டார் பிரீமியம் பேக் HD தமிழ்: மாதம் ரூ.113

12. கிட்ஸ் பேக்:
- டிஸ்னி கிட்ஸ் பேக் HD: மாதம் ரூ.18
- டிஸ்னி ஹங்காமா கிட்ஸ் பேக் HD: மாதம் ரூ.18

13. மராத்தி:
- ஸ்டார் வேல்யூ பேக் மராத்தி லைட் எச்டி: மாதம் ரூ 99

விரைவில் இன்னும் சில பிற மொழி திட்டங்கள் விரைவில் அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Best Mobiles in India

English summary
JioStar Launched In India Check All New JioStar Pack SD and HD Price Details and List
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X